ஆத்திரேலியக் கால்பந்துக் கூட்டமைப்பு
ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு | |
---|---|
தோற்றம் | 1961 |
தலைமையகம் | சிட்னி |
ஃபிஃபா இணைவு | 1963 |
ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு இணைவு | 2006 |
ஏசியான் கால்பந்துக் கூட்டமைப்பு (AFF) இணைவு | 2013 |
இணையதளம் | www.footballaustralia.com.au |
ஆத்திரேலியக் கால்பந்துக் கூட்டமைப்பு (Football Federation Australia, FFA) என்பது ஆத்திரேலியாவின் கால்பந்து நிர்வாக அமைப்பாகும். இதன் தலைமையகம் சிட்னி நகரில் அமைந்துள்ளது. முதன்முதலில் 1911-ஆம் ஆண்டிலேயே கால்பந்துக்கான மேலாண்மை அமைப்பு தோற்றுவிக்கப்பட்டிருந்தாலும், தற்போதைய வடிவில் 1963-ஆம் ஆண்டில்தான் நிறுவப்பட்டது. 2004-ஆம் ஆண்டிலிருந்து தற்போதைய பெயரில் வழங்கப்படுகிறது. ஆத்திரேலியாவின் தேசிய கால்பந்துக் கூட்டிணைவு, இளையோர், மகளிர், ஊனமுற்றோருக்கான கால்பந்துப் போட்டிகள், தொழில்முறைசாரா விழைஞர் கால்பந்துப் போட்டிகள், ஐவர் கால்பந்துப் போட்டிகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்து நடத்துவது இவ்வமைப்பே ஆகும். மேலும் பன்னாட்டுப் போட்டிகளுக்காக ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தேசிய கால்பந்து அணிகளைத் தேர்ந்தெடுத்து நிர்வகிப்பது இதன் முக்கியப் பொறுப்பாகும். ஓசியானியா கால்பந்துக் கூட்டமைப்பை தோற்றுவித்து உறுப்பினரான இவ்வமைப்பு, சனவரி 1, 2006, அன்று ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பில் இணைந்தது.
வெளியிணைப்புகள்
[தொகு]- Official website
- Australia பரணிடப்பட்டது 2014-01-03 at the வந்தவழி இயந்திரம் on FIFA
- Australia பரணிடப்பட்டது 2013-04-28 at the வந்தவழி இயந்திரம் on AFC