இராபின் வான் பெர்சீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராபின் வான் பெர்சீ

2013இல் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகத்தில் வான் பெர்சீ
சுய தகவல்கள்
முழுப் பெயர்இராபின் வான் பெர்சீ[1]
பிறந்த நாள்6 ஆகத்து 1983 (1983-08-06) (அகவை 40)[1]
பிறந்த இடம்ராட்டர்டேம், நெதர்லாந்து
உயரம்1.83 m (6 அடி 0 அங்) (6 அடி 0 அங்)[2]
ஆடும் நிலை(கள்)முன்னணி தாக்குபவர்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
மான்செஸ்டர் யுனைடெட்
எண்20
இளநிலை வாழ்வழி
1997–1999எக்செல்சியர்
1998–2001பெயிநூர்து
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2001–2004பெயிநூர்து61(15)
2004–2012ஆர்சனல்194(96)
2012–மான்செஸ்டர் யுனைடெட்59(38)
பன்னாட்டு வாழ்வழி
2000நெதர்லாந்து U176(0)
2001நெதர்லாந்து U196(0)
2002–2005நெதர்லாந்து U2112(1)
2005–நெதர்லாந்து தேசிய காற்பந்து அணி85(45)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 09:58, 11 மே 2014 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 13 சூன் 2014 அன்று சேகரிக்கப்பட்டது.

இராபின் வான் பெர்சீ (Robin van Persie, பிறப்பு: ஆகத்து 6, 1983) டச்சு காற்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் மான்செஸ்டர் யுனைடெட் கழகத்திற்கு முன்னணியில் தாக்குபவராக விளையாடுவதோடன்றி நெதர்லாந்து தேசிய காற்பந்து அணிக்கு அணித்தலைவராகவும் விளங்குகிறார். இவர் பெயிநூர்து கழகத்தில் தமது இளமையை கழித்தவர்.[3] 2004இல் ஆர்சனல் கால்பந்துக் கழகத்தில் சேர்ந்த வான் பெர்சீ ஆகத்து 16, 2011இல் அக்கழக அணித்தலைவராக உயர்த்தப்பட்டார். அடுத்த ஆண்டிலேயே ஆர்சனலின் எதிரியாகக் கருதப்படும் மான்செஸ்டர் யுனைடெட் கழகத்திற்கு மாறினார்.[4][5] இவர் உலகின் தலைசிறந்த தாக்குதல் வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.[6][7] புகழ்பெற்ற டச்சு காற்பந்தாட்ட வீரரான மார்க்கோ வான் பாஸ்டனுடன் ஒப்பிடப்படுகிறார்.[8][9]

வான் பெர்சீ நெதர்லாந்துக்காக 17-கீழ், 19-கீழ் மற்றும் 21-கீழ் அணிகளில் பன்னாட்டு ஆட்டங்களில் ஆடியுள்ளார். தேசிய அணிக்காக 2005இல் உருமேனியாவுடனான ஓர் நட்பு ஆட்டத்தில் அறிமுகமானார். பின்லாந்துடனான ஆட்டத்தில் தமது முதல் பன்னாட்டு கோலை அடித்தார்; இந்த ஆட்டத்தில் நெதர்லாந்து 4-0 என்ற கணக்கில் வென்றது. இதுவரை பெர்சீ தமது நாட்டிற்காக 83 முறை ஆடியுள்ளார்; இவற்றில் 42 கோல்கள் அடித்துள்ளார்.[10][11] வான் பெர்சீ தமது நாட்டிற்காக 2006 உலகக்கோப்பை கால்பந்து, யூரோ 2008, 2010 உலகக்கோப்பை கால்பந்து, யூரோ 2012 மற்றும் 2014 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 Hugman, Barry J., தொகுப்பாசிரியர் (2005). The PFA Premier & Football League Players' Records 1946–2005. Queen Anne Press. பக். 627. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-85291-665-6. 
  2. "Player Profile". premierleague.com. Archived from the original on 2011-12-28. பார்க்கப்பட்ட நாள் 29 மே 2014.
  3. Robin van Persie AllSportsPeople.com
  4. [1] பரணிடப்பட்டது 2012-04-30 at the வந்தவழி இயந்திரம் Arsenal.com
  5. "Terms agreed for Van Persie transfer". Arsenal.com. 15 ஆகத்து 2012 இம் மூலத்தில் இருந்து 2012-08-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120816034930/http://www.arsenal.com/news/news-archive/terms-agreed-for-van-persie-transfer. 
  6. http://www.dailymail.co.uk/sport/football/article-2396953/Robin-van-Persie-best-striker-world-says-Michu.html
  7. http://www.mirror.co.uk/sport/football/news/lionel-messi-hails-robin-van-2842748
  8. Rob Draper, Mail on Sunday Chief Football Writer (6 திசம்பர் 2009). "Van Persie can take heart from Van Basten's heroics | Mail Online". Dailymail.co.uk. http://www.dailymail.co.uk/sport/football/article-1233509/Van-Persie-heart-Van-Bastens-heroics.html. பார்த்த நாள்: 17 அக்டோபர் 2011. 
  9. "'Van Persie's cast in Van Basten's mould' | News Archive | News". Arsenal.com. 20 அக்டோபர் 2009. Archived from the original on 2010-01-06. பார்க்கப்பட்ட நாள் 17 அக்டோபர் 2011.
  10. FIFA Player Statistics: Robin VAN PERSIE பரணிடப்பட்டது 2013-10-13 at the வந்தவழி இயந்திரம் FIFA.com
  11. Robin Van Persie Football Profile Yahoo! Eurosport UK
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராபின்_வான்_பெர்சீ&oldid=3544108" இலிருந்து மீள்விக்கப்பட்டது