மணற்குன்று அரங்கம்
தோற்றம்
| மணற்குன்று அரங்கம் Arena das Dunas | |
|---|---|
| முழு பெயர் | அரீனா டாசு டுனாசு |
| இடம் | லாகோவா நோவா, நதால், பிரேசில் |
| எழும்புச்செயல் முடிவு | 2011 - 2014 |
| திறவு | 26 சனவரி 2014 |
| உரிமையாளர் | பொதுத்துறை-தனியார் கூட்டுறவு |
| கட்டிட விலை | R$ 400 மில்லியன் |
| கட்டிடக்கலைஞர் | போப்புலசு[1] |
| குத்தகை அணி(கள்) | அமெரிக்க காற்பந்துக் கழகம் (RN) ஏபிசி காற்பந்துக் கழகம் 2014 உலகக்கோப்பை காற்பந்து |
| அமரக்கூடிய பேர் | 45,000 |
மணற்குன்று அரங்கம் அல்லது டுனாசு அரங்கம் ("Arena das Dunas") பிரேசிலின் நத்தால் நகரில் காற்பந்தாட்டங்களுக்கெனவே போப்புலசு நிறுவனத்தின்[2] முன்னணி விளையாட்டிட வடிவமைப்பாளர் கிறித்தோபர் லீ வடிவமைத்துள்ள[3] விளையாட்டரங்கமாகும். சனவரி 2011[4] முதல் கட்டப்பட்டு வரும் இந்த விளையாட்டரங்கு 2014 உலகக்கோப்பை காற்பந்து ஆட்டங்களை ஏற்று நடத்தவிருக்கிறது. ஏற்கனவே இருந்த மக்காடோவ் விளையாட்டரங்கை இடித்து புதியதாக இது கட்டப்பட்டு வருகிறது.[5]
புதிய அரங்கத்தில் 45,000 பேர் அமரக்கூடும். இந்த வளாகத்திலேயே அங்காடி மையம், வணிக கட்டிடங்கள், பன்னாட்டு தரம் பேணும் விடுதிகள், செயற்கை ஏரி ஆகியன அமைக்கப்படுகின்றன.[6]
2014 உலகக்கோப்பை காற்பந்து
[தொகு]| நாள் | நேரம் (UTC-03) | அணி #1 | முடிவு | அணி #2 | சுற்று | வருகைப்பதிவு |
|---|---|---|---|---|---|---|
| சூன் 13, 2014 | 13:00 | ஆட்டம் 2 | குழு ஏ | |||
| சூன் 16, 2014 | 19:00 | ஆட்டம் 14 | குழு ஜி | |||
| சூன் 19, 2014 | 19:00 | ஆட்டம் 22 | குழு சி | |||
| சூன் 24, 2014 | 13:00 | ஆட்டம் 39 | குழு டி |

மேற்கோள்கள்
[தொகு]- ↑ [1] architect: Populous
- ↑ [2]
- ↑ "Christopher Lee, architect of Dunas Stadium and London 2012". Archived from the original on 2013-11-13. Retrieved 2010-09-13.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-06-12. Retrieved 2014-02-18.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-04-13. Retrieved 2014-02-18.
- ↑ [3]