தமிழ் முரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் முரசு சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் தமிழ்ப் பத்திரிகையாகும். சிங்கப்பூரில் இருந்து வெளியாகும் 16 பத்திரிகைகளில் இதுவும் ஒன்று. இது ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அடுத்தபடியாக, நாட்டின் இரண்டாவது ஆகப்பழமையான பத்திரிகை ஆகும்.[1] குடும்பப் பத்திரிகையாக இருந்த தமிழ் முரசை சிங்கப்பூரின் அனைத்து மொழி நாளிதழ்களையும் வெளியிடும் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் 1995 ஆம் ஆண்டில் ஏற்று நடத்த முன்வந்தது.

வரலாறு[தொகு]

தமிழ் முரசின் நிறுவனர் தமிழவேள் கோவிந்தசாமி. சாரங்கபாணி சிங்கப்பூருக்கு 1924ஆம் ஆண்டு வந்தார். 1934 சூலை 6 ஆம் தேதி தமிழ் முரசு இதழைத் தொடங்கினார். 'முன்னேற்றம்', 'சீர்திருத்தம், ஆங்கிலத்தில் 'தி இந்தியன் டெய்லி மெயில்' உள்ளிட்ட பல சஞ்சிகைகளை சிங்கப்பூர் இந்தியர்களின் நலனுக்காக இவர் தொடங்கினார்.

உள்ளடக்கம்[தொகு]

தமிழ் முரசு இந்திய சமூகத்தைப் பற்றிய செய்திகளை வழங்கி வருகின்றது. இது மாத்திரம் அன்றி பல விடயங்களை உள்ளூர் செய்திகள், வெளிநாட்டுச் செய்திகள், விளையாட்டுக்கள் பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவை பிரசுரிக்கப் படுகின்றன. இப்பத்திரிகையானது சிங்கப்பூர்த் தமிழ் சமூகத்தின் குரலாகத் திகழ்கின்றது.

உள்ளூர்ச் செய்திகள், வெளிநாட்டுச் செய்திகள், விளையாட்டுச்செய்திகள், பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவை தமிழ் முரசில் வெளியிடப்படுகின்றன. மேலும் உள்ளூர் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வண்ணம் உள்ளூர் எழுத்தாளர்களின் கவிதைகளும் கதைகளும் ஞாயிறுதோறும் தமிழ் முரசில் வெளியிடப்படுகிறது. திங்கட்கிழமைகளில் மாணவர்களுக்காக மாணவர் முரசு வெளியிடப்படுகிறது. மாணவர் முரசில் தொடக்கப்பள்ளி முதல் உயர் நிலைப்பள்ளி மாணவர்கள் வரை தங்கள் கட்டுரைகளைப் படைப்பர். வியாழக்கிழமைகளில் இளையர்களுக்கென இளையர் முரசு வெளியிடப்படுகிறது. இந்தப் பக்கத்தில் இளையர்களின் சாதனைகள், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் போன்ற செய்திகளைக் காணலாம். மேலும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் தமிழ்த் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெறுவதை இலக்காகக் கொண்டு நாள்தோறும் தமிழ்ப் பயிற்சிப் பாடங்கள் வெளியிடப்படுகிறது.

2004 கணிப்பீட்டின் படி நாளொன்றிற்கு 8,504 படிகளும் (பிரதிகளும்) ஞாயிற்றுக் கிழமைகளில் 18,232 படிகளும் (பிரதிகளும்) விற்பனையாகின்றன.

தமிழ் முரசின் ஆசிரியர்கள்[தொகு]

  • கோ. சாரங்கபாணி
  • ஜெயராம் சாரங்கபாணி
  • வை. திருநாவுக்கரசு
  • டாக்டர் சித்ரா ராஜாராம்
  • முருகையன் நிர்மலா (தற்போதைய ஆசிரியர்)

இலவச ஆங்கில வார இதழ்[தொகு]

தமிழ் முரசு சொந்தமாகவே "தப்லா" இலவச ஆங்கில வார இதழை 2008, அக்டோபர் 10 இல் வெளியிட ஆரம்பித்தது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_முரசு&oldid=3166383" இலிருந்து மீள்விக்கப்பட்டது