போர்த்தலேசா
ஃபோர்த்தலேசா | |
---|---|
நகராட்சி | |
போர்த்தலேசா நகராட்சி | |
அடைபெயர்(கள்): ஃபோர்ட்டல் | |
குறிக்கோளுரை: "ஃபோர்டிடியூடைன்" | |
நாடு | Brazil |
மண்டலம் | வட கிழக்கு மண்டலம் |
மாநிலம் | சியாரா |
நிறுவப்பட்டது | ஏப்ரல் 13, 1726 |
அரசு | |
• மேயர் | இராபர்ட்டோ கிளாடியோ (சமூக நீதிக்கான குடியரசுக் கட்சி) |
பரப்பளவு | |
• நகராட்சி | 313.8 km2 (121.2 sq mi) |
ஏற்றம் | 21 m (69 ft) |
மக்கள்தொகை (2013) | |
• நகராட்சி | 25,51,806 |
• தரவரிசை | ஐந்தாவது |
• அடர்த்தி | 8,100/km2 (21,000/sq mi) |
• பெருநகர் | 36,02,319 |
நேர வலயம் | ஒசநே-3 (BST) |
அஞ்சல் குறியீடு | 60000-000 |
இடக் குறியீடு | +55 85 |
இணையதளம் | fortaleza.ce.gov.br |
ஃபோர்த்தலேசா (Fortaleza, போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [foʁtaˈlezɐ], கோட்டை) பிரேசிலின் வட கிழக்கு மண்டலத்தில் அமைந்துள்ள சியாரா மாநிலத்தின் தலைநகரமாகும். இதன் மக்கள்தொகை ஏறத்தாழ 2.55 மில்லியனாக (பெருநகரப் பகுதியில் 3.6 மில்லியனுக்கும் கூடியதாக) கணக்கெடுக்கப்பட்டுள்ளது. பிரேசிலின் மிகப்பெரிய நகரங்களில் ஐந்தாவதாக விளங்குகிறது. 313 சதுர கிலோமீட்டர்கள் (121 sq mi) பரப்பளவில் அமைந்துள்ள இந்த நகரம் நாட்டின் மிக உயர்ந்த மக்களடர்த்தியைக் (ச. கிமீக்கு 8,001) கொண்டுள்ளது. நகரத்தின் வடக்கே அத்திலாந்திக்குப் பெருங்கடல் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் குடிகள் போர்த்தெலேசியர்கள் (Fortalezenses) என அழைக்கப்படுகின்றனர். சியாரா கூட்டரசுப் பல்கலைகழகத்திலிருந்து பட்டம் பெற்ற மருத்துவர் இராபெர்ட்டோ கிளாடியோ தற்போதைய மேயராக உள்ளார். 2014 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகள் நடக்கும் நகரங்களில் ஒன்றாக போர்த்தலேசா விளங்குகிறது.