தோமா முல்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோமா முல்லர்

2012இல் செருமனிக்கு ஆடுகையில் முல்லர்
சுய தகவல்கள்
முழுப் பெயர்தாமசு முல்லர்[1]
பிறந்த நாள்13 செப்டம்பர் 1989 (1989-09-13) (அகவை 34)
பிறந்த இடம்வீல்ஹைம், மேற்கு செருமனி
உயரம்1.86 m (6 அடி 1 அங்) (6 அடி 1 அங்)[2]
ஆடும் நிலை(கள்)முன்னணி/ நடுக்கள தாக்கு வீரர்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
பேயர்ன் மியூனிக்கு
எண்25
இளநிலை வாழ்வழி
1993–2000டிஎஸ்வீ பால்
2000–2008பேயர்ன் மியூனிக்கு இளைஞரணி
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2008–2009பேயர்ன் மியூனிக் II35(16)
2008–பேயர்ன் மியூனிக்165(58)
பன்னாட்டு வாழ்வழி
2004–2005செருமனி U166(0)
2007செருமனி U193(0)
2008செருமனி U201(1)
2009செருமனி U216(1)
2010–செருமனி50(20)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 17:17, 10 மே 2014 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 18:00, 16 சூன் 2014 (UTC)[3] அன்று சேகரிக்கப்பட்டது.

தோமா முல்லர் (Thomas Müller, மாற்று ஒலிப்பு:தாமஸ் முல்லர்; பிறப்பு: செப்டம்பர் 13, 1989) செருமனியின் தேசிய அணியில் விளையாடும் ஒரு கால்பந்து விளையாட்டு வீரர் ஆவார். இவர் பேயேர்ன் மியூனிக்கு கால்பந்தாட்டக் கழகத்தில் ஒரு முக்கிய அங்கம் ஆவார். முல்லர் நடுக்கள அல்லது முன்னணி வரிசையில் பந்தைத் தாக்கும் நிலையில் விளையாடி வருகிறார். இருபுறத்திலிருந்தும் விளையாடக்கூடிய திறனுடையவர். ஆட்டக்களத்தின் எந்த இடத்திலும் ஆடக்கூடிய திறன், அணியுடன் ஒருங்கிசைவு, நெடுநேரம் ஆடக்கூடிய உடற்றிறன் ஆகியவற்றிற்காக பாராட்டப்படுகிறார். கோல்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதிலும் கோலடிப்பதிலும் நிலைத்த தன்மையைக் காட்டி வருகிறார். பேயர்ன் மியூனிக் கழகத்தில் இளஞர் அணியில் துவங்கிய இவரது விளையாட்டு அங்கு பதப்படுத்தப்பட்டுள்ளது. 2009-10 ஆண்டு பருவத்தில் நடந்த அனைத்து கழக ஆட்டங்களிலும் பங்கேற்று அவ்வாண்டில் பேயர்ன் மியூனிக்கு புன்டசுலீகா மற்றும் செருமானிய காற்பந்துக் கழகத்தின் போகல் கோப்பையையும் வென்று இரட்டை எய்த உதவினார். 2010இல் பேயர்ன் மியூனிக்கு வாகையர் கூட்டிணைவு இறுதியாட்டத்திற்கு எய்தவும் காரணமாக இருந்தார். இச்சாதனைகளால் இவர் 2010 உலகக்கோப்பைக்கான தேசிய அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இந்தப் போட்டியில் ஆறு ஆட்டங்களில் ஐந்து கோல்கள் அடித்து செருமானிய அணி மூன்றாமிடம் எட்ட உறுதுணையாக இருந்தார். ஃபிஃபாவின் சிறந்த இளைய காற்பந்தாட்டக்காரர் என்ற விருதையும் பெற்றார். மேலும் இப்போட்டிகளில் மிகக் கூடுதலான கோல்கள் அடித்தமையால் தங்கக் காலணி விருதையும் வென்றார்.

சூன் 16, 2014இல் 2014 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளில் போர்த்துக்கல்லுடனான செருமனியின் துவக்க ஆட்டத்தில், முல்லர் ஆட்ரிக்கு -ஒரே ஆட்டத்தில் மூன்று கோல்கள் - அடித்து 4-0 என்ற கணக்கில் செருமனி வெல்லக் காரணமானார்.[4][5] தவிரவும் இந்த ஆட்டத்தின் 37வது நிமிடத்தில் போர்த்துக்கேய வீரர் பேப்பிக்கு இவரை தலையால் முட்டியதால் சிவப்பு அட்டை வழங்கப்பட்டது.[4][5] இவரே இந்த ஆட்டத்தின் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "FIFA Club World Cup Morocco 2013: List of Players" (PDF). FIFA. 7 திசம்பர் 2013. p. 5 இம் மூலத்தில் இருந்து 2018-12-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181224185413/http://www.fifadata.com/document/FCWC/2013/pdf/FCWC_2013_SquadLists.pdf. பார்த்த நாள்: 8 திசம்பர் 2013. 
  2. "Thomas Müller Player Profile FC Bayern München AG". Fcbayern.telekom.de. பார்க்கப்பட்ட நாள் 16 ஏப்ரல் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Nationalspieler Thomas Müller" (in German). DFB. 17 சனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 14 பெப்ரவரி 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: unrecognized language (link)
  4. 4.0 4.1 Starcevic, Nesha (16 June 2014). "World Cup: Thomas Mueller scores hat trick as Germany routs Portugal". The Associated Press. Salvador, Brazil: Toronto Star. http://www.thestar.com/sports/worldcup/2014/06/16/world_cup_thomas_mueller_scores_hat_trick_as_germany_routs_portugal.html. பார்த்த நாள்: 16 June 2014. 
  5. 5.0 5.1 Ornstein, David (16 June 2014). "Germany 4-0 Portugal". BBC. http://www.bbc.com/sport/0/football/25285106. பார்த்த நாள்: 16 June 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோமா_முல்லர்&oldid=3427655" இலிருந்து மீள்விக்கப்பட்டது