மீயுயர் வரையறைத் தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
8கி மீயுயர், 4கி மீயுயர், உயர் வரையறை மற்றும் சீர்தர தொலைக்காட்சிகளின் திரை பிரிதிறன்களின் ஒப்புமை
1931 சிஐஈ வண்ணவெளி படிமம்:மீயுயர் வரையறைத் தொலைக்காட்சிக்கு பரிந்துரை 2020 வெளி முக்கோணத்திலும் உயர் வரையறை தொலைக்காட்சி பரிதுரை 709 உள் முக்கோணத்திலும் காட்டுகிறது.

மீயுயர் வரையறைத் தொலைக்காட்சி (Ultra high definition television அல்லது Ultra HD television, UltraHD, UHDTV) என்பது 4கி மீயுயர் (2160p) மற்றும் 8கி மீயுயர் (4320p) தொலைக்காட்சி வரையறைகளை உள்ளடக்கி உள்ளது. இந்த இரு எண்ணிம ஒளித வடிவங்களும் சப்பான் தொலைக்காட்சி நிறுவனத்தின் (என்எச்கே) அறிவியல் மற்றும் தொழினுட்ப ஆய்வகத்தால் வரையறுக்கப்பட்டு பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியத்தால் (ஐடியூ) ஏற்பளிக்கப்பட்டது.

நுகர்வோர் இலத்திரனியல் சங்கம் அக்டோபர் 17, 2012 அன்று அகல உயரத் தகவு குறைந்தது 16:9 உள்ளதும் குறைந்தது ஓர் எண்ணிம உள்ளீடாவது குறைந்த பிரிதிறனாக 3840×2160 பிக்செல் வீத ஒளிதத்தை எடுத்துக்கொள்ளவும் காட்சிப்படுத்தும் திறனுடையதுமான தொலைக்காட்சிப் பெட்டிகளில் "மீ உயர்-வரையறை", அல்லது "மீ எச்டி" பயன்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.[1][2]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "What is Ultra HDTV?", Ultra HDTV Magazine, October 27, 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. "The Ultimate Guide to 4K Ultra HD", Ultra HDTV Magazine, October 27, 2013 அன்று பார்க்கப்பட்டது.