காற்பந்து (சங்கக் காற்பந்து)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருப்பு வெளுப்பில் துண்டித்த இருபதுமுக முக்கோணக வடிவமைப்புக் கொண்ட புழக்கத்திலுள்ள அடிடாசு டெல்சுடார் வகை பந்து.

காற்பந்து, உதைபந்து அல்லது சங்கக் காற்பந்து என்பது காற்பந்தாட்டத்தில் பயன்படுத்தப்படும் பந்து ஆகும். இந்தப் பந்தின் கோள வடிவம், அளவு, எடை, மற்றும் தயாரிக்கப்படும் பொருள் ஆகியவற்றை பன்னாட்டுக் கால்பந்துச் சங்க வாரியம் பராமரிக்கும் காற்பந்தாட்டச் சட்டங்களின் சட்டம் 2 வரையறுக்கிறது. பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பும் அதன் கீழுள்ள கட்டுப்பாட்டு அமைப்புகளும் அவை நடத்தும் போட்டிகளுக்குக் கூடுதலான, மேலும் கடுமையான, சீர்தரங்களை வரையறுக்கின்றன.

துவக்க காலத்தில் விலங்குகளின் சவ்வுப்பையையும் இரைப்பையையும் காற்பந்துகளாகப் பயன்படுத்தினர். இவை நிறைய உதைபடும்போது கிழிபட்டன. மெதுவாக தற்காலத்தில் உள்ளவை போன்று காற்பந்துகள் மேம்படத் தொடங்கின. சார்லசு குட்யியர் மற்றும் டொமெனிக்கோ நோபிலி போன்றவர்கள் இயற்கை மீள்மம் மற்றும் வன்கந்தக கடினமாக்கல் முறைகளால் காற்பந்தின் வடிவமைப்பை மேம்படுத்தினர். தொழில்நுட்ப ஆராய்ச்சிகளால் இன்று மேம்பட்ட திறனுடைய காற்பந்துகள் தயாரிக்கப்படுகின்றன; இவற்றை மேம்படுத்தும் தொழில்நுட்ப ஆய்வுகளும் தொடர்கின்றன.

தயாரிப்பாளர்கள்[தொகு]

உலகின் பல நிறுவனங்கள் காற்பந்தைத் தயாரிக்கின்றன. இவற்றில் 40% காற்பந்துகள் பாக்கித்தானின் சியால்கோட்டில் தயாரிக்கப்படுகின்றன.[1] துவக்ககாலப் போட்டிகளில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பந்துகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. 1962 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளில் விளையாடப்பட்ட பந்துகள் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அடிடாசு சான்டியாகோ எனப் பெயரிடப்பட்ட பந்தைத் தயாரித்தது.[2] – இதனால் 1970 முதல் அனைத்து அலுவல்முறை பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் ஆட்டங்களுக்கும் அடிடாசு பந்து தயாரித்து வழங்குகிறது. மேலும் 2008 ஒலிம்பிக் காற்பந்தாட்டங்களுக்கும் பந்து தயாரித்து வழங்கியுள்ளது.[3] யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு போட்டிகளுக்கு அடிடாசு பினாலே எனப்படும் பந்தைத் தயாரிக்கின்றனர்.

உலகக்கோப்பை காற்பந்து[தொகு]

உலகக்கோப்பை காற்பந்து இறுதிப்போட்டிகளில் கீழ்கண்ட காற்பந்துகள் பயன்படுத்தப்பட்டன:

உலகக்கோப்பை பந்து(கள்) படிமம் தயாரிப்பாளர் கூடுதல் தகவல் மே.சா
1930 1930 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இரு வெவ்வேறான பந்துகள் பயன்படுத்தப்பட்டன: அர்கெந்தீனா முதல்பாதிக்கான பந்தை ( 'டியென்டோ') வழங்கி இடைவேளையின்போது 2–1 என முன்னணியில் இருந்தது; நடத்துகின்ற நாடான உருகுவை இரண்டாம் பாதிக்கான பந்தை வழங்கி (பெரியதும் கனமானதுமான 'டி-மாடெல்')[2] போட்டியை 4–2 என வென்றது. [2][4]
1934 பெடரேல் 102 Federale 102.jpg ஈசிஏஎஸ் (Ente Centrale Approvvigionamento Sportivi), உரோம் [5]
1938 Allen-1938.jpg ஆல்லென், பாரிசு [6]
1950 டூப்ளோ டி Duplo T-1950.jpg சூப்பர்பால் [7]
1954 சிவிசு உலக சாம்பியன் Swiss World Champion-1954.jpg கோசுட்டு இசுபோர்ட்டு, பேசல் முதல் 18-முக பந்து. [4][8]
1958 டாப் இசுட்டார் Top Star-1958.jpg சித்வென்சிக்கா லாடெர் ஓச் ரெம்பாஃப்ரிகென், அங்கிள்ஹோம் (அல்லது "ரெம்மென்" அல்லது "சிட்லேடர்") 102 பந்துகளிலிருந்து நான்கு ஃபிஃபா அலுவலர்களால் கண்ணைக் கட்டிய சோதனையில் தெரிந்தெடுக்கப்பட்டது. [9][10]
1962 கிராக்
டாப் இசுட்டார்
Crack-1962.jpg செனர் குசுடோடியோ சமோரா எச்., சான் மிகுவல், சிலி
ரெம்மன்
கிராக் அலுவல்முறைப் பந்தாக இருந்தது. ஆட்டநடுவர் கென் ஆசுட்டன் துவக்க ஆட்டத்திற்கு சிலி வழங்கிய பந்தில் திருப்தியடையாது இரண்டாம் பாதிக்கு ஐரோப்பிய பந்தை வரவழைத்தார். வெவ்வேறு ஆட்டங்கள் வெவ்வேறான பந்துகளைப் பயன்படுத்தின. ஐரோப்பிய அணிகள் உள்ளூர் பந்தை நம்பவில்லை என்ற வதந்தி இதனால் எழுந்தது.[2] [2][4][9][11]
1966 சாலெஞ்ச் 4-இசுட்டார் Challenge 4-star-1966.jpg இசுலாசெஞ்சர் ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிற 18-முகப் பந்து. சோகோ சதுக்கத்தில் இருந்த காற்பந்துச்சங்க தலைமையகத்தில் கண்ணைக் கட்டிய சோதனைகள் மூலம் தேர்ந்தெடுத்தனர். [4][12]
1970 டெல்சுட்டார் Adidas Telstar Mexico 1970 Official ball.jpg அடிடாசு ஃபிஃபா உலகக்கோப்பை போட்டிகளில் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்ட முதல் 32-பட்டை கருப்பு-வெள்ளை பந்து டெல்சுட்டார் ஆகும். அடிடாசினால் 20 பந்துகளே வழங்கப்பட்டன. பழுப்பு வண்ண பந்தும் (செருமனி-பெரு) வெள்ளைப் பந்தும் (இத்தாலி-செருமனியின் முதல் பாதி) சில ஆட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டன. [4][13]
1974 அடிடாசு டெல்சுட்டார் துர்லாசுட்டு Fifaworldcup1974.JPG அடிடாசு [4]
1978 டாங்கோ Adidas Tango Argentina (River Plate) 1978 cup Official ball.jpg அடிடாசு [4]
1982 டாங்கோ எசுப்பானா Adidas Tango España.jpg அடிடாசு [4]
1986 அசுடெக்கா Adidas Azteca Mexico 1986 Official ball.jpg அடிடாசு முதல் முழுமையும் செயற்கையானத் தொகுப்பாலான, கைகளால் தைக்கப்பட்ட உலகக்கோப்பைப் பந்து [4]
1990 எட்ருசுக்கொ யூனிக்கொ அடிடாசு [4]
1994 கெசுட்டரா[14] Adidas Questra USA 1994 Official ball.jpg அடிடாசு [4]
1998 டிரைகலோர் அடிடாசு உலகக்கோப்பை இறுதியாட்டங்களில் முதன்முதலாக பல வண்ணப் பந்து [4]
2002 பெவெர்நோவா அடிடாசு முக்கோண வடிவமைப்புக் கொண்ட முதல் உலகக்கோப்பைப் பந்து. [4]
2006 டீம்கெய்சுட்டு Teamgeist Ball World Cup 2006 Brazil vs. Croatia.jpg அடிடாசு டீம்கெய்சுட்டு 14 பட்டை பந்து. உலகக்கோப்பை போட்டியின் ஒவ்வொரு ஆட்டமும் தனித்தனி பந்தை பயன்படுத்தியது. பந்திலேயே ஆட்டம் நடந்த நாள், விளையாட்டரங்கம், அணிப் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன.[3] 2006 உலகக்கோப்பை இறுதியாட்டத்திற்கு தங்க வண்ண டீம்கெய்சுட்டு பெர்லின் பந்து பயன்படுத்தப்பட்டது. [4]
டீம்கெய்சுட்டு பெர்லின் Teamgeist Ball World Cup 2006 Finale.jpg
2010 ஜாபுலானி அடிடாசு இந்தப் பந்திற்கு எட்டுப் பட்டைகள் இருந்தன. 2010 உலகக்கோப்பை இறுதியாட்டத்திற்கு தங்க வண்ண ஜோபுலானி (இடப்புறப் படிமம்), பயனானது. இறுதியாட்டம் நிகழ்ந்த ஜோகானஸ்பேர்க்கின் தென்னாபிரிக்க விளிப்பெயரான "ஜோ'பர்கிலிருந்து," பந்துக்கு பெயரிடப்பட்டது. [4][15]
ஜோபுலானி
2014 பிராசுக்கா அடிடாசு இரசிகர்களால் பெயரிடப்பட்ட முதல் உலகக்கோப்பை பந்து இதுவாகும். இறுதியாட்டதிற்கு சிறப்பான தனிப்பதிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வடிவமும் வண்ணமும் இன்னமும் வெளியாகவில்லை. [4][16]

ஒருங்குறி[தொகு]

ஒருங்குறி 5.2 ⚽ (U+26BD சாக்கர் பந்து) எஎன்ற அச்சை அறிமுகப்படுத்தியுள்ளது; இதனை மீயுரையில் அல்லது எனக் குறிப்பிடலாம்.[17] 2008இல் கார்ல் பென்ட்சுலின் முன்மொழிதலின் மூலம் இச்சேர்க்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.[18]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Adidas – All posts tagged Adidas". The Wall Street Journal. http://blogs.wsj.com/indiarealtime/tag/adidas/. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 The Blizzard: Issue 6. 2012. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-908940-06-3. Archived from the original on 2012-08-27. https://web.archive.org/web/20120827005507/http://www.theblizzard.co.uk/product/issue-six-print/. பார்த்த நாள்: 2014-02-21. 
  3. 3.0 3.1 football World – Team Geist பரணிடப்பட்டது 2015-05-27 at the வந்தவழி இயந்திரம் (Accessed 9 June 2006)
  4. 4.00 4.01 4.02 4.03 4.04 4.05 4.06 4.07 4.08 4.09 4.10 4.11 4.12 4.13 4.14 4.15 "The Footballs during the FIFA World Cup". Football Facts. பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு. 2013-11-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 17 செப்டம்பர் 2011 அன்று பார்க்கப்பட்டது.
  5. Matteo. ""Federale 102". 1934 Italia World Cup Ball" (Spanish first=Renato). balones-oficiales.com. 2013-05-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 17 செப்டம்பர் 2011 அன்று பார்க்கப்பட்டது. Missing pipe in: |language= (உதவி)CS1 maint: Unrecognized language (link)
  6. ""Allen". 1938 France World Cup Ball" (Spanish and English accessdate=17 செப்டம்பர் 2011). balones-oficiales.com. 2012-04-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-02-21 அன்று பார்க்கப்பட்டது. Missing pipe in: |language= (உதவி)CS1 maint: Unrecognized language (link)
  7. ""Super Duplo T". 1950 Brazil World Cup Official Matchball". balones-oficiales.com language=Spanish and English. 2012-04-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 17 செப்டம்பர் 2011 அன்று பார்க்கப்பட்டது. Missing pipe in: |publisher= (உதவி)
  8. "1954 Switzerland World Cup Official Matchball" (Spanish and English). balones-oficiales.com. 2011-08-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 17 செப்டம்பர் 2011 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
  9. 9.0 9.1 Norlin, Arne (2008). "Bollen "Made in Sweden"" (in Swedish). 1958: När Folkhemmet Fick Fotbolls-VM. Malmo: Ross & Tegner. பக். 130–6. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-91-976144-8-1. 
  10. "Top Star 1958" (Spanish and English). balones-oficiales.com. 2012-04-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 17 செப்டம்பர் 2011 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
  11. Matteo, Renato (11 சூன் 2010). ""Crack". 1962 Chile World Cup Official Matchball". balones-oficiales.com. 2012-04-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 17 செப்டம்பர் 2011 அன்று பார்க்கப்பட்டது.
  12. Matteo, Renato (11 சூன் 2010). ""Slazenger Challenge 4-star". 1966 England World Cup Official Matchball". balones-oficiales.com. 2013-12-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 17 செப்டம்பர் 2011 அன்று பார்க்கப்பட்டது.
  13. Brown balls are visible in Getty Images photos of matches in the Estadio Nou Camp, [[León, Guanajuato|]]:
  14. football World – Adidas Questra பரணிடப்பட்டது 2015-06-15 at the வந்தவழி இயந்திரம் (Accessed 9 சூன் 2006)
  15. "The adidas JO'BULANI – Official Match Ball for the final of the 2010 FIFA World Cup in South Africa". பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு. 2014-09-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 17 செப்டம்பர் 2011 அன்று பார்க்கப்பட்டது.
  16. "adidas Brazuca – Name of Official Match Ball decided by Brazilian fans". FIFA. 2018-12-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-09-03 அன்று பார்க்கப்பட்டது.
  17. "Miscellaneous Symbols Range: 2600–26FF" (PDF). ஒருங்குறியக் கூட்டமைப்பு. 2009. 2010-03-14 அன்று பார்க்கப்பட்டது.
  18. Pentzlin, Karl (2 April 2008). "Proposal to encode a SOCCER BALL symbol in Unicode" (PDF). 2010-03-14 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]