போர்த்துக்கேய கால்பந்துக் கூட்டமைப்பு
Appearance
யூஈஎஃப்ஏ | |
---|---|
தோற்றம் | 1914 |
ஃபிஃபா இணைவு | 1923 |
யூஈஎஃப்ஏ இணைவு | 1954 |
தலைவர் | ஃபெர்னாண்டோ கோமேசு (Fernando Gomes) |
இணையதளம் | fpf.pt |
போர்த்துக்கேய கால்பந்துக் கூட்டமைப்பு (Portuguese Football Federation (FPF); போர்த்துக்கேய மொழி: Federação Portuguesa de Futebol; FPF; pronounced [fɨdɨɾɐˈsɐ̃w̃ puɾtuˈɡezɐ dɨ futɨbɔɫ]) என்பது போர்த்துகலின் கால்பந்து மேலாண்மை அதிகார அமைப்பாகும். இது போர்த்துக்கேய தேசிய கால்பந்துப் போட்டித்தொடர், போர்த்துக்கேயக் கோப்பை, போர்த்துக்கேய உன்னதக் கோப்பை, ஐவர் கால்பந்துப் போட்டிகள், இளையோர் மற்றும் மகளிருக்கான கால்பந்துப் போட்டிகளை ஏற்பாடு செய்து நிர்வகிப்பது இதன் பொறுப்பாகும். மேலும், பன்னாட்டுப் போட்டிகளுக்காக ஆடவர் மற்றும் மகளிருக்கான தேசிய கால்பந்து அணிகளைத் தேர்வு செய்து நிர்வகிப்பதும் இதன் பணியாகும். 1914-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட இவ்வமைப்பின் தலைமையகம் லிஸ்பன் நகரில் அமைந்துள்ளது.
வெளியிணைப்புகள்
[தொகு]- Official site FPF (போர்த்துக்கேயம்)
- Portugal பரணிடப்பட்டது 2011-09-24 at the வந்தவழி இயந்திரம் at FIFA site
- Portugal at UEFA site