ஏசியான் கால்பந்துக் கூட்டமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஏசியான் கால்பந்துக் கூட்டமைப்பு
ஏசியான் கால்பந்துக் கூட்டமைப்பு இலச்சினை.png
AFF logo
AFFmap.png
உருவாக்கம்31 January 1984 [1]
வகைSports organization
தலைமையகம்Petaling Jaya, Selangor, மலேசியா
உறுப்பினர்கள்
12 உறுப்பு சங்கங்கள்
President
மலேசியா கொடி HE Sultan Ahmad Shah
வலைத்தளம்www.aseanfootball.org

ஏசியான் கால்பந்துக் கூட்டமைப்பு (ASEAN Football Federation (AFF)) என்பது ஆசிய கால்பந்துக் கூட்டமைப்புக்குள் இருக்கும் சிறு-கூட்டமைப்பாகும்; இது தென்கிழக்கு ஆசியாவை மையமாகக் கொண்டது. ஏசியான் என்பது தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு ஆகும். புரூணை, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்சு, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகியவை இணைந்து 1984-ஆம் ஆண்டில் ஏசியான் கால்பந்துக் கூட்டமைப்பை தோற்றுவித்தன. கம்போடியா, லாவோஸ், மியான்மர், வியட்நாம் ஆகிய கால்பந்துக் கூட்டமைப்புகள் 1996-ஆம் ஆண்டில் இணைந்தன.

1996-ஆம் ஆண்டில், முதல் ஏசியான் கால்பந்துப் போட்டியை நடத்தியது. இதன்பின்னர், பல்வேறு வகையான போட்டிகளை வெவ்வேறு நிலை கால்பந்து அணிகளுக்கு நடத்தியுள்ளது.

2004-ஆம் ஆண்டில் கிழக்குத் திமோர் உறுப்பினராக இணைந்து. சனவரி 1, 2006, அன்று ஆசிய கால்பந்துக் கூட்டமைபில் ஆத்திரேலியக் கால்பந்துக் கூட்டமைப்பு இணைந்தது. ஏசியான் கால்பந்துக் கூட்டமைப்பில் அழைப்பு-இணைவு உறுப்பினராக ஆத்திரேலியா இணைந்த பின்னர், ஏசியான் இளையோர் கால்பந்துப் போட்டித்தொடர்களுக்கு தனது இளையோர் அணிகளை ஆத்திரேலியா அனுப்பியது. ஆகத்து 27, 2013, அன்று முழு உறுப்பினராக ஆத்திரேலியா இணைந்தது.

மேலும் பார்க்க[தொகு]

குறிப்புதவிகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]