ஜேம்சு ரொட்ரீகசு
![]() ரொட்ரீகசு கொலொம்பியாவிற்காக 2014இல் ஆடியபோது | |||
சுய தகவல்கள் | |||
---|---|---|---|
முழுப் பெயர் | ஜேம்சு டேவிடு ரொட்ரீகசு ரூபியோ | ||
பிறந்த நாள் | 12 சூலை 1991 | ||
பிறந்த இடம் | சுகுடா, கொலொம்பியா | ||
உயரம் | 1.80 m (5 ft 11 in) | ||
ஆடும் நிலை(கள்) | நடுக்கள வீரர்/ இருபுற ஆட்டக்காரர் | ||
கழகத் தகவல்கள் | |||
தற்போதைய கழகம் | மொனோக்கோ | ||
எண் | 10 | ||
இளநிலை வாழ்வழி | |||
1995–2007 | என்விகடோ | ||
முதுநிலை வாழ்வழி* | |||
ஆண்டுகள் | கழகம் | தோற். | (கோல்) |
2007–2008 | என்விகடோ | 30 | (9) |
2008–2010 | பன்பீல்டு | 42 | (5) |
2010–2013 | போர்ட்டோ | 63 | (25) |
2013– | மொனோக்கோ | 34 | (9) |
பன்னாட்டு வாழ்வழி‡ | |||
2007 | கொலொம்பியா U17 | 11 | (3) |
2011 | கொலொம்பியா U20 | 5 | (3) |
2011– | கொலொம்பியா | 25 | (8) |
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 10 மே 2014 அன்று சேகரிக்கப்பட்டது. ‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 24 சூன் 2014 அன்று சேகரிக்கப்பட்டது. |
ஜேம்சு டேவிட் ரொட்ரீகசு ரூபியோ (James David Rodríguez Rubio, பி: சூலை 12, 1991), அல்லது சுருக்கமாக ஜேம்சு, கொலொம்பிய கால்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் பிரான்சின் கூட்டிணைவுக் கழகம் மொனோக்கோவிற்கு ஆடுகின்றார்.[1]
ரொட்ரீகசின் விளையாடும் பாணியும் திறமையும் உலகின் மிகச் சிறந்த இளைய ஆட்டக்காரராக பல பாராட்டுக்களைப் பெற்றுத் தந்துள்ளது.[2][3] கொலம்பியா தேசிய காற்பந்து அணியில் ரொட்ரீகசு 20 அகவைக்கு கீழானோருக்கான அணியில் விளையாடத் துவங்கினார். 2011ஆம் ஆண்டின் டூலோன் போட்டியில் வெற்றி பெற்ற U-20அணியின் தலைவராக இருந்தார். இதே வயதினருக்கான உலகக்கோப்பை போட்டியிலும் தமது அணியின் தலைவராக தொடர்ந்தார். மூத்தோருக்கான அணியில் தமது முதல் கோலை பெருவிற்கு எதிரான ஆட்டத்தில் அடித்தார்; இந்த ஆட்டத்தில் 1–0 வெற்றிக்கு இவரது கோல் காரணமாக அமைந்தது.
2011இல் ரொட்ரீகசு தமது 20வது அகவையில் 2011-1க்கான போர்த்துகலின் பிரீமீரா லீகா பருவத்தில் எல்பிஎஃப்பி சிறந்த மடைமாற்ற ஆட்டக்காரர் என்ற விருதினை வென்றார். இந்த விருதினைப் பெற்ற முதல் கொலொம்பிய வாரராக இவர் இருந்தார். போர்த்துகலின் இந்த மாத ஆட்டநாயகன் விருதை இருமுறை வென்றுள்ளார். 2012இல் போர்த்துகலின் தங்கப் பந்து விருதினை பெற்றுள்ளார். மிக இளவயதில் இந்த விருதை பெற்ற சாதனையுடன் ராடமெல் பால்கோவிற்கு அடுத்து இந்த விருதினைப் பெறும் இரண்டாவது கொலொம்பிய வீரராக ரொட்ரீகசு இருந்தார்.[4][5][6] அடுத்த பருவத்தில், இவரது போர்ட்டோ கழகத்திற்கு மூன்றாம் முறை லீக் பட்டத்தை பெற்றுத் தந்தார்; மூன்று பருவங்களில் எட்டு விருதுகள் பெற்றார். பிரான்சிய காற்பந்துக் கழகமான மொனோக்கோவிற்கு 45 மில்லியன் ஈரோக்கள் மாற்றல் கட்டணத்துடன் மாறினார். இதனால் கொலொம்பியாவிலேயே இரண்டாவது மிகவும் விலையுயர்ந்த ஆட்டக்காரராகவும் உலக காற்பந்தில் மிக விலையுயர்ந்த ஆட்டக்காரர்களில் ஒருவராகவும் உள்ளார்.[7]
மேற்சான்றுகள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2012-03-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-06-28 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Rodriguez: I've got a lot to learn". FIFA.com. 20 August 2012. 29 ஆகஸ்ட் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 January 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "The 100 best footballers in the world". The Guardian. 20 December 2012. 19 January 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "The 15 Best Wingers in World Football". Bleacher Report. 2013-07-30. 2013-11-15 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "South American hopefuls enter final straight". FIFA.com. 21 March 2013. 8 ஜூலை 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 April 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Manchester United: 5 Transfers Who Could Bring Some Creativity to Their Midfield". Bleacher Report. 2013-05-08. 2013-11-15 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ By metrowebukmetro (20 October 2012). "Manchester United 'eye James Rodriguez as Nani's replacement' | Metro News". Metro.co.uk. 25 நவம்பர் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 January 2013 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]
- (எசுப்பானியம்) BDFA profile
- (எசுப்பானியம்) Argentine Primera statistics