மார்செலோ வியேரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்செலோ

ரியல் மாட்ரிட்டில் மார்செலோ (2012)
சுய தகவல்கள்
முழுப் பெயர்மார்செலோ வியேரா டா சில்வா ஜூனியர்
பிறந்த நாள்12 மே 1988 (1988-05-12) (அகவை 35)
பிறந்த இடம்இரியோ டி செனீரோ, பிரேசில்
உயரம்1.74 m (5 அடி 8+12 அங்)[1]
ஆடும் நிலை(கள்)இடப்புற பின்னாட்டக் காரர் / இடப்புற நடுக்கள வீரர்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
ரியல் மாட்ரிட்
எண்12
இளநிலை வாழ்வழி
2002–2005புளுமினென்சு
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2005–2006புளுமினென்சு30(6)
2007–ரியல் மாட்ரிட்198(15)
பன்னாட்டு வாழ்வழி
2005பிரேசில் U173(1)
2007பிரேசில் U204(0)
2008–2012பிரேசில் U2312(1)
2006–பிரேசில் தேசிய காற்பந்து அணி32(4)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 15:52, 17 மே 2014 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 12 சூன் 2014 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.

மார்செலோ வியேரா டா சில்வா ஜூனியர் (Marcelo Vieira da Silva Júnior, மே 12, 1988), பிரேசிலிய காற்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் ரியல் மாட்ரிடிற்கும் பிரேசில் தேசிய காற்பந்து அணிக்கும் ஆடி வருகிறார். பெரும்பாலும் இடப்புற பின்னணியில் விளையாடும் இவர் சிலநேரங்களில் இடப்புற நடுக்கள தாக்குபவராகவும் ஆடுவதுண்டு.

இவர் பல நேரங்களில் புகழ்பெற்ற பிரேசிலிய இடப்புற பின்னணி காற்பந்தாட்ட வீரரான இராபர்டோ கார்லோசுடன் ஒப்பிடப்படுகிறார்;இராபர்டோ கார்லோசே இவரைத் தம் வாரிசாக வரித்ததுடன் தன்னைவிடச் சிறப்பாக ஆடுவதாகவும் கூறியுள்ளார்.[2]

இவரது சிறப்பான ஆட்டத்தை இத்தாலியின் புகழ்பெற்ற இடப்புற பாதுகாப்பாளர் பவுலோ மால்டினியும்[3] அர்கெந்தீனாவின் டீகோ மரடோனாவும்[4] பாராட்டியுள்ளனர்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Player Profile". Real Madrid C.F Official Web Site. http://www.realmadrid.com/en/football/squad/marcelo-vieira-da-silva. பார்த்த நாள்: 6 February 2014. 
  2. La Liga Headlines: Roberto Carlos: Marcelo best in world பரணிடப்பட்டது 2012-03-31 at the வந்தவழி இயந்திரம். Adifferentleague.co.uk (29 March 2012). Retrieved on 2012-06-21.
  3. Paolo Maldini: Tottenham Hotspur's Gareth Bale only knows how to attack. Goal.com (16 December 2011). Retrieved on 2012-06-21.
  4. Diego Maradona tips Tottenham target Sergio Aguero to join Real Madrid one day. Goal.com (24 February 2011). Retrieved on 2012-06-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்செலோ_வியேரா&oldid=3224535" இருந்து மீள்விக்கப்பட்டது