பெர்னம்புகோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பெர்னம்புகோ மாநிலம்
மாநிலம்
Flag of பெர்னம்புகோ மாநிலம்
Flag
Coat of arms of பெர்னம்புகோ மாநிலம்
Coat of arms
பிரேசிலில் பெர்னம்புகோ மாநிலத்தின் அமைவிடம்
பிரேசிலில் பெர்னம்புகோ மாநிலத்தின் அமைவிடம்
நாடு  பிரேசில்
தலைநகரமும் பெரிய நகரமும் ரெசிஃபி
Government
 • ஆளுநர் எடுவர்டோ கேம்போசு
 • துணை ஆளுநர் ஜோவா லிரா நெடோ
பரப்பளவு
 • மொத்தம் [.616
Area rank 19வது
மக்கள்தொகை (2012)[1]
 • மொத்தம் 8
 • தரவரிசை 7வது
 • அடர்த்தி 91
 • அடர்த்தி தரவரிசை 6th
Demonym(s) Pernambucano
GDP
 • Year 2007 estimate
 • Total R$ 32.255.687 (10th)
 • Per capita R$ 4.337 (21st)
HDI
 • Year 2005
 • Category 0.718 – Medium (23rd)
நேர வலயம் BRT (ஒசநே-3)
 • Summer (பசேநே) not observed (ஒசநே-3)
அஞ்சல் குறியீடு 50000-000 - 56990-000
ISO 3166 code BR-PE
இணையத்தளம் pe.gov.br

பெர்னம்புகோ (Pernambuco) பிரேசிலின் 26 மாநிலங்களில் ஒன்றாகும். நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த மாநிலத்தின் தலைநகரம் ரெசிஃபி ஆகும். இந்த மாநிலத்தில் பெர்னான்டோ டெ நோரோன்கா தீவுக்கூட்டம் உள்ளது. இந்த மாநிலத்தின் வடக்கே பாராயிபாவும் சியாராவும், மேற்கே பியாயுயி மாநிலமும், தெற்கே ஆலகோவாசும் பாகையாவும் அமைந்துள்ளன; கிழக்கு எல்லையாக அத்திலாந்திக்குப் பெருங்கடல் உள்ளது.

இந்த மாநிலத்திலுள்ள பிரேசிலின் இரண்டாவது தொன்மையான நகரமான ஒலின்டாவை 1982இல் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் மாந்த வரலாறு மற்றும் பண்பாட்டு மரபுரிமையாக அறிவித்துள்ளது. இங்கும் ரெசிஃபியிலும் பிரேசிலின் மரபார்ந்த பல கார்னிவல்கள் கொண்டாடப்படுகின்றன. இரு நகரங்களிலும் போர்த்துக்கேய கட்டிடக்கலையைக் காணலாம்; நூற்றாண்டுகள் பழைமையான மாளிகைகளும் தேவாலயங்களும் கட்டப்பட்டுள்ளன. பல கிலோமீட்டர்கள் நீளமான கடற்கரைகள் அமைந்துள்ளன. நில நடுக்கோட்டிற்கு அண்மையில் உள்ளதால் ஆண்டு முழுமையும் சூரிய ஒளி கிட்டுகிறது; சராசரி வெப்பநிலை 26 °C (79 °F)ஆக உள்ளது.

மேற்சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்னம்புகோ&oldid=1623033" இருந்து மீள்விக்கப்பட்டது