ஜெனிஃபர் லோபஸ்
ஜெனிஃபர் லோபஸ் | |
---|---|
![]() மியாமியில் நடைபெற்ற எம்.டி.வி. இசை விருதுகள் - 2004 நிகழ்ச்சியில் ஜெனிஃபர் லோபஸ் | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | ஜெனிஃபர் லின் லோபஸ் |
பிற பெயர்கள் | ஜே.லோ' |
பிறப்பு | சூலை 24, 1969 |
பிறப்பிடம் | நியூயார்க், அமெரிக்கா |
இசை வடிவங்கள் | 'பாப்' இசை பாடகர் |
தொழில்(கள்) | நடிகை, பாடகர்-பாடலாசிரியர், நடனக் கலைஞர், ஆடை வடிவமைப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் |
இசைத்துறையில் | 1987–இன்றுவரை |
வெளியீட்டு நிறுவனங்கள் | Epic, Work |
இணையதளம் | www.JenniferLopez.com |
ஜெனிஃபர் லின் லோபஸ் (Jennifer Lynn Lopez, பிறப்பு : ஜூலை 24, 1969)[1]), ஜே.லோ எனப் பெரும்பாலும் அழைக்கப்படும் இவர் ஒரு அமெரிக்க நடிகை, பாடகி, இசைப்பதிவு தயாரிப்பாளர், நடனக்கலைஞர், ஆடை அலங்கார வடிவமைப்பாளர் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஆவார். ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் படி ஹாலிவுட்டின் லத்தின் அமெரிக்க தலைமுறையினரில் லோபஸ் மிகவும் பிரபலமானவர் ஆவார். மேலும் பீபிள் என் எஸ்பனொலின் "100 செல்வாக்கு மிகுந்த ஹிஸ்பனிக்ஸ்" பட்டியலின் படி லோபஸ் அமெரிக்காவின் செல்வாக்கு மிகுந்த ஹிஸ்பனிக் கேளிக்கையாளர் ஆவார்.[2]
லோபஸ் இன் லிவ்விங் கலர் என்ற தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சியில் நடனக்கலைஞராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். செலினா (1997), அவுட் ஆப் சைட் (1998) மற்றும் ஏஞ்சல் ஐஸ் (2001) போன்றவற்றில் லோபஸ் தொடர்ந்து நடித்ததில், இவர் தலைசிறந்த நடிகைக்கான அல்மா(ALMA) விருதை வென்றார். த செல் (2000), தெ வெட்டிங் ப்ளானர் (2001), மெய்ட் இன் மேஹேட்டன் (2002), சல் வீ டான்ஸ்? (2004) மற்றும் மான்ஸ்டெர்-இன்-லா (2005) போன்ற திரைப்படங்களிலும் இவர் தோன்றியுள்ளார்.
1999 ஆம் ஆண்டில் லோபஸ் இவரது முதல் இசைத் தட்டு ஆன் த 6 ஐ வெளியிட்டார். இதைத் தொடர்ந்து இரண்டு தடவை வெளியான இவரது இசை தொகுப்புகள் ஜே.ஜோ (2001) மற்றும் ஜெ டு த எல் -ஒ த ரிமிக்ஸ்சஸ் (J to tha L-O!: The Remixes) (2002) பில்போர்ட் 200 பட்டியலில் இடம் பெற்றது. மேலும், இவரது இசைத் தொகுப்புகள், திஸ் இஸ் மீ... தென் (2002) பில்போர்ட் 200 இல் உச்ச அளவான இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அதே போன்று ரீபர்த் தும் (2005) இதே நிலையைப் பெற்றது. 2007 ஆம் ஆண்டில் இவரது முதல் முழுமையான ஸ்பானிஷ்-மொழி இசைத் தொகுப்பு, கோமோ அம உன முஜெரை உள்ளிட்ட இவரது ஐந்தாவது ஆங்கில இசைத் தொகுப்பு ப்ரேவ் என இரண்டு ஆல்பங்களை லோபஸ் வெளியிட்டார். லோபஸ் 2003 ஆம் ஆண்டில் அபிமான பாப்/ராக் பெண் கலைஞருக்கான அமெரிக்க இசை விருதை வென்றார். மேலும் 2007 ஆம் ஆண்டில் அபிமான லத்தின் கலைஞருக்கான அமெரிக்க இசை விருதை வென்றார். 48 மில்லியன் ஆல்பங்களை உலகளவில் இவர் விற்றுள்ளார்.[3]
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]மழலையர் பள்ளி ஆசிரியையான கவுடலுப் ரோடிரிகியூஸ் மற்றும் கணினி நிபுனரான டேவிட் லோபஸ் ஆகியோருக்கு ஜெனிஃபர் லோபஸ் நியூயார்க்கின் சவுத் ப்ரோன்க்ஸில் பிறந்து வளர்ந்தார்.[4] இவருக்கு லிண்டா மற்றும் லெஸ்லீ என இரு உடன்பிறந்தவர்கள் உள்ளனர். லோபஸ் அவரது முழுமையான கல்வி வாழ்க்கையை கத்தோலிக்கப் பள்ளியில் கழித்தார். புருன்க்ஸில் உள்ள அனைத்து மகளிர் ப்ரெஸ்டோன் மேல்நிலைப்பள்ளியில் அவரது கல்வி வாழ்க்கையை முடித்தார். லோபஸின் 19வது வயதில் அவராகவே பாடுவது ஆடுவது போன்ற திறமைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ஒரு பருவத்திற்காக பரூச் கல்லூரியில் கலந்து கொண்ட பிறகு சட்ட அலுவலகத்தில் வேலை, நடன வகுப்புகள், மற்றும் மேன்ஹேட்டன் இரவு கிளப்புகளில் நடன நிகழ்ச்சி என லோபஸ் அவரது நேரத்தை பிரித்துக் கொண்டார்.[5] 1987 ஆம் ஆண்டில் மை லிட்டில் கேர்ல் எனற திரைப்படத்தில் ஒரு சிறிய பகுதியில் நடிப்பதற்கான வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. சில மாதங்கள் நடன பாத்திரங்கள் ஏற்ற பிறகு நடனக் கலைஞராக பல்வேறு ராப் இசை வீடியோக்களில் லோபஸ் தேர்வு செய்யப்பட்டார். 1990 இல், எம்.டி.வி. (MTV) ராப்ஸ் மற்றும் நியூ கிட்ஸ் ஆன் த ப்ளாக்கில் நடனக் கலைஞராக இருந்தார். மேலும் நிகழ்ச்சியில் அவர்களது "கேம்ஸ்" பாடலுக்காக 1991 ஆம் ஆண்டின் அமெரிக்க இசை விருதை அவர்கள் பெற்றனர். 1990 ஆம் ஆண்டில் இன் லிவ்விங் கலர் என்ற தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சியில் "ஃப்ளை கேர்ல்" நடனக் கலைஞராக முதன் முதலில் நிரந்தர இடத்தைப் பிடித்தார். பிறகு விரைவில் ஜானெட் ஜாக்சனுக்காக, நடனக்கலைஞராக மாறினார். மேலும் அவரது 1993 ஆம் ஆண்டு வீடியோவான "தட்'ஸ் த வே லவ் கோஸ்" இல் லோபஸ் தோன்றினார்.
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி
[தொகு]சவுத் செண்டரல் என்ற பாக்ஸ் தொலைக்காட்சி தொடரில் நடிகையாக லோபஸ் தோன்றினார். செகண்ட் சான்சஸ் மற்றும் ஹோட்டல் மலிபு போன்றவற்றிலும் லோபஸ் கெளரவ நடிகையாக நடித்துள்ளார்.. பிறகு தொலைக்காட்சிக்காக எடுக்கப்பட்ட திரைப்படமான நர்சஸ் ஆன் த லைன்: த க்ராஷ் ஆப் ப்ளைட் 7 இல் பங்கேற்றார். கிரிகோரி நாவின் 1995 நாடகமான மை பேமிலி யில் லோபஸிற்கு முதல் முக்கியமான திரைப்பாத்திரம் கிடைத்தது. இதில் 1920களின் யங் மரியா பாத்திரத்தில் நடித்தார். ஜிம்மி ஸ்மிட்ஸ் மற்றும் எட்வர்ட் ஜேம்ஸ் ஒல்மோஸுடன் மை பேமிலி யில் ஒன்று சேர்ந்து நடித்த பிறகு வெஸ்லி ஸ்நிப்ஸ் மற்றும் உட்டி ஹாரெல்சன்னுக்கு போட்டியாக அதிரடி திரைப்படமான மனி ட்ரெய்னில் லோபஸ் நடித்தார்.[6] 1996 ஆம் ஆண்டில் ராபின் வில்லியம்ஸ் நடித்த ஃப்ரான்சிஸ் போர்ட் கோபோலாவின் 1996 நகைச்சுவைத் திரைப்படம் ஜேக் கில் ஆஷ்லி ஜூடு மற்றும் லாரன் ஹோலியை வென்று துணைப்பாத்திரத்தில் நடித்தார்.[7] பிறகு லோபஸ் ஜேக் நிகோல்சனுக்குப் போட்டியாக பாப் ரபெல்சனின் நல்ல வரவேற்பைப் பெற்ற இருண்ட திகில் திரைப்படம் ப்ளட் அண்ட் வைனில் நடித்தார்.
ஒரு பயோபிக் திரைப்படமான செலினா வில் அவர் டேஜனோ பாப் பாடகி செலினாவாக தலைமைப் பாத்திரம் ஏற்று நடிக்க தேர்ந்தெடுத்தது 1997 ஆம் ஆண்டில் லோபஸுக்கு ஒரு நல்ல வரவேற்பை கொடுத்தது. மை பேமிலி யில் ஏற்கனவே நாவுடன் வேலை செய்திருந்த போதும் செலினா வின் தலைமைப் பாத்திரத்தை ஏற்பதற்கு முன் லோபஸின் திறமை கடுமையாக சோதிக்கப்பட்டது. "மோசன் பிச்சரின் இசைசார் அல்லது நகைச்சுவைக்கான சிறந்த நடிகைக்கான" கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது உள்பட அதில் அவருடைய நடிப்பினால் பரவலாக புகழ் பெற்றார். பிறகு அந்த வருடத்தின் இரண்டு முக்கிய படங்களில் லோபஸ் நடித்தார். திகில் திரைப்படம் அனகோண்டா வில் ஐஸ் கியூப் மற்றும் ஜோன் வோய்ட்டுன் ஒன்று சேர்ந்து டெர்ரி ப்ளோர்ஸ் பாத்திரத்தில் நடித்தார். இதில் இயக்குநர் அமேசன் நதியின் வழியாகப் பயணித்து இந்தத் திரைப்படத்தை எடுத்தார்.[8] பாக்ஸ் ஆபிஸில் அளவான வெற்றியைத் தந்தாலும் இத்திரைப்படம் கடுமையாக மதிப்பீடு செய்யப்பட்டது.[9] சீன் பென் மற்றும் பில்லி பாப் தோரோண்டன்ஆகியோருடன் ஒன்று சேர்ந்து ஸ்ட்ரேய் டாக்ஸ் புத்தகத்தை மையமாக் கொண்டு நகரும் நியோ-நோயிரின் திரைப்படமான யூ டர்னில் லோபஸ் முன்னணி நடிகையானார்.
1998 ஆம் ஆண்டில் ஸ்டீவன் சோடெர்பெர்க்கின் மாற்றியமைக்கப்பட்ட எல்மோர் லியோனர்டின் நாவல் அவுட் ஆப் சைட் டில் ஜார்ஜ் குலோனி உடன் நடித்தார். இது அவர் ஏற்று நடித்த பாத்திரங்களுள் பெரிதும் பேசப்பட்டது.[10] குற்றவாளியின் அழகில் மயங்கிய துணை பெடரல் மார்சலாக நடித்தார். இதில் லோபஸின் திறமையான நடிப்பிற்காக பெரிதும் பாராட்டப்பட்டார். மேலும் இந்த செயல்பாடுகளால் ஹாலிவுட் வரலாற்றில் அதிகமாக சம்பளம் வாங்கும் லத்தின் நடிகையாகவும் திகழ்ந்தார்.[11] அதே ஆண்டில் கணினி அனிமேட்டட் திரைப்படம் ஆண்ட்ஸில் ஆஸ்டெகாவிற்கு குரல் கொடுத்தார். பிறகு லோபஸ் ஆன்மா சார்ந்த திகில் திரைப்படம் த செல் லில் வின்ஸ் வேகனுடன் நடித்தார். லோபஸ் கேத்தரின் டீனாக இதில் சித்தரிக்கப்பட்டிருந்தார். ஒரு குழந்தை உளவியலாளரான இவர் மெய்நிகர் யதார்த்தத்தைப் பயன்படுத்தி நோயாளிகளின் மனதிற்குள் நுழைந்து நயமாய் பேசி கோமாவில் இருந்து அவர்களை விடுவிக்கிறார். இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் 18, 2000 அன்று வெளியானது. மேலும் பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தைப் பெற்று பெரும் வெற்றியைப் பெற்றது.[10] அதைத் தொடர்ந்து வந்த வருடத்தில் லோபஸ் அவருடைய நடிப்பிற்கு இடைவெளி கொடுத்து அவரது இசைத் தொழிலில் ஈடுபடத் தொடங்கினார்.
2001 ஆம் ஆண்டில் த வெட்டிங் ப்ளானர் என்ற காதல் நகைச்சுவைத் திரைப்படத்தில் மேத்திவ் மெக்கொனோகியுடன் இணைந்து நடித்தார். இந்தப் படம் முதலிடத்தைப் பிடித்தது. மேலும் அதே வாரத்தில் இவரது இசைத்தொகுப்பு ஜே.லோ வும் முதலிடத்தைப் பெற்றது. அதனால் வரலாற்றில் முதல் முறையாக நடிகையாகவும் பாடகியாகவும் உள்ள ஒருவர் இப்பெருமை அடைந்தார் என்ற பெயரைப் பெற்றார்.[12] இவரது அடுத்த திரைப்படங்களான ஏஞ்சல் ஐஸ் (2001) இல், காதல் காட்சிகளிலும், எனஃப் (2002) ஆன்மா சார்ந்த பழிவாங்கும் திகில் திரைப்படத்திலும் இவரது பகுதி பரவலாக பேசப்பட்டது. இந்த இரண்டுமே பார்வையாளர்களால் குற்றம் காணப்பட்டு தோல்வியைத் தழுவியது, விமர்சகர்களும் அதையே எண்ணினர்.[13] ரோமாண்டிக் நகைச்சுவைத் திரைப்படம் மெய்ட் இன் மேன்ஹேட்டனில் (2002) ரால்ப் பியென்னஸுடன் இணைந்து லோபஸ் நடித்தார். இவரது பாத்திரம் மரிசா வென்சுரா ஆகும். அதில் புரொன்க்ஸில் வாழும் தனிமையில் தத்தளிக்கும் அம்மாவான அவர் மேன்ஹேட்டன் சொகுசு விடுதியில் அறைகளை சுத்தம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஒரு புகழ்பெற்ற அரசியல்வாதியால் சமுதாயம் அவரை தவறாகக் கருதுகிறது.[14] மேய்ட் இன் மேன்ஹேட்டன் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்று முதலிடத்தைப் பிடித்தது. த நியூயார்க் டைம்ஸ் திரைப்படங்களின் கதை ஓட்டத்தை லோபஸின் 2002 பாடலான "ஜென்னி ப்ரம் த ப்ளாக்"குடன் ஒப்பிட்டது. இதைக் பற்றிக் கருத்துரைக்கையில் ஜென்னி ப்ரம் த ப்ளாக் என்ற அவருடைய புதிய தனிப்பாடலில் ஜெனிஃபர் லோபஸ் பிரமாண்டமான திறமையையும் உலகளாவிய தரத்தையும் சோதித்து வெளிப்படுத்தியிருந்தார். அவர் அடிப்படைத் திறமையை இழக்கவில்லை" எனக் கூறியிருந்தது.[15]
அவரது பிற முக்கியமான பாரட்டுக்களைப் பெற்ற திரைப்படங்கள் ஆன் அன்பினிஷ்டு லைப் மற்றும் ஷல் வீ டான்ஸ்? போன்றவை அடங்கும். லோபஸ் தயாரித்த இரண்டு சார்பற்ற திரைப்படங்கள் திரைப்பட விழாக்களில் பெரும் வரவேற்பைப் பெற்றன: எல் கண்டண்ட் டொரொண்டோ சர்வதேச திரைப்பட விழாவிலும் பார்டர்டவுன் புரூஸெல்ஸ் திரைப்பட விழாவிலும் இடம் பெற்றது. அவரது மோன்ஸ்டர்-இன்-லா (2005) போன்ற திரைப்படம் ஆராவாரமற்ற வெற்றியைப் பெற்றது. எனினும் கிக்லி விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் ஏமாற்றத்தைத் தந்தது. 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த திரைபடமான எல் கண்டண்டில் லோபஸ் அவரது கணவரான பாடகர்-நடிகர் மார்க் அந்தோனியுடன் இணைந்து பணியாற்றினார். ஆங்கிலத் திரைப்படமான இதில் ஆக்கப்பூர்வமாக ஸ்பானிஷ் வரிகளைக் கொண்ட பாடல்களில் துணைத்தலைப்புகள் பயன்படுத்தப்பட்டன. மேலும் த பேக்-அப் ப்ளான் என்ற காதல் நகைச்சுவை திரைப்படத்திலும் நடித்துள்ளார். [16]
லோபஸ் ஹாலிவுட்டில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராவார். இருந்தபோதும் அவரது எந்த படங்களும் அமெரிக்காவில் $100 மில்லியன் வசூலைத் தாண்டியதில்லை. த ஹாலிவுட் ரிப்போர்டர்ஸின்' 2002, 2003, மற்றும் 2004 ஆம் ஆண்டின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் லோபஸின் பெயரும் இருந்தது.[17] மோன்ஸ்டெர்-இன்-லாவில் அவரது பாத்திரத்திற்காக லோபஸ் $15 மில்லியன் பெற்றார்.[18] இவருக்கு உள்நாட்டில் மிகவும் அதிக வசூல் ஈட்டித்தந்த திரைப்படமாக மெய்ட் இன் மேன்ஹேட்டன் $94,011,225 அளவு தொகையை ஈட்டித்தந்தது.[19] மேலும் அவருக்கு பெரிய வெற்றிபெற்ற சர்வதேசத் திரைப்படமான ஷல் வீ டான்ஸ்? சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் $112,238,000, வசூலைக் கடந்தது. உள்நாட்டில் ஷல் வீ டான்ஸ்? $57,890,460 வசூலைக் கடந்து மொத்தமாக உலகளவில் $170,128,460 ஐப் பெற்றது.[20] 2007 ஆம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் செய்தி இதழின் "கேலிக்கையாளர்களில் 20 செல்வமிக்க பெண்களின்" பட்டியலில் லோபஸ் ஒன்பதாவது இடத்தைப் பிடித்திருந்தார். 2007 ஆம் ஆண்டில் லோபஸின் சொத்து மதிப்பு $110 மில்லியன் என கணக்கிடப்பட்டது.[21]
இசை வாழ்க்கை
[தொகு]1999–2001: ஆன் த 6 மற்றும் ஜே. லோ
[தொகு]6 சுரங்கப்பாதை இணைப்புகளை மேற்கோள் காட்டி கேஸ்டில் ஹில்லில் எடுக்கப்பட்ட லோபஸின் முதல் ஆல்பம் ஆன் த 6 ஜூன் 1, 1999 அன்று வெளியானது. மேலும் பில்போர்ட் 200 இன் முதல் பத்து இடத்தை அடைந்தது. இந்த ஆல்பம்|பில்போர்ட் ஹாட் 100 இன் முதல் தர முன்னணி தனிப்பாடலாக "இப் யூ ஹேடு மை லவ்" என்ற பாடலும் அதே போன்று சிறந்த பத்து பட்டியலில் "வெய்ட்டிங் பார் டுநைட்" என்ற பாடலும் இடம் பெற்றது. மார்க் அந்தோனியுடன் (பின்பு லோபஸின் கணவரானார்) "நோ மீ ஆம்ஸ்" என்ற ஸ்பானிஷ் மொழி, லத்தின்-தன்மை சார்ந்த ஜோடிப்பாடலையும் இந்த ஆல்பம் கொண்டிருந்தது. இந்தப் பாடல் அமெரிக்க ஹாட் லத்தின் ட்ராக்குகளில் முதலிடத்தை அடைந்தது. எனினும் "நோ மீ ஆம்ஸ்" வணிக ரீதியாக வெளியிடப்படவில்லை. பில்போர்ட் ஹாட் 100 இல் நடுத்தரமான வெற்றியைப் பெற்ற ஆன் த 6 இன் "பீலின்' சோ குட்" டிராக் பிக் புன் மற்றும் பேட் ஜோ போன்ற கெளரவக் கலைஞர்களையும் கொண்டிருந்தது. "லெட்'ஸ் கெட் லவுடு" இந்த இறுதி தனிப்பாடலுக்கு 2001 கிராமி விருதுகளின் "சிறந்த நடனப் பதிவு" வகையில் லோபஸ் கிராமி விருது பரிந்துரையைப் பெற்றார்.[22] "வெய்ட்டிங் பார் டுநைட்" என்ற பாடல் இதே வகைக்காக முந்தைய ஆண்டில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.[23] "நோ மீ ஆம்ஸ்", 2000 லத்தின் கிராமி விருதுகளின் இரண்டு பரிந்துரைகளைப் பெற்றது. அவை — "சிறந்த பாப் இரட்டையர்/சிறந்த குழுப்பாடல்" மற்றும் "சிறந்த இசை வீடியோ"விற்கான பரிந்துரை ஆகியவை ஆகும்.
லோபஸின் இரண்டாவது ஆல்பமான ஜே.லோ ஜனவரி 23, 2001 அன்று வெளியிடப்பட்டது. மேலும் தொடக்கத்திலேயே பில்போர்ட் 200 இல் முதலிடத்தைப் பெற்றது. இந்த ஆல்பம் ஆன் த 6 ஐக் காட்டிலும் அதிகமாக நகர் சார்ந்த தன்மையைக் கொண்டிருந்தது. லோபஸின் திரைப்படமான த வெட்டிங் ப்ளானர் குறைந்த காலத்தில் முதலிடத்தை எட்டிய போது ஒரு நடிகையாக-பாடகராக திரைப்படமும் மற்றும் ஆல்பமும் அதே வாரத்தில் முதலிடத்தை கொண்டுள்ள முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றார்.[24] முன்னணித் தனிப்பாடலான "லவ் டோன்'ட் காஸ்ட் எ திங்" யுனைட்டட் கிங்டத்தில் லோபஸுக்கு முதன் முதலில் முதல்தர தனிப்பாடலாக அமைந்தது மேலும் அமெரிக்காவின் பில்போர்ட் ஹாட் 100 இல் அவரை சிறந்த ஐந்து இடத்திற்குள் கொண்டு சென்றது. அதைத் தொடர்ந்து அவர் இயற்றிய "ப்ளே", மற்றொரு முறை பில்போர்ட் ஹாட் 100 இல் லோபஸுக்கு சிறந்த இருபதைக் கொடுத்தது. மேலும் UKவில் மூன்றாவது இடத்தை அடைந்தது. அவரது அடுத்த இரண்டு தனிப்பாடல்களாக "ஐ'அம் ரியல்" மற்றும் "எய்ன்'ட் இட் ஃபன்னி" என்ற இரண்டு பாடல்களும் விரைவில் தரவரிசையில் உயர்ந்தது. இதை மூலதனமாய் மாற்ற த இன்க். ரெக்கார்ட்ஸை (பிறகு மர்டர் இன்க். என அறியப்படுகிறது) அந்த இரண்டு பாடல்களையும் ரீமிக்ஸ் செய்யக் கேட்டார். இந்தப் பாடல்களில் ராப் கலைஞர்களான ஜா ரூல் (இரண்டிலும்) மற்றும் கடிலாக் தக்கும் ("எய்ன்'ட் இட் ஃபன்னி" ரீமிக்ஸில்) பங்குபெற்றிருந்தனர். பல வாரங்களாக இரண்டு ரீமிக்ஸ்களும் பில்போர்ட் ஹாட் 100 இல் இடம்பெற்றிருந்தன. லோபஸ் அவரது முப்பத்தி இரண்டாவது பிறந்த நாளில் ஜே. லோ வை மறுவெளியீடு செய்தார். இதனுடன் "ஐ'அம் ரியலின்" ரிமிக்ஸ் உபரி டிராக்காக இணைக்கப்பட்டிருந்தது. மேலும் "குயூ இரோனியா"வின் வெற்றி காரணமாக "சி யா செ அகோபோ" ஸ்பெயினின் வெளியிடப்பட்டது. 2001 ஆம் ஆண்டில் லெட்'ஸ் கெட் லவுட் "லைவ் இன் புயூர்டோ ரிகோ" நிகழ்ச்சியில் லோபஸ் பங்கேற்றார் .
2002–2006: ஜே டூ த எல்-ஓ!, திஸ் இஸ் மீ... தென் அண்ட் ரீபர்த்
[தொகு]ஜே. லோ மறுவெளியீடு செய்யப்பட்டு அதன் வெற்றியைத் தொடர்ந்து லோபஸ் முழு ஆல்பத்தையும் ரிமிக்ஸ் செய்து J to tha L-O!: The Remixes ஐ பிப்ரவரி 5, 2002 அன்று வெளியிட முடிவுசெய்தார். இந்த ஆல்பம் தொடக்கத்திலேயே பில்போர்ட் 200 இல் முதலிடத்தைப் பெற்றது. மேலும் வரலாற்றில் முதல் தடவையாக இந்த ரிமிக்ஸ் ஆல்பம் தொடக்கத்திலேயே தரவரிசையில் சிறந்த நிலையை அடைந்தது.[25] ஜே டூ த எல்-ஒ!: த ரீமிக்ஸஸ் , பி. டிட்டி, பேட் ஜோ, மற்றும் நாஸ் உள்ளிட்ட கலைஞர்களைக் கொண்டிருந்தது. மேலும் இந்த ஆல்பம் ரேர் நடனம் மற்றும் ஹிப் ஹாப் போன்ற பழையத் தனிப்பாடல்களின் ரீமிக்ஸையும் கொண்டிருந்தது. மைக்கேல் ஜாக்சனின் பிளட் ஆன் த டான்ஸ் ஃபுளோர்: ஹைஸ்டோரி ஆன் த மிக்ஸ் , த பீட்லஸ்' லவ் மற்றும் மடோனாவின் யூ கேன் டான்ஸுக்கு ப் பிறகு இந்த ரீமிக்ஸ் ஆல்பம் வரலாற்றின் அனைத்து காலத்திலும் நான்காவது அதிக விற்பனையைப் பெற்றது.
லோபஸ் அவரது மூன்றாவது ஸ்டுடியோ ஆல்பமான திஸ் இஸ் மீ... தென் னை, நவம்பர் 26, 2002 அன்று வெளியிட்டார். இது பில்போர்ட் 200 இல் இரண்டாவது இடத்தை அடைந்தது மேலும் இதில் இடம் பெற்ற நான்கு தனிப்பாடல்கள்: "ஜென்னி ப்ரம் த ப்ளாக்" (ஜடகிஸ் மற்றும் ஸ்டைலஸ் பி பங்குபெற்றிருந்தனர்) பில்போர்ட் ஹாட் 100 இல் மூன்றாவது இடத்தைப் அடைந்தது; "ஆல் ஐ ஹேவ்" (எல்எல் கூல் ஜே பங்குபெற்றிருந்தார்), பல வாரங்களுக்கு முதலிடத்தையே தக்க வைத்திருந்தது; "ஐ'அம் கிளாட்"; மற்றும் "பேபி ஐ லவ் யூ!" ஆகியவை ஆகும். கார்லி சைமனின் 1978 "யூ பிலாங் டூ மீ" மேலட்டையை இந்த ஆல்பம் உள்ளடக்கியிருந்தது. 1983 திரைப்படமான ப்ளாஷ்டான்ஸில் இருந்த காட்சிகளை மீண்டும் உருவாக்கி "ஐ'அம் கிளாட்" வீடியோவானது எடுக்கப்பட்டது. ஆனால் சட்டத்திற்கு மாறாய் பிரதி எடுப்பதாக வழக்கு தொடரப்பட்டதால் பிறகு இந்தத் திட்டம் கைவிடப்பட்டது.[26][27]
ஒரு ஆண்டு இசைத் துறையில் இருந்து விலகி இருந்த பிறகு மார்ச் 1, 2005 அன்று லோபஸ் அவரது நான்காவது ஸ்டூடியோ ஆல்பமான ரீபர்த் தை வெளியிட்டார். தொடக்கத்திலேயே பில்போர்ட் 200 இல் உச்ச நிலையான இரண்டாவது நிலையை அடைந்தபோதும் இந்த ஆல்பம் விரைவிலேயே தரவரிசையில் இருந்து வெளியேறியது. இந்த ஆல்பத்தின் பாடலான "கெட் ரைட்" அமெரிக்காவில் சிறந்த பதினைந்து இடத்தை அடைந்தது. மேலும் லோபஸுக்கு ("இப் யூ ஹேடு மை லவ்"க்குப் பிறகு) இது இரண்டாவது பிளாட்டினம் வெற்றியாக அமைந்தது. "கெட் ரைட்" UKவிலும் வெற்றியைப் பெற்றது. மேலும் இரண்டாவது முதல்தர தனிப்பாடல் நிலையை அடைந்தது. இரண்டாவது தனிப்பாடலான பேட் ஜோ பங்கேற்றிருந்த "ஹோல்ட் யூ டவுன்" அமெரிக்க ஹாட் 100 இல் அறுபத்திநான்காவது நிலையை அடைந்தது; ஐக்கிய நாடுகளில் உச்சகட்டமாக ஆறாவது நிலையை அடைந்தது மேலும் ஆஸ்திரேலியாவின் சிறந்த இருபதிலும் இடம் பெற்றது. மற்றொரு பாடலான "செர்ரி பீ" 2005 இன் பிற்பகுதியில் வெளியிடத் திட்டமிடப்பட்டது. ஆனால் அதன் வீடியோ பதிவுத் திட்டம் இரத்து செய்யப்பட்டது. இது ஸ்பெயின் வனொலி நிலையங்களில் வெளியிடப்பட்டது. ரீபர்த் அமெரிக்காவின் பிளாட்டினம் என RIAAஐ இல் சான்றளிக்கப்பட்டது. பிறகு பிப்ரவரி 1, 2006 அன்று வெளியான எல்எல் கூல் ஜேவின் தனிப்பாடலான "கண்ட்ரோல் மைசெல்ப்"பில் லோபஸ் பங்கேற்றார். இது அமெரிக்காவின் பில்போர்ட் ஹாட் 100 இல் நான்காவது இடத்தைப் பெற்றது. மேலும் UK தனிப்பாடல்கள் தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பெற்றது. மூன்று வருடங்களில் இது லோபஸுக்கு முதல் அமெரிக்க சிறந்த பத்து வெற்றியாகும்.
2007-2008: கோமோ அம உன முஜெர் மற்றும் ப்ரேவ்
[தொகு]
2007 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கோமோ அம உன முஜெர் என்ற முதல் முழு ஸ்பானிஷ்-மொழி ஆல்பத்தை அதிகார்வப்பூர்வமாக லோபஸ் வெளியிட்டார். அவரது கணவரும் பாடகருமான மார்க் அந்தோனி இணைத் தயாரிப்பாளராக இருந்து ஜூலியோ ரேய்ஸுடன் தயாரித்த "குயூ ஹிகெஸ்டெ"வைத் தவிர்த்து எஸ்டிபனோவுடன் இணைந்து இந்த ஆல்பத்தை தயாரித்தார். இந்த ஆல்பம் உச்சகட்டமாக பில்போர்ட் 200 இல் பத்தாவது நிலையை அடைந்தது. மேலும் தொடர்ந்து நான்கு வாரங்களுக்கு அமெரிக்க சிறந்த லத்தின் ஆல்பங்களின் முதல் இடத்தையும் தொடர்ந்து ஏழு வாரங்களுக்கு அமெரிக்காவில் லத்தின் பாப் ஆல்பங்களில் முதல் இடத்தைப் பெற்றிருந்தது. முக்கியமாக சுவிச்சர்லாந்து, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், பெல்ஜியம், கிரீஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, மற்றும் போர்ச்சுகல் போன்ற நாடுகளில் அடைந்த பெரிய வெற்றியைத் தொடர்ந்து இந்த ஆல்பம் ஐரோப்பாவில் சிறப்பாக செயல்பட்டு ஆல்பத்தர வரிசையில் உச்சகட்டமாக மூன்றாவது நிலையை அடைந்தது. ஜூலை 24, 2007 அன்று பில்போர்ட் செய்தி இதழ் லோபஸும் அவரது கணவரான மார்க் அந்தோனியும் "இணைந்து-உச்சகட்டமாக" செப்டம்பர் 29 ஆம் தேதி நியூஜெர்சியில் "ஜுண்டோஸ் என் கான்செர்டியோ" என்ற ஒரு உலகளாவிய நிகழ்ச்சியைத் தொடங்கப்போவதாக செய்தி வெளியிட்டது.[28] ஆகஸ்ட் 10 ஆம் தேதி நுழைவுச்சீட்டுகள் விற்பனைக்கு வந்தது. இந்த நிகழ்ச்சி அவரது தற்போதைய இசை, பழைய இசை மற்றும் ஸ்பானிஷ் இசையைக் கலவையாக கொண்டிருந்தது. பிறகு ஒரு பதிப்பக வெளியீட்டில் லோபஸ் அவரது விளக்கமான பயணப் பட்டியலை அறிவித்தார். செப்டம்பர் 28, 2007 அன்று மார்க் ஜி. எடெஸ் அரங்கத்தில் இந்த நிகழ்ச்சி தொடங்கி நவம்பர் 7, 2007 அன்று புளோரிடாவின் மியாமியில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் அரங்கத்தில் முடிவுற்றது. முன்னணித் தனிப்பாடலான "குயூ ஹிகெஸ்டெ" ("வாட் டிட் யூ டூ"க்கான ஸ்பானிஷ்) 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வானொலி நிலையங்களில் அதிகார்வப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அதிலிருந்து இது உச்சகட்டமாக அமெரிக்கவில் பில்போர்ட் ஹாட் 100 இல் என்பத்து-ஆறாவது நிலையை அடைந்தது. மேலும் ஹாட் லத்தின் பாடல்கள் மற்றும் ஹாட் நடன கிளப் இசையில் முதல் இடத்தைப் பெற்றது. இது ஐரோப்பிய தரவரிசையிலும் சிறந்த பத்து இடத்திற்குச் சென்றது. இந்தப் பாடலின் வீடியோ, எம்டிவியின் டோட்டல் ரிக்வெஸ்ட் லைவ் தினக் கணக்கீட்டில் உச்சகட்டமாக முதல் நிலையை அடைந்த முதல் ஸ்பானிஷ் வீடியோவானது. இரண்டாவது தனிப்பாடல் வெளியீடு "மீ ஹாசஸ் பால்டா" என்றும் மூன்றாவதாக "போர் அரீஸ்கர்னோஸ்" என்றும் அழைக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டில் பிரபலமான லத்தின் கலைஞர் என்ற அமெரிக்க இசை விருதை லோபஸ் வென்றார். கோமோ அம உன முஜெருடன், பில்போர்ட் 200 இன் சிறந்த 10 இல் அரங்கேறிய ஸ்பானிஷ் ஆல்பங்கள் சிலவற்றில் ஜெனிஃபர் லோபஸுடைய ஆல்பமும் ஒன்றாக அமைந்தது.
கோமோ அம உன முஜெர் வெளியான ஆறு மாதங்களுக்குப் பிறகு அக்டோபர் 9, 2007 அன்று லோபஸ் தனது ஐந்தாவது (மொத்தமாக ஆறாவது ஸ்டுடியோ ஆல்பம்) ஆங்கில ஸ்டூடியோ ஆல்பமான ப்ரேவ் வை வெளியிட்டார். தயாரிப்பாளர்களான மிடி மபியா, ஜே. ஆர். ரோடெம், லைன் மற்றும் வேட் மற்றும் ரைன் டெட்டெர், ரோட்டமுடன் சில டிராக்குகளில் இணைந்து பணியாற்றிய தொழில் கூட்டாளி ஈவன் "கிட்" போகர்ட் ஆகியோருடன் லோபஸ் சேர்ந்து பணியாற்றினார்.[29] முன்பு ஆகஸ்ட் 26, 2007 அன்று ABC இன் டெஸ்பெரடெ ஹவுஸ்வைவ்ஸின் நான்காவது பருவத்திற்கு முதல் தடவையாக விளம்பரப்படுத்தும் போது "மைல் இன் தீஸ் சூஸ்" பாடலின் சிறு பகுதி இடம் பெற்றது. "டூ இட் வெல்" ஒரு முன்னணிப் பாடலாக வெளியிடப்பட்டது. மேலும் பல நாடுகளில் சிறந்த 20வதை இந்தப் பாடல் அடைந்தது. "ஹோல்ட் இட், டோன்'ட் ட்ராப் இட்", இரண்டாவது தனிப்பாடலாக குறிப்பிட்ட ஐரோப்பிய பிரதேசங்களில் மட்டும் வெளியானது. தலைப்புப் பாடலான "ப்ரேவ்" மூன்றாவது தனிப்பாடலாக அமைக்கப்பட்டது. மேலும் இந்தத் தனிப்பாடலுக்கான இசை வீடியோவுக்கான படப்பிடிப்பு முடிவுற்றது என மைக்கேல் ஹவுஸ்மன்னின் அதிகார்வப்பூர்வ வலைத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டது. ஆனால் அந்தத் தனிப்பாடல் வெளியிடப்படவில்லை.
பிற திட்டப்பணிகள்
[தொகு]ஏப்ரல் 10, 2007 அன்று லோபஸ் அமெரிக்கன் ஐடியலில் ஒரு ஆலோசகராக பணியாற்றினார்.[30] ஜனவரி 15, 2007 அன்று தொடங்கப்பட்டு ஓடிய எம்டிவியின் டான்ஸ்லைப் நேரலை நிகழ்ச்சியின் எட்டாவது பாகத்தின் செயல் தயாரிப்பாளராகவும் லோபஸ் இருந்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களை தேர்ந்தெடுக்க லோபஸ் உதவினார் மேலும் நிகழ்ச்சியின் பிரதிநிதியாகவும் தோன்றினார். யுனிவிசனில் ஒளிபரப்பப்பட்ட ஒரு குறுந்தொடரில் செயல் தயாரிப்பாளராகவும் லோபஸ் பணியாற்றினார். [31]
தொழில்
[தொகு]2003 ஆம் ஆண்டில் லோபஸ் ஆடை வியாபாரத்தை நிறுவினார். ஜேஎல்ஓ என ஜெனிஃபர் லோபஸ் இதற்கு பெயரிட்டிருந்தார். ஜீன்ஸ், டீ-சர்ட்கள், மேலுடுப்புகள், இடைவார்கள், பர்சுகள், மற்றும் உள்ஆடை உள்ளிட்ட இளபெண்களுக்கான பல்வேறு வகையான ஆடைகளை வியாபாரம் செய்தார். அணிகலன் வியாபாரம்,[32] மற்றும் தொப்பிகள், கையுறைகள், மற்றும் ஸ்கார்வ்ஸ் உள்ளிட்ட உபயோகப்பொருள்கள் வியாபரம் போன்றவற்றையும் மேற்கொண்டார்.[33] [34] அவரது ஆடை அலங்கார வேலைகள் நியூயார்க்கின் பல ஆடை அலங்கார வார நிகழ்ச்சிகளில் இடம்பெற்றது. ஏப்ரல் 12, 2002 அன்று கலிபோர்னியாவின் சவுத் லேக் வட்டாரமான பாசதேனாவில் மேட்ரீ'ஸ் பரணிடப்பட்டது 2010-05-15 at the வந்தவழி இயந்திரம் எனப் பெயரிடப்பட்ட கியூபாவின் உணவுவிடுதியை லோபஸ் திறந்தார்.
லோபஸ் துணிந்து நறுமணப் பொருள் துறையில் முதன்முறையாக "க்ளோ பை ஜே.லோ" அரங்கேற்றினார். அக்டோபர் 2003 அன்று லோபஸ் "ஸ்டில்" என்றழைக்கப்படும் பெர்ஃப்யூமை அறிமுகப்படுத்தினார். அவரது முந்தைய ஆண்டில் "க்ளோவை" மீண்டும் குறைந்த அளவு வெளியீடாக "மியாமி க்ளோ பை ஜே.லோ" என்ற பெயரில் அவரது சொந்த ஊரான மியாமிக்கு மரியாதை செலுத்தும் விதமாக வெளியிட்டார். லோபஸ் மேலும் "க்ளோ" வியாபாரத்தில் பாடி லோசன் மற்றும் வெண்கலப் பொருள்களையும் விற்பனை செய்தார். 2005 ஆம் ஆண்டில் கிறிஸ்துமஸ் பருவத்திற்காக "லிவ் பை ஜெனிஃபர் லோபஸ்" என்ற மற்றொரு நறுமணப் பொருளை நிறுவினார். 2006 வேலண்டைன்ஸ் டே, மற்றோரு "க்ளோ" தயாரிப்பான "லவ் அட் பர்ஸ்ட் க்ளோவ் பை ஜே.லோ" மூலம் "மியாமி க்ளோ" மாற்றியமைக்கப்பட்டது. அவரது அந்த நறுமணப்பொருளைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் "லைவ் லக்ஸ்" வெளியிடப்பட்டது. அதனுடன் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் "க்ளோ ஆஃப்டர் டார்க்" வெளியிடப்பட்டது. ஜெனிஃபர் லோபஸின் அடுத்த நறுமணப்பொருளான "டேஸியோ" ஆசிய சந்தைக்கான "டேஸியோ பார்எவர்" மற்றும் முதல் ஆண் நறுமணப்பொருள் "டேஸியோ பார் மென்" ஆகும். 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் லோபஸ் "சன்கிஸ்டு குளோ"வை வெளியிட்டார். கடைசி நறுமணப்பொருளான "மை க்ளோ" 2009 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் கிடைக்கிறது.[35] தொலைக்காட்சியில் தோன்றி வணிகரீதியாக பொருள்களை பற்றிய பொருள் விளக்குபவர்களில் லோபஸ் ஜப்பானின் லக்ஸ் சாம்புவை விளம்பரபடுத்துபவர் ஆவார்.
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனமான நுயூரிகன் புரொடக்சன்ஸை லோபஸ் வைத்துள்ளார். இந்நிறுவனத்திலிருந்து பெறப்படும் வருவாயில் பாதியை தரப்படும் என எதிர்பார்க்கப்படும் அவரது மேலாளரான பென்னி மெடினாவுடன் இணைந்து இந்த நிறுவனம் நிறுவப்பட்டதாகும்.[36] நிறுவனம் நிறுவப்பட்ட பிறகு மெடினாவிடம் இருந்து லோபஸ் திடீரெனப் பிரிந்தார். ஆனால் பிறகு அவர்களது தொழில் தொடர்பை மீண்டும் புதுப்பித்துக் கொண்டனர்.[37]
2006 ஆம் ஆண்டின் "50 மோஸ்ட் பியூட்டிபுல்" பதிப்பு மற்றும் 2007 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் "100 மோஸ்ட் இன்புளுயென்சியல் ஹிஸ்பானிக்ஸ்" என்ற பதிப்பு என இரண்டு கட்டுரைகளில் பீபிள் என் எஸ்பனோல் பத்திரிக்கையால் லோபஸ் அங்கீகரிக்கப்பட்டார்.
சொந்த வாழ்க்கை
[தொகு]நவம்பர் 7, 2007 அன்று "என் கான்செர்டியோ" நிகழ்ச்சியின் கடைசி இரவில் அவரது கணவர் மார்க் அந்தோனியின் மூலம் லோபஸ் முதல் குழந்தையை பெறப்போவதாக உறுதிசெய்தார். இந்த அறிவிப்பு கருவுற்றதாக ஊகம்செய்யப்பட்டு ஒரு மாதம் முடிந்த நிலையில் வெளியிடப்பட்டதாகும்.[38] பிப்ரவரி 5, 2008 அன்று லோபஸுக்கு இரட்டை குழந்தைகள் பெறப்போவதாக எதிர்பார்க்கப்படுகிறது என பிறகு அவரது அப்பா உறுதி செய்தார்.[39] பிப்ரவரி 22, 2008 அன்று உடன்பிறந்த இரட்டை குழந்தைகளான எம்மி மரிபெல் முபிஸ் மற்றும் மேக்ஸிமிலன் "மேக்ஸ்" டேவிட் முபிஸ் என்ற ஒரு பெண் மற்றும் ஆண்குழந்தையை லோபஸ் பெற்றெடுத்தார். மார்ச் 11, 2008 அன்று பீபில் செய்தி இதழில் இந்த இரட்டைக்குழந்தைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதற்காக $6 மில்லியன் பணம் கொடுக்கப்பட்டது.[40][41]
மனித உரிமைகள் ஆதரவு
[தொகு]பிப்ரவரி 14, 2007 அன்று "மெக்ஸிகோ எல்லை நகரமான ஜூவரெஸ்ஸில் நடந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான பெண் படுகொலைகளை பார்டர்டவுன் என்ற திரைப்படத்தில் ஒரு தயாரிப்பாளராகவும், ஒரு நடிகையாகவும் வெளிப்படுத்தியதற்காக அவரது பணிக்கு அங்கீகரிக்கப்பட்டு" லோபஸ் கலைஞர்களுக்கான அமெஸ்டி சர்வதேச விருது பெற்றார். பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் அமைதிக்கான நோபல் பரிசை வென்ற ஜோஸ் ராமோஸ்-ஹோர்டா, லோபஸுக்கு இந்த விருதை பரிசளித்தார்.ஜ் மேலும் அவர் நியூஸ்ட்ரஸ் ஹிஜஸ் டெ ரிக்ரெசொ எ கசா ஏ.சி. இணை-அமைப்பாளரான நோர்மா ஆண்ட்ரேட்டிடம் இருந்து சிறப்பு அங்கீகாரத்தையும் நன்றியையும் பெற்றார் ("மே அவர் டாட்டர்ஸ் ரிட்டன் ஹோம், சிவில் அசோசியேசன்"), இது கொலை செய்யப்பட்ட பெண் ஜூவாரெஸின் போன்று அம்மாக்களையும் குடும்பங்களையும் கொண்ட அமைப்பாகும்.
தடுப்பூசிப் பரிந்துரை
[தொகு]லோபஸ் கக்குவான் இருமலுக்கான தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு ஊக்குவிப்பதிலும் ஈடுபட்டு வருகிறார்.[42] லோபஸ் கக்குவானின் ஒலிகள் மற்றும் டைம்களின் அணிவகுப்பு என்ற பணியை அந்த நோய்க்கான விழிப்புணர்வு மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை ஊக்குவிப்பதற்காக செய்துவருகிறார்.[42][43]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Duty Captain's Report". Court TV. January 17, 2001. Archived from the original on 2008-02-09. Retrieved 2006-10-29.
- ↑ "J.Lo tops list of most influential Hispanics". Reuters. January 4, 2007. Retrieved 2007-02-12.
- ↑ "American Idol Lineup to Include Gwen Stefani, Jennifer Lopez, Diana Ross". Showbiz Spy. February 23, 2007. Archived from the original on 2008-03-16. Retrieved 2007-03-25.
- ↑ ஜெனிஃபர் லோபஸ் பயோகிராபி (1970?-). FilmReference.com . 2007-7-21 அன்று பெறப்பட்டது.
- ↑ (ஆகஸ்ட் 6, 2008). "ஜெனிஃபர் லோபஸ் பயோகிராபி" பாக்ஸ் செய்திகள் ஜூன் 22, 2009 அன்று பெறப்பட்டது.
- ↑ "Jennifer Lopez Biography". People.com. Archived from the original on 2010-07-29. Retrieved 2008-02-29.
- ↑ "Jennifer López Bio". Retrieved 2009-05-23.
- ↑ Schwarzbaum, Lisa (1997-04-18). "Anaconda:Movie Review". Entertainment Weekly. http://www.ew.com/ew/article/0,,287550,00.html. பார்த்த நாள்: 2009-06-23.
- ↑ "Anaconda (1997): Reviews". Metacritic. Retrieved 2008-02-17.
- ↑ 10.0 10.1 "ஜெனிஃபர் லோபஸ்:பயோகிராபி" பரணிடப்பட்டது 2010-07-21 at the வந்தவழி இயந்திரம் MSN ஜூன் 22, 2009 அன்று பெறப்பட்டது.
- ↑ "Jennifer Lopez pics". AskMen.com. Archived from the original on 2007-01-13. Retrieved 2007-01-13.
- ↑ Cohen, Jonathan (2001-01-31). "Lopez Bows At No. 1; O-Town, Dream Debut High5". Billboard (Nielsen Business Media, Inc). http://www.billboard.com/bbcom/news/article_display.jsp?vnu_content_id=474548&zxtmsessid=4459230781. பார்த்த நாள்: 2009-06-22.
- ↑ Gleiberman, Owen (2002-05-22). "Lopez Bows At No. 1; O-Town, Dream Debut High5". Entertainment Weekly. http://www.billboard.com/bbcom/news/article_display.jsp?vnu_content_id=474548&zxtmsessid=4459230781. பார்த்த நாள்: 2009-06-22.
- ↑ கேரி சுஸ்மன் (2002-12-09). "கீப்ப்ங் இட் ரீல்" பரணிடப்பட்டது 2009-06-16 at the வந்தவழி இயந்திரம். எண்டெர்டெய்ன்மெண்ட் வீக்லி 2009-06-24 அன்று பெறப்பட்டது.
- ↑ ஏ.ஓ. ஸ்காட் (2002-12-13). "திரைப்பட விமர்சனம்; புட்டின்' டவுன் மோப், புட்டின்' ஆன் த ரிட்ஸ்". த நியூ யார்க் டைம்ஸ் 2009-06-24 அன்று பெறப்பட்டது.
- ↑ டேவிட் ஸ்டன்லே போர்டு (2009-06-03). "'த பேக்-அப் ப்ளான்'"க்காக ஜெனிஃபர் லோபஸ் திரும்பினார் பரணிடப்பட்டது 2009-08-21 at the வந்தவழி இயந்திரம். NewsOK.com 2009-06-24 அன்று பெறப்பட்டது.
- ↑ நிக்கோல் கிட்மன் டாப்ஸ் த ஹாலிவுட் ரிப்போர்டர்'ஸ் ஆனுவல் ஆக்ட்ரஸ் செலரி லிஸ்ட். பரணிடப்பட்டது 2007-05-11 at the வந்தவழி இயந்திரம் (நவம்பர் 30, 2006). ItsaSurvey.com. 9-05-2009 அன்று பெறப்பட்டது.
- ↑ "Actress Jennifer Lopez [The Movie Times] - Box Office, Movies, Gallery, Biography, and more". The-movie-times.com. Archived from the original on 2009-10-27. Retrieved 2009-10-07.
- ↑ "Maid in Manhattan (2002)". Box Office Mojo. Retrieved 2009-10-07.
- ↑ "Shall We Dance (2004)". Box Office Mojo. 2005-02-24. Retrieved 2009-10-07.
- ↑ Lea Goldman and Kiri Blakeley (January 18, 2007). "In Pictures: The Richest 20 Women In Entertainment". Forbes. Retrieved 2007-01-28.
- ↑ 43வது கிராமி விருதுகள் - 2001. Rockonthenet.com . 2007-7-21 அன்று பெறப்பட்டது
- ↑ 42வது கிராமி விருதுகள் - 2000. Rockonthenet.com . 2007-7-21 அன்று பெறப்பட்டது
- ↑ Josh Tyrangiel (August 13, 2005). "Jennifer Lopez". டைம் இம் மூலத்தில் இருந்து 2009-03-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090301064251/http://www.time.com/time/nation/article/0%2C8599%2C1093638%2C00.html. பார்த்த நாள்: 2007-01-13.
- ↑ "Jennifer Lopez Biography Page". FamousQT.com. Archived from the original on 2007-03-12. Retrieved 2007-01-13.
- ↑ Neil J. Rosini and Michael I Rudell (October 27, 2006). "Life Story Releases: "Flashdance" & "Chorus Line"". New York Law Journal. Archived from the original on 2007-02-09. Retrieved 2007-05-12.
- ↑ Leslie Simmons (June 12, 2006). "9th Circuit Upholds Win for Lopez, Studios in 'Flashdance' Case". The Hollywood Reporter. Retrieved 2007-05-12.
- ↑ ஜோனாதன் கோஹன் (ஜுலை 24, 2007) லோபஸ், அந்தோனி கன்பார்ம் ஜாயிண்ட் பால் டூர் Billboard.com . 2008-02-21 அன்று பெறப்பட்டது.
- ↑ "Producer J. R. Rotem Helping 50 Get Soul, Tossing Beats For Dr. Dre". VH1. December 19, 2006. Archived from the original on 2010-08-31. Retrieved 2007-01-13.
- ↑ Don Kaplan (February 22, 2007). "J. Lo to Sing on 'American Idol'". Fox News. Retrieved 2007-03-11.
- ↑ கோமோ அம உன முஜெர் பரணிடப்பட்டது 2011-07-29 at the வந்தவழி இயந்திரம் Univision.com . 2008-02-21 அன்று பெறப்பட்டது.
- ↑ "Multimillion-dollar venture parlays megastar's brand appeal with trendy, affordable styles". February 1, 2004. Archived from the original on 2010-02-17. Retrieved 2007-11-22.
- ↑ Nick Galvin (October 4, 2003). "Exchanging vowels". The Age. Retrieved 2007-01-13.
- ↑ Suzanne D'Amato (January 28, 2007). "Style Stars". The Washington Post. Retrieved 2007-04-05.
- ↑ "JLo Fragrance". Jenniferlopezbeauty.com. Retrieved 2009-11-01.
- ↑ Laura M. Holson (July 14, 2003). "When Jenny Dumped Benny". New York Times. http://www.nytimes.com/2003/07/14/business/when-jenny-dumped-benny.html?sec=&spon=&pagewanted=all. பார்த்த நாள்: 2009-05-25.
- ↑ Courtney Hazlett (February 8, 2009). "J.Lo puts music on back burner". MSNBC. Archived from the original on 2009-04-13. Retrieved 2009-05-25.
- ↑ "Singer Lopez confirms pregnancy". BBC. November 8, 2007. http://news.bbc.co.uk/1/hi/entertainment/7084486.stm. பார்த்த நாள்: 2007-11-09.
- ↑ "Jennifer Lopez's Dad Confirms Twins". People.com. February 5, 2008. Retrieved 2008-02-06.
- ↑ "Jennifer Lopez & Marc Anthony Welcome Twins!". People.com. February 22, 2008. Retrieved 2008-02-22.
- ↑ "Jennifer Lopez & Marc Anthony Reveal Baby Names". People.com. Retrieved 2008-02-29.
- ↑ 42.0 42.1 Brady, Jonann (22 April 2009). "Jennifer Lopez Getting Her Work Mojo Back". ABC News. http://www.abcnews.go.com/Entertainment/Parenting/story?id=7395906&page=1. பார்த்த நாள்: 24 September 2009.
- ↑ "Pertussis (Whooping Cough) Protection For Your Baby". SoundsOfPertussis.com. Archived from the original on 2010-01-24. Retrieved 2009-10-07.
ஆதாரங்கள்
[தொகு]- Reyes, Luis (2000). Hispanics in Hollywood: A Celebration of 100 Years in Film and Television. iFilm Publishing/Lone Eagle. ISBN 978-1-58065-025-0.
- Marquez, Herón (2001). Latin Sensations. Twenty-First Century Books. ISBN 9780822549932. Retrieved July 3, 2012.
- Gallick, Sarah (2003). National Enquirer (ed.). J.Lo: The Secret Behind Jennifer Lopez's Rise to the Top. From the Files of the National Enquirer Series. Ami Books. ISBN 1-932270-07-8.
- Negrón-Muntaner, Frances (2004). Boricua pop: Puerto Ricans and the latinization of American culture. New York: New York Univ. Press. ISBN 0814758185.
- Deanne, Stacy; Kenyatta, Kelly; Lowery, Natasha (2005). Sanders, Kwynn (ed.). Alicia Keys, Ashanti, Beyoncé, Destiny's Child, Jennifer Lopez & Mya: Divas of the New Millennium. Amber Books Publishing. ISBN 9780974977966.
- Mendible, Myra (2007). From Bananas to Buttocks: The Latina Body in Popular Film and Culture. University of Texas Press. ISBN 9780292714939.
- Redmond, Sean (2007). Holmes, Su (ed.). Stardom and Celebrity: A Reader. SAGE. pp. 282–283. ISBN 978-1446202388.
- Bruns, Roger (August 30, 2008). Icons of Latino America: Latino Contributions to American Culture, Volume 1 and 2. Greenwood Publishing Group. ISBN 9781573567961.
- Tracy, Kathleen A. (September 30, 2008). Jennifer Lopez: A Biography. Greenwood Publishing Group. ISBN 9780313355165. Retrieved February 22, 2024.
- Cottrell, Robert C. (2009). Icons of American Popular Culture: From P. T. Barnum to Jennifer Lopez. M. E. Sharpe. ISBN 9780765628350.
- Parish, James Robert (2009). Jennifer Lopez. New York: Infobase Publishing. ISBN 9781438111919. Retrieved February 22, 2024.
- Riley, Sam G. (2010). Star Struck: An Encyclopedia of Celebrity Culture. ABC-CLIO. ISBN 9780313358135. Retrieved February 24, 2024.
- Ovalle, Priscilla Peña (2011). Dance and the Hollywood Latina: Race, Sex, and Stardom. Rutgers University Press. ISBN 978-0813548807.
- Lopez, Jennifer (2014). True Love. Celebra. ISBN 9780451468680.
- Woog, Adam (2020). The Great Hispanic Heritage Series: Jennifer Lopez, Updated Edition. Infobase Publishing. ISBN 9781438197999.
வெளி இணைப்புகள்
[தொகு]
- Jennifer Lopez – official site
- JLo Beauty – official beauty site
- லோபஸ் ஜெனிஃபர் லோபஸ் டிசுக்கோக்சு இல்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஜெனிஃபர் லோபஸ்
- Jennifer Lopez at அழுகிய தக்காளிகள்
- Appearances on C-SPAN