உள்ளடக்கத்துக்குச் செல்

வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு
சுருக்கம்CONCACAF
உருவாக்கம்18 செப்டம்பர் 1961; 63 ஆண்டுகள் முன்னர் (1961-09-18)
வகைSports organization
தலைமையகம்மியாமி, புளோரிடா
ஐக்கிய அமெரிக்கா
உறுப்பினர்கள்
41 உறுப்பு சங்கங்கள்
பொது செயலாளர்
Enrique Sanz
Jeffrey Webb
தாய் அமைப்பு
பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு
வலைத்தளம்www.concacaf.com

வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு (Confederation of North, Central American and Caribbean Association Football, எசுப்பானியம்: Confederación de Fútbol de Norte, Centroamérica y el Caribe;[1] பிரெஞ்சு மொழி: Confédération de football d'Amérique du Nord, d'Amérique centrale et des Caraïbes[2]), பொதுவாக CONCACAF என்று அறியப்படுவது (/ˈkɒn.kəkæf/ KON-kə-kaf) என்பது, பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் ஆறு-கண்டரீதியான கூட்டமைப்புகளில் ஒன்றாகும். இது வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளில் இருக்கும் நாடுகளில் கால்பந்து மேலாண்மை அமைப்பாகும். மேலும் மூன்று தென்னமெரிக்க நாடுகளான கயானா, சுரிநாம் மற்றும் பிரெஞ்சு கயானா ஆகியவற்றின் கால்பந்துச் சங்கங்களும் இந்தக் கூட்டமைப்பின் உறுப்பு சங்கங்களாகும்.[3]

இக்கூட்டமைப்பு, இன்றைய வடிவில் செப்டம்பர் 18, 1961, அன்று மெக்சிக்கோ நகரம், மெக்சிகோவில் தோற்றுவிக்கப்பட்டது; இதற்கு முன்னர் இருந்த வட அமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு மற்றும் மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு ஆகிய இரண்டையும் ஒன்றிணைத்து இது உருவாக்கப்பட்டது. இவ்வாறு இது, ஆறு கண்டரீதியான கால்பந்துக் கூட்டமைப்புகளில் ஒன்றாக உருப்பெற்றது. இதன் முக்கியப் பணிகளாவன: நாடுகளுக்கும், பல்வேறு நாடுகளின் கால்பந்துக் கழகங்களுக்கும் அவற்றுக்குண்டான போட்டிகளை நடத்துவதும், கால்பந்து உலகக்கோப்பைக்கான தகுதிப் போட்டிகளை நடத்துவதும் ஆகும். இப்பகுதியில், ஆண்களுக்கான கால்பந்துப் போட்டிகளில் காலாகாலமாக மெக்சிகோ ஆதிக்கம் செலுத்தி வருகிறது; அண்மைக்காலங்களில் ஐக்கிய அமெரிக்காவும் முன்னிலை வகிக்கிறது. இவ்விரண்டு நாடுகளின் அணிகளே, இக்கூட்டமைப்பின் கோப்பையான தங்கக் கோப்பையை ஒருமுறை மட்டும் விடுத்து மற்ற அனைத்து முறையும் வென்றிருக்கின்றன.

மேலும் பார்க்க

[தொகு]

குறிப்புதவிகள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]