உள்ளடக்கத்துக்குச் செல்

கிறிஸ்டியானோ ரொனால்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிறிஸ்டியானோ ரொனால்டோ
Cristiano Ronaldo

ரொனால்டோ போர்த்துகல் அணியில் 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டியில்.
சுய தகவல்கள்
முழுப் பெயர்கிறிஸ்டியானோ ரொனால்டோ
டோசு சாண்டோசு அவேரோ[1]
பிறந்த நாள்5 பெப்ரவரி 1985 (1985-02-05) (அகவை 39)[2]
பிறந்த இடம்பஞ்ச்சல், மதீரா, போர்த்துகல்
உயரம்1.85 மீ[3]
ஆடும் நிலை(கள்)முன்களம்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
அல் நாசர்
எண்7
இளநிலை வாழ்வழி
1992–1995அந்தொரீனியா
1995–1997நசியனால்
1997–2002ஸ்போர்ட்டிங்
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2002–2003சுபோர்ட்டிங் சிபி பி2(0)
2002–2003சுபோர்ட்டிங் சிபி25(3)
2003–2009மான்செஸ்டர் யுனைட்டட்196(84)
2009– 2018ரியால் மாட்ரிட்292(311)
2018 - 2021யுவென்டசு98(81)
2021- 2023மான்செஸ்டர் யுனைட்டட்40(19)
2023 - Currentஅல் நாசர்39(40)
பன்னாட்டு வாழ்வழி
2001போர்த்துகல் கீழ்-159(7)
2001–2002போர்த்துகல் கீழ்-177(5)
2003போர்த்துகல் கீழ்-205(1)
2002–2003போர்த்துகல் கீழ்-2110(3)
2004போர்த்துகல் கீழ்-233(2)
2003–போர்த்துகல்206(128)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 31 மார்ச் 2024 அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 31 மார்ச் 2024 அன்று சேகரிக்கப்பட்டது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ டோசு சாண்டோசு அவேரோ (பிறப்பு: 5 பிப்ரவரி 1985 ) ஒரு போர்த்துகீசிய கால்பந்து வீரர் ஆவார். இவர் சவுதி புரோ லீக்கில் அல் நாசர் அணிக்காகவும், போர்ச்சுகல் தேசிய அணிக்காகவும் விளையாடுகிறார். ஒரு முன்கள வீரரான இவர் தான் விளையாடும் அணிகளின் தலைவராகவும் உள்ளார்.

காற்பந்து வரலாற்றில் மிகச்சிறந்த வீரராக கருதப்படுகிறார். ரொனால்டோ ஐந்து பாலோன் தி'ஓர் விருதுகளையும், மூன்று யுஇஎஃப்ஏ ஆண்டின் சிறந்த வீரர் விருதுகளையும், நான்கு ஐரோப்பிய தங்க காலணி விருதுகளையும் வென்றுள்ளார். இவர் ஏழு லீக் பட்டங்கள், ஐந்து யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு, யூஈஎஃப்ஏ ஐரோப்பிய கோப்பை மற்றும் யூஈஎஃப்ஏ பன்னாட்டு கூட்டிணைவு உட்பட 33 கோப்பைகளை வென்றுள்ளார்.

வாகையர் கூட்டிணைவு போட்டிகளில் அதிக தோற்றங்கள் மற்றும் அதிக கோல்கள் அடித்தவர் என்ற சாதனைகளை கொண்டுள்ளார். இவர் பன்னாட்டு போட்டிகளில் அதிக போட்டிகளில் பங்கேற்ற மற்றும் அதிக கோல்கள் அடித்த சாதனைகளையும் தன வசம் வைத்திருக்கிறார். 1200 க்கும் மேற்பட்ட தொழில்முறை போட்டிகளில் கலந்துகொண்ட சில வீரர்களில் இவரும் ஒருவர். இவர் கழக அணிகள் மற்றும் நாட்டிற்காக 850 க்கும் மேற்பட்ட அதிகாரப்பூர்வ கோல்களை அடித்துள்ளார்.

கழக வாழ்வழி

[தொகு]

தொடக்கம் மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் (2002-09)

[தொகு]

ரொனால்டோ 2002 ஆம் ஆண்டில் போர்த்துகீசிய நாட்டில் சுபோர்ட்டிங் சிபி கழகத்துடன் உடன் தனது தொழில்முறை காற்பந்தாட்ட வாழ்க்கையைத் தொடங்கினார்.[4] பின்னர் 2003 ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்தார்.[5][6] தனது முதல் ஆண்டிலேயே எஃப்ஏ கோப்பையை வென்ற அவர், தொடர்ந்து மூன்று பிரீமியர் லீக், 2008 யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு மற்றும் 2008 பிபா கழக உலகக் கோப்பை பட்டங்களை வென்றார்.[7][8][9] இவர் 2008 ஆம் ஆண்டில் தனது 23 ஆம் வயதில் தனது முதல் பாலோன் தி'ஓர் விருதை வென்றார். [10]

ரியல் மாட்ரிட் (2009-18)

[தொகு]
2014 ஆம் ஆண்டு ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிய போது

ரொனால்டோ 2009 ஆம் ஆண்டு எசுப்பானிய நாடு அணியான ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்தபோது, உலகில் மிகவும் விலையுயர்ந்த கால்பந்து பரிமாற்றத்தின் பொருளாக இருந்தார்.[11] ரியல் மாட்ரிட் அணியுடன் இவர் நான்கு யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு கோப்பைகள், இரண்டு லா லீகா பட்டங்கள், இரண்டு டெல் ரே கோப்பைகள், இரண்டு யூஈஎஃப்ஏ சூப்பர் கோப்பைகள் மற்றும் மூன்று கழக உலகக் கோப்பைகள் ஆகியவற்றை வென்றார்.[12] இந்த காலகட்டத்தில் இவர் மேலும் நான்கு பாலோன் தி'ஓர் விருதுகளை வென்றார்.[12] இவர் ரியல் மாட்ரிட் அணிக்காக அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.[13]

பிற்கால கழக வாழ்க்கை (2018-தற்போது)

[தொகு]

2018 ஆம் ஆண்டில் இவர் இத்தாலி நாட்டின் யுவென்டசு அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்தார்.[14] இவர் யுவென்டசு அணியுடன் இரண்டு சீரீ ஆ பட்டங்கள், இரண்டு சூப்பர் இத்தாலியானா கோப்பைகள் மற்றும் ஒரு இத்தாலியானா கோப்பை ஆகியவற்றை வென்றார்.[15][16] இவர் சிரீ ஆ தொடரின் மதிப்புமிக்க வீரர் விருதை வென்றார்.[17] மேலும் ஆங்கில, எசுப்பானிய மற்றும் இத்தாலிய கழக லீகுகளில் அதிக கோல்களை அடித்த முதல் காற்பந்தாட்ட வீரர் என்ற பெருமையை பெற்றார்.[18] ரொனால்டோ 2021 இல் மான்செஸ்டர் யுனைடெட்டிற்குத் திரும்பினார்.[19] 2022 இல் இவரது ஒப்பந்தம் முடிவடைவதற்கு முன்பு, மான்செஸ்டர் யுனைடெட் அணியில் கடந்த ஆண்டின் அதிக கோல்கள் அடித்தவராக திகழ்ந்தார்.[20] 2023 இல், இவர் சவூதி அரேபியா நாட்டின் அல் நாசர் அணிக்காக விளையாட கையெழுத்திட்டார்.[21]

பன்னாட்டு வாழ்வழி

[தொகு]
ரொனால்டோ போர்ச்சுகல் தேசிய அணிக்காக விளையாடுகிறார்

ரொனால்டோ 2003 ஆம் ஆண்டு தனது 18 வயதில் போர்ச்சுகல் தேசிய அணிக்காக சர்வதேச அரங்கில் அறிமுகமானார்.[22] அதன்பின்னர் 200 க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ள அவர், அதிக பன்னாட்டு தொழில்முறை போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.[23] ரொனால்டோ தனது முதல் சர்வதேச கோலை 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிகளில் அடித்தார்.[24] சர்வதேச அளவில் 100-க்கும் மேற்பட்ட கோல்களுடன், காற்பந்தாட்ட வரலாற்றில் அதிக கோல் அடித்தவர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.[24] பதினொரு முக்கிய பன்னாட்டு போட்டி தொடர்களில் விளையாடி கோல் அடித்த முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.[24]

இவர் சூலை 2008 இல் தேசிய அணியின் தலைமை பொறுப்பேற்றார்.[25] 2015 இல், ரொனால்டோ போர்த்துகீசிய கால்பந்து கூட்டமைப்பால் வரலாற்றின் சிறந்த போர்த்துகீசிய காற்பந்து வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஆண்டு, 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிகளில் போர்த்துக்கல் அணியை தனது முதல் சர்வதேச பட்டத்திற்கு வழிநடத்தினார். [26] இவர் 2019 ஆம் ஆண்டில் யூஈஎஃப்ஏ பன்னாட்டு கூட்டிணைவு போட்டிகளில் வெற்றி பெற்ற போர்த்துக்கல் அணியின் தலைவராக இருந்தார்.[27] 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிகளில் அதிக கோல் அடித்ததற்கான தங்க காலணி விருதை பெற்றார்.[28] கத்தாரில் நடந்த 2022 காற்பந்து உலகக் கோப்பை போட்டியின் போர்த்துகல் அணியில் ரொனால்டோ இடம் பெற்றார், இது அவரது ஐந்தாவது உலகக் கோப்பையாக அமைந்தது. நவம்பர் 24 அன்று, கானாவுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில், ரொனால்டோ அடித்த கோலின் மூலம் ஐந்து வெவ்வேறு உலகக் கோப்பைகளில் கோல் அடித்த முதல் ஆண் வீரர் ஆனார்.[29]

அங்கீகாரம்

[தொகு]

உலகின் மிகவும் பிரபலமான விளையாட்டு வீரர்களில் ஒருவரான ரொனால்டோ, 2016, 2017 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் போர்ப்ஸ் நாளிதழால் வெளியிடப்பட்ட உலகின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் முதலிடம் பெற்றார்.[30][31] 2016 முதல் 2019 வரை உலகின் மிகவும் பிரபலமான விளையாட்டு வீரர் என ஈ.எஸ்.பி.ன். ஆல் அங்கீகரிக்கப்பட்டார்.[32] டைம் நாளிதழின் 100 மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலில் 2014 இல் ரொனால்டோ இடம் பிடித்தார். இவர் தனது வாழ்க்கையில் US$1 பில்லியன் சம்பாதித்த முதல் கால்பந்து வீரர் மற்றும் மூன்றாவது விளையாட்டு வீரர் ஆவார்.[33]

மேற்கோள்கள்

[தொகு]
 1. "FIFA Club World Cup UAE 2017: List of players: Real Madrid CF" (PDF). FIFA. 16 December 2017. p. 5. Archived from the original (PDF) on 23 December 2017. பார்க்கப்பட்ட நாள் 23 December 2017.
 2. Lewis, Tim (8 June 2008). "He's got the world at his feet". The Guardian (London). https://www.theguardian.com/football/2008/jun/08/manchesterunited.portugal. 
 3. "2018 FIFA World Cup Russia – List of Players" (PDF). FIFA.com. Fédération Internationale de Football Association. 10 June 2018. p. 23. Archived from the original (PDF) on 19 June 2018. பார்க்கப்பட்ட நாள் 10 June 2018.
 4. "Clash of the Titans". Manchester Evening News. 18 April 2010. Archived from the original on 3 September 2014. பார்க்கப்பட்ட நாள் 30 August 2014.
 5. "Man Utd sign Ronaldo". BBC Sport. 12 August 2003. Archived from the original on 31 July 2017. பார்க்கப்பட்ட நாள் 27 August 2014.
 6. Wallace, Sam (12 August 2003). "United fork out record £12m fee to land teenager". The Daily Telegraph. Archived from the original on 10 January 2022. பார்க்கப்பட்ட நாள் 10 August 2019.
 7. "Man Utd win FA Cup". BBC Sport. 22 May 2004. Archived from the original on 25 February 2009. பார்க்கப்பட்ட நாள் 26 January 2011.
 8. "Champions League (Sky Sports)". Sky Sports. Archived from the original on 19 January 2023. பார்க்கப்பட்ட நாள் 19 January 2023.
 9. Bailey, Richard (18 December 2008). "United secure final date". Sky Sports. பார்க்கப்பட்ட நாள் 19 June 2022.
 10. Roughley, Gregg (2 December 2008). "Ronaldo beats off Messi and Torres to scoop Ballon d'Or". The Guardian. London. Archived from the original on 6 October 2014. பார்க்கப்பட்ட நாள் 29 August 2014.
 11. Ogden, Mark (11 June 2009). "Cristiano Ronaldo transfer: Real Madrid agree £80 million fee with Manchester United". The Daily Telegraph. London. Archived from the original on 21 August 2010. பார்க்கப்பட்ட நாள் 5 November 2010.
 12. 12.0 12.1 "Cristiano Ronaldo (CR7)". Real Madrid C.F. Archived from the original on 28 January 2017. பார்க்கப்பட்ட நாள் 21 February 2017.
 13. "Cristiano Ronaldo » Club matches". WorldFootball.net. 21 February 2024. பார்க்கப்பட்ட நாள் 16 March 2024.
 14. Juventus(10 July 2018). "Cristiano Ronaldo signs for Juventus!". செய்திக் குறிப்பு.
 15. Burnton, Simon (16 January 2019). "Juventus 1–0 Milan: Supercoppa Italiana – as it happened". The Guardian. Archived from the original on 28 April 2021. பார்க்கப்பட்ட நாள் 16 January 2019.
 16. Dampf, Andrew; Smith, Adam (22 April 2019). "Ronaldo Becomes first player to win Europe's top 3 leagues". AP News. Archived from the original on 22 October 2019. பார்க்கப்பட்ட நாள் 22 October 2019.
 17. "Ronaldo MVP in Serie A Awards". Football Italia. 18 May 2019. Archived from the original on 13 August 2019. பார்க்கப்பட்ட நாள் 18 May 2019.
 18. Bhargav (24 September 2020). "Top 5 players who have succeeded in 3 top-5 leagues". www.sportskeeda.com. Archived from the original on 25 January 2024. பார்க்கப்பட்ட நாள் 25 January 2024.
 19. "United confirm Ronaldo agreement". Manchester United F.C. 27 August 2021. Archived from the original on 31 August 2021.
 20. Garrick, Omar (9 June 2022). "PFA Premier League Team of the Year: Ronaldo, De Bruyne, Salah included". The Athletic. பார்க்கப்பட்ட நாள் 19 June 2022.
 21. "Cristiano Ronaldo: Former Manchester United forward signs for Saudi Arabian club Al-Nassr". Sky Sports. 30 December 2022. பார்க்கப்பட்ட நாள் 30 December 2022.
 22. "Cristiano Ronaldo: Young lion". Australian Broadcasting Corporation. 26 April 2006. பார்க்கப்பட்ட நாள் 16 June 2021.
 23. "Cristiano Ronaldo becomes all-time international cap leader". Guinness World Records. 10 December 2022. Archived from the original on 10 August 2023. பார்க்கப்பட்ட நாள் 9 August 2023.
 24. 24.0 24.1 24.2 Flanagan, Chris (8 September 2020). "Long read: Cristiano Ronaldo's incredible journey to 100 Portugal goals – and the all-time international record still to come". FourFourTwo. பார்க்கப்பட்ட நாள் 16 June 2021.
 25. "Scolari delighted with Portugal victory over Brazil". Rediff. 7 February 2007. Archived from the original on 29 June 2010. பார்க்கப்பட்ட நாள் 15 July 2009.
 26. "Portugal striker Cristiano Ronaldo forced off injured in Euro 2016 final". ESPN. 10 July 2016. Archived from the original on 11 July 2016. பார்க்கப்பட்ட நாள் 10 July 2016.
 27. Taylor, Daniel (9 June 2019). "Portugal win Nations League as Gonçalo Guedes does for the Netherlands". The Guardian. Estádio do Dragão. பார்க்கப்பட்ட நாள் 2 February 2020.
 28. "Sweden 0–2 Portugal". BBC Sport. 8 September 2020. Archived from the original on 8 September 2020. பார்க்கப்பட்ட நாள் 8 September 2020.
 29. Garcia, Adriana (24 November 2022). "Portugal's Cristiano Ronaldo becomes first male player to score in 5 World Cups". ESPN. பார்க்கப்பட்ட நாள் 24 November 2022.
 30. Settimi, Christina (7 May 2014). "The world's highest paid football players". Forbes. Archived from the original on 10 May 2014. பார்க்கப்பட்ட நாள் 8 May 2014.
 31. "The world's highest paid football players 2015". Forbes. Archived from the original on 26 November 2015. பார்க்கப்பட்ட நாள் 26 November 2015.
 32. "ESPN World Fame 100". ESPN. 3 June 2016. Archived from the original on 13 July 2016. பார்க்கப்பட்ட நாள் 6 January 2019.
 33. Pelé (23 April 2014). "Cristiano Ronaldo by Pelé: Time 100". Time. Archived from the original on 2 June 2014. பார்க்கப்பட்ட நாள் 3 June 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிஸ்டியானோ_ரொனால்டோ&oldid=4049085" இலிருந்து மீள்விக்கப்பட்டது