இரியோ கிராண்டு டோ நார்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரியோ கிராண்டு டோ நார்த்
மாநிலம்
இரியோ கிராண்டு டோ நார்த்-இன் கொடி
கொடி
இரியோ கிராண்டு டோ நார்த்-இன் சின்னம்
சின்னம்
பிரேசிலில் இரியோ கிராண்டு டோ நார்த்தின் அமைவிடம்
பிரேசிலில் இரியோ கிராண்டு டோ நார்த்தின் அமைவிடம்
நாடு பிரேசில்
தலைநகரும் பெரிய நகரும்நதால்
அரசு
 • ஆளுநர்ரோசால்பா சியார்லினி
பரப்பளவு
 • மொத்தம்52,796.791 km2 (20,384.955 sq mi)
பரப்பளவு தரவரிசை22nd
மக்கள்தொகை (2012)[1]
 • மொத்தம்3,228,198
 • தரவரிசை16th
 • அடர்த்தி61/km2 (160/sq mi)
 • அடர்த்தி தரவரிசை10th
இனங்கள்Potiguar or Norte-rio-grandense
GDP
 • Year2006 estimate
 • TotalR$ 20,557,000,000 (18th)
 • Per capitaR$ 6,754 (20th)
HDI
 • Year2005
 • Category0.738 – medium (21st)
நேர வலயம்BRT (ஒசநே-3)
 • கோடை (பசேநே)BRST (ஒசநே-2)
அஞ்சல் குறியீடு59000-000 to 59990-000
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுBR-RN
இணையதளம்rn.gov.br

இரியோ கிராண்டு டோ நார்த் (Rio Grande do Norte, பொருள்: "பெரும் வடக்கு ஆறு", பொடன்ஜி ஆற்று முத்துவாரத்தில் இருப்பதை யொட்டி இப்பெயர் எழுந்துள்ளது.) பிரேசிலின் 26 மாநிலங்களில் ஒன்றாகும். நாட்டின் வடகிழக்கு மண்டலத்தில் அமைந்துள்ள இந்த மாநிலம் தென் அமெரிக்கக் கண்டத்தின் மிகுந்த வடகிழக்கு மூலையில் அமைந்துள்ளது. இதன் புவியியல் இருப்பிடத்தால் மிகவும் வாய்ப்புள்ள முக்கியத்துவத்தைப் பெறுகிறது. இதன் தலைநகரம் நதால் ஆகும்.

அமெரிக்காக்களிலேயே மிகவும் தூய்மையான காற்று இங்குதான் நிலவுவதாக தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் கூறியுள்ளது.[2] 410 கிமீ (254 மைல்) தொலைவுள்ள கடற்கரை, மிகுந்த சூரிய ஒளி, தேங்காய்கள் மற்றும் காயல்கள் மிகுந்த சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. தென் அத்திலாந்திக்குப் பெருங்கடலில் உள்ள ஒரே பவளத்தீவான ரோகாசு பவளத்தீவு இந்த மாநிலத்தில்தான் உள்ளது.

இம்மாநிலத்தின் முதன்மைத் தொழிலாக சுற்றுலாத் துறை உள்ளது. பெட்ரோலியம் ஆழ்ந்தெடுத்தல் (நாட்டின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளர்), வேளாண்மை, பழத்தோட்டங்கள், கனிம அகழ்வு, கடலுப்பு உற்பதி ஆகியன பிற முக்கியத் தொழில்களாக அமைகின்றன.[3] பெர்னான்டோ டெ நோரோன்கா தீவுக்கூட்டதிற்கு அண்மையில் இந்த மாநிலம் அமைந்துள்ளது.[4]

இப்பகுதியில் பிறந்த லூயி டா காமரா காசுத்தொ இப்பகுதி மக்களின் நாட்டுப்புறக் கதைகளை தொகுத்துள்ளார்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. [1]
  2. "Natal, a mais segura. O ar mais puro". Nataltrip.com. 14 ஜூலை 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 November 2011 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Notícia inválida". Tribuna do Norte. 6 அக்டோபர் 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 November 2011 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Fernando de Noronha". Turismodonordeste.com. 17 ஆகஸ்ட் 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 November 2011 அன்று பார்க்கப்பட்டது.