உள்ளடக்கத்துக்குச் செல்

அர்கெந்தீனா கால்பந்துச் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்கெந்தீனா கால்பந்துச் சங்கம்
தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு
Association crest
தோற்றம்1893 [1]
ஃபிஃபா இணைவு1912
தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு இணைவு1916
தலைவர்ஜூலியோ குரோன்டோனா
இணையதளம்{{www.afa.org.ar}}

ஆர்ஜெண்டினா கால்பந்துச் சங்கம் (Argentine Football Association; எசுப்பானியம்: Asociación del Fútbol Argentino, local pronunciation: [asosjaˈsjon del ˈfutβol arxenˈtino]) என்பது தென்னமெரிக்காவின் அர்ஜென்டினா நாட்டின் கால்பந்துக் கட்டுப்பாட்டு/நிர்வாக அமைப்பாகும். அர்கெந்தீனாவின் முதன்மையான கால்பந்துக் கூட்டிணைவையும், அதன்கீழ்நிலைக் கூட்டிணைவுகளையும், அர்கெந்தீனா கோப்பை, அர்கெந்தீனா உன்னதக் கோப்பை ஆகியவற்றை நடத்துவதற்குப் பொறுப்பேற்கும் அமைப்பு இதுவாகும். மேலும், பன்னாட்டுப் போட்டிகளுக்காக ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தேசிய கால்பந்து அணிகளைத் தேர்ந்தெடுத்து நிர்வகிப்பதும் இதன் முக்கியப் பணியாகும். தொழில்முறையற்ற விழைஞர் கால்பந்துக் கூட்டிணைவுகள், இளையோருக்கான கால்பந்துக் கூட்டிணைவுகள், மகளிர் மற்றும் ஐவர் கால்பந்துப் போட்டிகளையும் இது நடத்துகிறது.

குறிப்புதவிகள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]