உள்ளடக்கத்துக்குச் செல்

கேஸ்தலோவ் (சியாரா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேஸ்தலோவ்
"Gigante da Boa Vista"
2013இல் அரீனா கேஸ்தலோவ்
முழு பெயர் எசுடேடியோ பிளாசிடொ அடெரால்டொ கேஸ்தலோவ்
இடம் போர்த்தலேசா, சியாரா, பிரேசில்
அமைவு 3°48′26.16″S, 38°31′20.93″W
திறவு நவம்பர் 11, 1973
சீர்படுத்தது 2002 - 2012
உரிமையாளர் சியாரா மாநிலம்
ஆளுனர் சியாரா மாநிலம்
தரை புல் தரை
கட்டிடக்கலைஞர் யோசு லிபரல் டெ காசுத்த்ரோ
கெகார்டு எர்னசுட்டு போர்மன்
ரெஜினால்டோ மென்டசு ரேஞ்சல்
மார்சிலியோ டயசு டெ லூனா
இவான் டா சில்வா பிரிட்டோ
Structural engineer யூகோ அல்கன்தரா மோட்டா
குத்தகை அணி(கள்)
சியாரா விளையாட்டுக் கழகம்
போர்த்தலெசா விளையாட்டுக் கழகம்
2014 உலகக்கோப்பை காற்பந்து
அமரக்கூடிய பேர் 67,037
பரப்பளவு 110 x 75 மீ

எசுடேடியோ பிளாசிடொ அடெரால்டொ கேஸ்தலோவ், (Estádio Plácido Aderaldo Castelo) பரவலாக கேஸ்தலோவ் (போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [kasteˈlɐ̃w]) அல்லது சிகான்டெ டா போவா விஸ்ட்டா, பிரேசிலின் சியாரா மாநிலத்தில் போர்த்தலேசா நகரில் அமைந்துள்ள காற்பந்தாட்ட விளையாட்டரங்கம் ஆகும். மிகவும் கூடியதாக 67,037 பார்வையாளர்கள் அமரக்கூடிய இவ்வரங்கம் நவம்பர் 11, 1973இல் திறக்கப்பட்டது. சியாரா விளையாட்டுக் கழகத்திற்கும் போர்த்தலேசா விளையாட்டுக் கழகத்திற்கும் தாயக மைதானமாகிய இவ்வரங்கம் சியாரா மாநில அரசுக்கு உரிமையானது. செப்டம்பர் 12, 1966இலிருந்து மார்ச்சு 15, 1971 வரை இங்கு ஆளுநராகப் பணியாற்றியவரும் இந்த விளையாட்டரங்கம் கட்டப்பட தலைமையேற்றவருமான பிளாசிடொ அடெரால்டொ கேஸ்தலோவ் பெயரில் இதற்கு முறையான பெயரிடப்பட்டுள்ளது. [1]

வரலாறு

[தொகு]

கேஸ்தலோவ் 1969 முதல் 1973 வரை கட்டப்பட்டு நவம்பர் 11, 1973இல் திறக்கப்பட்டது.

இதனை சியாரா மாநில அரசு மே 2000 முதல் சீரமைக்கத் தொடங்கியது. மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்ட இந்த சீரமைப்புப் பணி மே 16, 2001இல் துவங்கியது.[1]

இந்த விளையாட்டரங்கத்தில் நவம்பர் 11, 1973 அன்று முதல் காற்பந்தாட்டம் சியாரா அணிக்கும் போர்த்தலேசா அணிக்கும் இடையே நடந்தது. இந்த ஆட்டம் வெற்றி தோல்வியின்றி 0-0 என முடிந்தது. இவ்வரங்கத்தில் அடிக்கப்பட்ட முதல் கோல் சியாரா அணியின் எராண்டியால் நவம்பர் 18, 1973இல் அடிக்கப்பட்டதாகும். இந்த ஆட்டத்தை சியாரா அணி விடோரியா அணியிடம் 1-0 என வென்றது.

சீரமைக்கப்பட்ட விளையாட்டரங்கில் முதல் ஆட்டம் மார்ச்சு 23, 2002 அன்று பிரேசில் தேசிய அணிக்கும் யூகோசுலோவிய தேசிய அணிக்கும் இடையே நடைபெற்றது; இதில் பிரேசில் 1-0 என்ற கணக்கில் வென்றது.[1]

இந்த விளையாட்டரங்கத்தில் மிகக்கூடிய வருகைப்பதிவு ஆகத்து 27, 1980 அன்று பதிவானது; பிரேசில் தேசிய அணியும் உருகுவை தேசிய அணியும் மோதிய இவ்வாட்டத்தை 118,496 பேர் கண்டு களித்தனர். இந்த ஆட்டத்தில் பிரேசில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

2013 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி

[தொகு]
நாள் நேரம் (UTC-03) அணி #1 முடிவு அணி #2 சுற்று வருகைப்பதிவு
சூன் 19, 201316:00 பிரேசில்2-0 மெக்சிக்கோகுழு ஏ57,804
சூன் 23, 201316:00 நைஜீரியா0-3 எசுப்பானியாகுழு பி51,263
சூன் 27, 201316:00 எசுப்பானியா0–0 கூ.நே.பி.(பெனால்ட்டிகள்: 7–6) இத்தாலிஅரையிறுதி56,083

2014 உலகக்கோப்பை காற்பந்து

[தொகு]

கேஸ்தலோவ் 2014 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளுக்கான ஓர் விளையாட்டரங்கமாகத் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இவ்வரங்கம் மேம்படுத்தபட்டது. பெரிய கூரை சேர்க்கையும் 4200 இடங்கொண்ட தரையடி தானுந்து நிறுத்த வசதியும் புதிய கீழ் தளமும் இந்த புனரமைப்புத் திட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்த புனரமைப்பிற்குப் பின்னர் 67,037 பேர் காணக்கூடியதாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மார்ச்சு 31, 2011இல் இந்தப் புனரமைப்புத் திட்டத்திற்கா மூடப்பட்ட அரங்கம் அலுவல்முறையாக திசம்பர் 2012இல் திறக்கப்பட்டது.[2] 2014 உலகக்கோப்பைக்கான 12 விளையாட்டரங்களில் சீரமைப்பிற்குப் பின்னர் முதலில் தயாரான விளையாட்டரங்கம் இதுவே ஆகும்.[2]

நாள் நேரம் (UTC-03) அணி #1 முடிவு அணி #2 சுற்று வருகைப்பதிவு
சூன் 14, 201416:00 உருகுவைஆட்டம் 7 கோஸ்ட்டா ரிக்காகுழு டி
சூன் 17, 201416:00 பிரேசில்ஆட்டம் 17 மெக்சிக்கோகுழு ஏ
சூன் 21, 201416:00 செருமனிஆட்டம் 29 கானாகுழு ஜி
சூன் 24, 201417:00 கிரேக்க நாடுஆட்டம் 38 ஐவரி கோஸ்ட்குழு சி
சூன் 29, 201413:00குழு பி முதலிடம்ஆட்டம் 51குழு ஏ இரண்டாமிடம்பதினாறுவர் சுற்று
சூலை 4, 201417:00ஆட்டம் 49 வெற்றியாளர்ஆட்டம் 57ஆட்டம் 50 வெற்றியாளர்காலிறுதி

மேற்சான்றுகள்

[தொகு]
  1. 1 2 3 Enciclopédia do Futebol Brasileiro Lance Volume 2. Rio de Janeiro: Aretê Editorial S/A. 2001. pp. 457–458. ISBN 85-88651-01-7.
  2. 1 2 "Brazil opens first World Cup 2014 stadium". BBC News. BBC. திசம்பர் 17, 2012. Retrieved திசம்பர் 31, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேஸ்தலோவ்_(சியாரா)&oldid=1620494" இலிருந்து மீள்விக்கப்பட்டது