அல்சீரியக் கால்பந்துக் கூட்டமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அல்சீரியக் கால்பந்துக் கூட்டமைப்பு
ஆப்பிரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு
Association crest
தோற்றம் 1962
ஃபிஃபா இணைவு 1963
ஆப்பிரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு இணைவு 1964
தலைவர் Mohamed Raouraoua
இணையதளம் www.faf.dz

அல்சீரியக் கால்பந்துக் கூட்டமைப்பு (Algerian Football Federation; பிரெஞ்சு: Fédération algérienne de football, அரபு மொழி: الاتحادية الجزائرية لكرة القدم) என்பது அல்ஜீரியாவின் கால்பந்து நிர்வாக அமைப்பாகும். 1958-ஆம் ஆண்டிலிருந்து அதிகாரபூர்வமற்ற போட்டிகளை, அல்ஜீரிய தேசிய கால்பந்து அணி ஆடியிருக்கிறது. எனினும், 1963-ஆம் ஆண்டில்தான் முதன்முறையாக அதிகாரபூர்வமாக அல்ஜீரியா தேசிய காற்பந்து அணி பன்னாட்டுப் போட்டியில் ஆடியது; அதாவது, அல்சீரிய விடுதலைக்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு.

அல்சீரியா அணி, 3 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. மேலும், ஆப்பிரிக்க கால்பந்துக் கூட்டமைப்புக் கோப்பையையும் ஒருமுறை வென்றிருக்கிறது.

வெளியிணைப்புகள்[தொகு]