மரியோ பலோட்டெலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரியோ பலோட்டெலி
Mario Balotelli Euro 2012 vs England 02.JPG
சுய விவரம்
முழுப்பெயர்மரியோ பர்வூயா பலோட்டெலி[1]
பிறந்த தேதி12 ஆகத்து 1990 (1990-08-12) (அகவை 32)[2]
பிறந்த இடம்பாலெர்மோ, இத்தாலி
உயரம்1.89 m (6 ft 2 in)[3]
ஆடும் நிலைமுன்னணி உதைப்பாளர் [2]
கழக விவரம்
தற்போதைய கழகம்மான்செஸ்டர் சிடி
எண்45
இளநிலை வாழ்வழி
2001–2005லூமெசான்
2006–2007மிலன் இன்டர்நேசனல்
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்அணிதோற்.(கோல்)
2005–2006லூமெசான்2(0)
2007–2010மிலன் இன்டர்நேசனல்59(20)
2010–மான்செஸ்டர் சிடி40(19)
தேசிய அணி
2008–2010இத்தாலி 21 அகவை
கீழானோர் அணி
16(6)
2010–இத்தாலி தேசிய அணி14(4)
* இங்கு உள்ளூர் சுற்றுப் போட்டிகளுக்காக முதுநிலை அணிகளுக்காக விளையாடிவை மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன. 13 மே 2012.
அன்று தரவுகள் சேகரிக்கப்பட்டது.

† தோற்றங்கள் (கோல்கள்).

‡ தேசிய அணிக்காக விளையாடிய தரவுகள் 19:00, 1 சூலை 2012 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.

மரியோ பர்வூயா பலோட்டெலி (Mario Barwuah Balotelli, பிறப்பு: ஆகத்து 12, 1990) இத்தாலியைச் சேர்ந்த காற்பந்தாட்ட விளையாட்டு வீரர். பலோட்டெலி மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் கழக அணியிலும் இத்தாலிய தேசிய அணியிலும் முன்னால் நின்று தாக்கி ஆடும் காற்பந்தாட்டளராக உள்ளார்.[4][5]

பலோட்டெலி தனது காற்பந்தாட்ட வாழ்வை ஏ.சி. லூமெசான் அணியில் துவங்கினார். முன்னதாக பார்செலோனா காற்பந்தாட்டக் கழகத்தில் விளையாட எடுத்த முயற்சிகள் தோல்வியுற்றன.[6] பின்னர் 2007ஆம் ஆண்டில் மிலன் இன்டர்நேசனியனோல் கழகத்தில் சேர்ந்தார். அங்கு அணியின் பயிற்சியாளருடன் பிணக்குகளுடனான உறவு இருந்தது. பல ஒழுங்குமுறைச் சிக்கல்களுக்குப் பிறகு சனவரி 2009இல் இன்டர் மிலன் முதலாம் அணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இத்தாலியத் தொலைக்காட்சி ஒன்றில் ஏ.சி.மிலன் சீருடையுடன் தோன்றியதால் மார்ச் 2010இல் இன்டர் மிலன் இரசிகர்கள் மிகவும் கொதிப்படைந்தனர். இதனால் இவரது விளையாட்டு வாழ்வு இன்டர் மிலன் அணியில் முடிந்தது என்ற நிலையில் தொடர்ந்து இன்டருக்கு ஆடி வந்தார். முன்னாள் பயிற்சியாளர் ராபர்டோ மொன்சினி இவருக்கு புதுவாழ்வு கொடுக்கும் வகையில் மான்செஸ்டர் சிட்டி கழக அணியில் ஆகத்து 2010இல் சேர்த்துக் கொண்டார். இங்கும் இவரது ஆட்டமும் விளையாட்டு மைதானத்திற்கு வெளியேயான நடத்தையும் குறிப்பிடக்கூடியதாக இல்லை.

கானாவைச் சேர்ந்த பலோட்டெலி, இத்தாலியின் தேசிய அணியில் ஆகத்து 10, 2010இல் இணைந்தார். இத்தாலிய தேசிய காற்பந்தாட்ட அணியில் விளையாடும் முதல் கருப்பினத்தவர்களில் ஒருவராக உள்ளார்.

மேற்கோள்களும் குறிப்புக்களும்[தொகு]

  1. "Mario Balotelli". Goal.com. 3 செப்டம்பர் 2011 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 "Mario Balotelli Profile". Inter. 2008-07-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 3 சூலை 2010 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Manchester City FC Profile". Manchester City F.C. 16 மார்ச் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 24 October 2011 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Balotelli saluta l'Italia "Ho bisogno di giocare"" (in Italian). La Gazzetta dello Sport. 13 August 2010. http://www.gazzetta.it/Calcio/SerieA/Inter/13-08-2010/balotelli-saluta-italia-71775734390.shtml. பார்த்த நாள்: 13 August 2010. 
  5. "Balotelli signs for City". Manchester City F.C.. 13 August 2010. Archived from the original on 16 ஆகஸ்ட் 2010. https://web.archive.org/web/20100816033609/http://www.mcfc.co.uk/News/Team-news/2010/August/Mario-Balotelli-signs-for-Manchester-City. பார்த்த நாள்: 13 August 2010. 
  6. "Balotelli, maravillado con Thiago desde su paso por el Barça" (in Spanish). Sport (newspaper). 11 August 2011. Archived from the original on 10 பிப்ரவரி 2012. https://web.archive.org/web/20120210084755/http://www.sport.es/es/noticias/barca/20110811/balotelli-maravillado-con-thiago-desde-paso-por-barca/1113961.shtml. பார்த்த நாள்: 11 August 2011. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியோ_பலோட்டெலி&oldid=3566608" இருந்து மீள்விக்கப்பட்டது