பிரேசிலிய கால்பந்து கூட்டமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரேசிலிய கால்பந்து கூட்டமைப்பு
தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு
Association crest
தோற்றம்1914
ஃபிஃபா இணைவு1923
தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு இணைவு1916
தலைவர்யோசு மாரியா மாரின்

பிரேசிலிய கால்பந்து கூட்டமைப்பு (Brazilian Football Confederation, போர்த்துக்கேய மொழி: Confederação Brasileira de Futebol அல்லது CBF) பிரேசில் நாட்டில் காற்பந்தாட்டதை கட்டுப்படுத்தும் நிர்வாக அமைப்பாகும். இது சூன் 8, 1914 இல் பிரேசிலிய விளையாட்டு கூட்டமைப்பு எனப் பொருள்படும் Confederação Brasileira de Desportos (CBD)ஆக நிறுவப்பட்டது. இதன் முதல் தலைவராக ஆல்வரோ சமீத் இருந்தார். இது பிரேசிலிய தேசியப் போட்டிகளான கேம்பனேடோ பிரேசிலீரோ டெ புட்பால் போட்டிகளையும் (நான்கு நிலைகளையும்) பிரேசில் கோப்பை போட்டியையும் நிர்வகிக்கிறது. தவிரவும் வட்டாரப் போட்டிகளான கோப்பா டொ நோர்டெஸ்டெவையும் நடத்துகிறது. பிரேசில் தேசிய காற்பந்து அணியையும் பிரேசில் மகளிர் தேசிய கால்பந்து அணியையும் மேலாண்மை செய்கிறது. தொழில்முறை கால்பந்து அணிகளுடைய பிரேசிலியக் கழகங்கள் இக்கூட்டமைப்பின் அங்கத்தினர்கள் ஆவர். மாநில கூட்டமைப்புகள் இந்த தேசிய கூட்டமைப்பின் கீழ் இயங்குகின்றன.

இரியோ டி செனீரோவின் புறநகரான பர்ரா டா டியூக்காவில் இதன் அலுவலகம் அமைந்துள்ளது. இக்கூட்டமைப்பிற்கான பயிற்சி மையம், கிராண்யா கோமரி, டெரெசோபோலிசில் அமைந்துள்ளது.[1]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "A sede da seleção pentacampeã: uma opção de passeio" (in Portuguese). TeresópolisOn. Archived from the original on 2010-11-28. பார்க்கப்பட்ட நாள் 2009-02-17.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)

வெளி இணைப்புகள்[தொகு]