என்னர் வலென்சியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என்னர் வலென்சியா
சுய தகவல்கள்
முழுப் பெயர்என்னர் ரெம்பெர்டோ
வலென்சியா இலாசுத்ரா
பிறந்த நாள்ஏப்ரல் 11, 1989 (1989-04-11) (அகவை 34)
பிறந்த இடம்சான் லொரென்சோ,
எசுமெரால்தாசு மாநிலம்,
எக்குவடோர்
உயரம்1.74 m (5 அடி 8+12 அங்)
ஆடும் நிலை(கள்)முன்னணி/நடுக்கள வீரர்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
பச்சுகா
எண்14
இளநிலை வாழ்வழி
2005–2008கரீபெ ஜூனியர்
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2008–2013எமெலெக்131(27)
2014–பச்சுகா23(18)
பன்னாட்டு வாழ்வழி
2012–எக்குவடோர்12(7)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 15 மே 2014 அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 20 சூன் 2014 அன்று சேகரிக்கப்பட்டது.

என்னர் ரெம்பெர்டோ வலென்சியா இலாசுத்ரா (Enner Remberto Valencia Lastra, ஏப்ரல் 11, 1989) எக்குவடோரைச் சேர்ந்த காற்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் தற்போது எக்குவடோர் தேசிய அணியில் பக்கவாட்டு முன்னணி வீரராக (தாக்குபவராக) விளையாடி வருகிறார். லிகா எம் எக்சு கூட்டிணைவில் பச்சுகா காற்பந்துக் கழகத்திற்காக ஆடி வருகிறார்.[1]

பன்னாட்டு விளையாட்டு[தொகு]

என்னர் தமது தேசிய அணிக்காக பெப்ரவரி 12, 2012இல் ஹொண்டுராசிற்கு எதிரான நட்புறவு ஆட்டத்தில் முதன்முதலாக ஆடினார்.

கிறிஸ்டியன் பெனிடெசின் அகால மரணத்தை அடுத்து, பக்கவாட்டு முன்னணி வீரராக ஆடிவந்த என்னரை எக்குவடோரின் பயிற்றுனர் ரீனால்டோ ரூடா தாக்கும் முன்னணி வீரராகப் பயன்படுத்தலானார்.

2014 உலகக்கோப்பையில் சுவிட்சர்லாந்துடனான தங்கள் முதல் ஆட்டத்தில் எக்குவடோர் 2-1 என்ற கணக்கில் தோற்றது; இந்த ஆட்டத்தில் எக்குவடோரின் ஒரே கோலை தலையால் முட்டி என்னர் அடித்தார்.[2] இந்தப் போட்டியின் அடுத்த ஆட்டத்தில் எக்குவடோர் ஹொண்டுராசை 2-1 கணக்கில் வென்றது; இந்த ஆட்டத்தில் 34வது நிமிடத்திலும் 66வது நிமிடத்திலும் கோலடித்து வெற்றி பெற உதவினார்.

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்னர்_வலென்சியா&oldid=2719265" இருந்து மீள்விக்கப்பட்டது