1934 உலகக்கோப்பை காற்பந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1934 பிஃபா உலகக்கோப்பை
FIFA World Cup
உலகின் கோப்பை[1]
Campionato Mondiale di Calcio
இத்தாலியா 1934
சுற்றுப்போட்டி விவரங்கள்
இடம்பெறும் நாடுஇத்தாலி
நாட்கள்27 மே – 10 சூன்
அணிகள்16 (4 கூட்டமைப்புகளில் இருந்து)
அரங்கு(கள்)(8 நகரங்களில்)
இறுதி நிலைகள்
வாகையாளர் இத்தாலி (1-ஆம் தடவை)
இரண்டாம் இடம் செக்கோசிலோவாக்கியா
மூன்றாம் இடம் செருமனி
நான்காம் இடம் ஆஸ்திரியா
போட்டித் தரவுகள்
விளையாடிய ஆட்டங்கள்17
எடுக்கப்பட்ட கோல்கள்70 (4.12 /ஆட்டம்)
பார்வையாளர்கள்3,63,000 (21,353/ஆட்டம்)
அதிக கோல்கள் எடுத்தவர்(கள்) ஓல்ட்ரிக் நெஜெட்லி
(5 கோல்கள்)
1930
1938

1934 உலகக்கோப்பை காற்பந்து அல்லது 1934 பிஃபா உலகக்கோப்பை (1934 FIFA World Cup) என்பது பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடத்தும் ஆண்களுக்கான உலகக்கோப்பை காற்பந்து போட்டியின் இரண்டாவது பதிப்பாகும். இது இத்தாலியில் 1934 மே 27 முதல் சூன் 10 வரை நடைபெற்றது.

1934 உலகக் கோப்பையிலேயே முதன் முதலில் அணிகள் தகுதி அடிப்படையில் பங்கேற்கத் தகுதி பெற்றன. 32 நாடுகள் தகுதிப் போட்டியில் பங்கேற்றன; இத்தாலியில் நடைபெற்ற இறுதிப் போட்டிக்கு 16 அணிகள் தகுதி பெற்றன. 1930 காற்பந்துப் போட்டிக்கான அழைப்பை நான்கு ஐரோப்பிய அணிகள் மட்டுமே ஏற்றுக்கொண்டதால் நடப்பு வாகையாளரான உருகுவை இப்போட்டியைப் புறக்கணித்தது.[2][3] இத்தாலி, செக்கோசிலவாக்கியாவை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, இரண்டாவது உலகக் கோப்பை வாகையாளராகவும், முதலாவது ஐரோப்பிய வாகையாளராகவும் ஆனது.

1934 உலகக் கோப்பை விளையாட்டு நிகழ்வானது வெளிப்படையான அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தப்பட்ட ஒரு உயர்மட்ட நிகழ்வாக அமைந்திருந்தது. குறிப்பாக, பெனிட்டோ முசோலினி இந்த உலகக் கோப்பையை பாசிசத்தை ஊக்குவிக்கும் வழிமுறையாகப் பயன்படுத்த ஆர்வமாக இருந்தார்.[4][3] சில வரலாற்றாசிரியர்களும், விளையாட்டு ஊடகவியலாளர்களும் முசோலினியின் தலையீட்டின் மூலம் இத்தாலியின் நலனுக்காகப் போட்டியில் செல்வாக்கு செலுத்தியதாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்,[5][3] ஆனாலும் இத்தாலி தாம் வெற்றி பெறத் தகுதியான அணியென் எப்போதுமே கூறி வருகிறது. 1936 செருமனி ஒலிம்பிக் கால்பந்து போட்டியிலும், 1938 பிரான்சு உலகக் கோப்பையிலும் இத்தாலி அணி வெற்றி பெற்றிருந்தது.[5][3][6]

இத்தாலியில் தயாரிக்கப்பட்ட பெடரேல் 102 என்ற காற்பந்து, 1934 உலகக்கோப்பையில் விளையாடுவதற்காக வழங்கப்பட்ட பந்தாகும்.[7]

தகுதி பெற்ற அணிகள்[தொகு]

பின்வரும் 16 அணிகள் இறுதி நிகழ்விற்குத் தகுதி பெற்றன:

இதில் 10 அணிகள் தங்கள் முதல் உலகக்கோப்பைப் போட்டியில் பங்கேற்றன.[8] இதில் 9 (இத்தாலி, செருமனி, எசுப்பானியா, நெதர்லாந்து, அங்கேரி, செக்கோசிலோவாக்கியா, சுவீடன், ஆத்திரியா, சுவிட்சர்லாந்து) அணிகளும், எகிப்து ஆகியவை அடங்கும்.[8] இறுதிப் போட்டியில் ஆப்பிரிக்காவிலிருந்து எகிப்து அணி முதல் அணியாக இருந்தது, அடுத்த முறை 1990 இல் இத்தாலியில் போட்டி நடைபெறும் வரை மீண்டும் தகுதி பெறாது.

இறுதிச் சுற்று[தொகு]

16 அணிகளின் சுற்று கால் இறுதி அரை இறுதி இறுதி
                           
27 மே – உரோமை            
  இத்தாலி  7
31 மே & 1 சூன் – புளோரன்சு
  ஐக்கிய அமெரிக்கா  1  
  இத்தாலி  1 (1)
27 மே – செனோவா
    எசுப்பானியா  1 (0)  
  எசுப்பானியா  3
3 சூன் – மிலான்
  பிரேசில்  1  
  இத்தாலி  1
27 மே – தூரின்
    ஆஸ்திரியா  0  
  ஆஸ்திரியா (கூ.நே)  3
31 மே – பொலோனா
  பிரான்சு  2  
  ஆஸ்திரியா  2
27 மே – நேப்பிள்சு
    அங்கேரி  1  
  அங்கேரி  4
10 சூன் – உரோமை
  எகிப்து  2  
  இத்தாலி (கூ.நே)  2
27 மே – திரீசுட்டே
    செக்கோசிலோவாக்கியா  1
  செக்கோசிலோவாக்கியா  2
31 மே – தூரின்
  உருமேனியா  1  
  செக்கோசிலோவாக்கியா  3
27 மே – மிலான்
    சுவிட்சர்லாந்து  2  
  சுவிட்சர்லாந்து  3
3 சூன் – உரோமை
  நெதர்லாந்து  2  
  செக்கோசிலோவாக்கியா  3
27 மே – புலோரன்சு
    செருமனி  1   மூன்றாம் இடம்
  செருமனி  5
31 மே – மிலான் 7 சூன் – நேப்பிள்சு
  பெல்ஜியம்  2  
  செருமனி  2   செருமனி  3
27 மே – பொலோனா
    சுவீடன்  1     ஆஸ்திரியா  2
  சுவீடன்  3
  அர்கெந்தீனா  2  

மேற்கோள்கள்[தொகு]

  • de Carvalho, José Eduardo (2014), History of World Cups, O Estado de S.Paulo, ISBN 9788584280032

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
இத்தாலியா 1934
என்பதின் ஊடகங்கள் உள்ளன.