கத்தார் ஏர்வேஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Qatar Airways
القطرية
Al Qatariyah
IATA ICAO அழைப்புக் குறியீடு
QR QTR QATARI
நிறுவல்22 நவம்பர் 1993 (1993-11-22)
செயற்பாடு துவக்கம்20 சனவரி 1994 (1994-01-20)
வான்சேவை மையங்கள்Hamad International Airport
அடிக்கடி பறப்பவர் திட்டம்Qatar Airways Privilege Club (Qmiles)
வானூர்தி நிலைய ஓய்விடம்Al Mourjan Business Lounge / London Heathrow Premium Lounge
வான்சேவைக் கூட்டமைப்புOneworld
துணை நிறுவனங்கள்
  • The Qatar Aircraft Catering Company
  • Qatar Airways Holidays
  • United Media Int
  • Qatar Duty Free
  • Qatar Aviation Services
  • Qatar Distribution Company
  • Qatar Executive
வானூர்தி எண்ணிக்கை152
சேரிடங்கள்146
மகுட வாசகம்World's 5-star airline
தாய் நிறுவனம்Government of Qatar
தலைமையிடம்Qatar Airways Towers,
Doha, Qatar
முக்கிய நபர்கள்Akbar Al Baker (CEO)
இணையத்தளம்www.qatarairways.com

கத்தார் ஏர்வேஸ் (Qatar Airways) நிறுவனம் டோஹாவில்[1] உள்ள கத்தார் ஏர்வேஸ் டவரினை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இது ஹப் மற்றும், ஸ்போக் அமைப்பாகவும் பயன்படும் இடமாகும். இங்கு ஆஃப்பிரிக்கா, மத்திய ஆசியா, ஐரோப்பா, தெற்காசியா, தூர கிழக்கு, மத்திய கிழக்கு, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஓசியானியா போன்ற இடங்களில் சுமார் 125 சர்வதேச இலக்குகளைக் கொண்டுள்ளது. இங்கு செயல்படும் சுறுசுறுப்பான வேலைகளைச் சமாளிக்க சுமார் நூறுக்கும் மேற்பட்ட விமானங்கள் கொண்ட குழுக்கள் செயல்படுத்தப்படுகின்றன.

கத்தர் ஏர்வேஸின் குழுமத்தில் சுமார் 31,000 க்கும் மேற்பட்ட மக்கள் வேலை செய்கின்றனர். இதில் 19,000 பேர் கத்தர் ஏர்வேஸ்க்கு நேரடியாக வேலை செய்பவர்கள். அக்டோபர் 2013 முதல் ஒன்வேர்ல்டு உடன் கத்தார் ஏர்வேஸ் இணைந்துள்ளது. வளைகுடா பகுதிகளில் விமானச்சேவை புரியும் விமான நிறுவனங்களில், ஒன்வேர்ல்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த முதல் நிறுவனம் கத்தார் ஏர்வேஸ் ஆகும்.

இலக்குகள்[தொகு]

மக்கள் வசிக்கும் ஆறு கண்டங்களுக்கும் வெவ்வேறு இலக்குகளைக் கொண்டு கத்தார் ஏர்வேஸ் செயல்படுகிறது.[2] மே 27, 2014 இல் பஹ்ரைனில் இருந்து டோஹாவின் ஹமட் சர்வதேச விமான நிலையத்திற்கு விமானத்தினைச் செயல்படுத்தியதன் மூலம் கத்தார் ஏர்வேஸ் தனது அலுவலகச் செயல்பாடுகளை முறைப்படி டோஹாவின் சர்வதேச விமான நிலையத்திற்கு மாற்றியது.[3]

அக்டோபர் 2014 ன் படி, கத்தார் ஏர்வேஸ் ட்ஜபவுடி நகரத்திற்கு சேவையினை தொடர்ந்ததன் மூலம் உலகளவில் 145 இடங்களை ஆக்கிரமித்திருந்தது.[4] அதற்கு முன்பு ஃபாலாஸ்/ஃபோர்ட் வொர்த் பாதையினை வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இது அமெரிக்காவில் இந்நிறுவனத்தின் ஏழாவது இலக்காகவும், டெக்ஸாஸில் இரண்டாவது இலக்காகவும் அமைந்தது. இத்துடன் ஹௌவுஸ்டன் [5], ஹனெடா [6], மியாமி [7] ,எடின்பர்க் இலக்குகளையும் கத்தார் ஏர்வேஸ் கொண்டுள்ளது. இது லண்டனின் மூன்றாவது இலக்காகும். இஸ்தான்புல்லில் சபிஹா கோகென் சர்வதேச விமான நிலையம், துருக்கியின் மூன்றாவது இலக்காகும், அத்துடன் ஒரு புதிய சேவை அஸ்மாராவிற்கு டிசம்பர் 2014 இல் ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அக்டோபர் 8, 2012 ஆம் ஆண்டு கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் வெளிப்படையாக இன்னும் 18 மாதங்களில் ஒன்வேர்ல்டுடன் பங்காண்மையினைப் பெற்றிடும் என்று கூறியது.[8] அலையன்ஸ் உடனான கூட்டணியினை பிரிட்டிஷ் ஏர்வேஸ் கத்தார் ஏர்வேஸ் உதவியுடன் பெற்றது. இந்தக் கூட்டணி பெருவிழா அக்டோபர் 29, 2013 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதன் மூலம் வளைகுடாவினைச் சேர்ந்த விமானச்சேவை நிறுவனங்களில், அலையன்ஸ் உடனான கூட்டணியினை பெற்ற முதல் நிறுவனம் என்ற பெயரினை கத்தார் ஏர்வேஸ் பெற்றது.

கோட்ஷேர் ஒப்பந்தங்கள்[தொகு]

கத்தார் ஏர்வேஸ் பின்வரும் விமானச்சேவை நிறுவனங்களுடன் கோட்ஷேர் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. (நவம்பர் 2013 ன் படி)

  1. ஏர் ஃப்ரான்ஸ்
  2. ஆல் நிப்பான் ஏர்வேஸ்
  3. அமெரிக்கன் ஏர்லைன்ஸ்
  4. ஏசியானா ஏர்லைன்ஸ்
  5. அஸெர்பைஜன் ஏர்லைன்ஸ்
  6. பாங்காக் ஏர்வேஸ்
  7. காதே பசுபிக்
  8. கருடா இந்தோனேசியா
  9. கோல் ஏர்லைன்ஸ்
  10. ஜப்பான் ஏர்லைன்ஸ்
  11. ஜெட்புளூ ஏர்லைன்ஸ்
  12. மலேசியா ஏர்லைன்ஸ்
  13. மிடில் ஈஸ்ட் ஏர்லைன்ஸ்
  14. ஓமன் ஏர்
  15. ராயல் ஜோர்டானியன்
  16. எஸ்7 ஏர்லைன்ஸ்
  17. யுஎஸ் ஏர்வேஸ்
  18. SNCF (ரயில்வே)

தற்போதைய விமான குழுக்கள்[தொகு]

ஜனவரி 2015 ன் படி, கத்தார் ஏர்வேஸ் பின்வரும் விமானங்களைக் கொண்டுள்ளது.

விமான ரகம் சேவையில் உள்ள விமானங்களின் எண்ணிக்கை ஆர்டர்கள் விருப்பங்கள்
ஏர்பஸ் A319-100LR 1
1
ஏர்பஸ் A320-200 31 8 [30]
9
ஏர்பஸ் A320neo 36 [30]
ஏர்பஸ் A321-200 8
ஏர்பஸ் A321neo 14 [30]
ர்பஸ் A330-200 16
ஏர்பஸ் A330-300 13
ஏர்பஸ் A340-600 4
ஏர்பஸ் A350-900 1 42
ஏர்பஸ் A350-1000 37
ஏர்பஸ் A380-800 4 6 3
போயிங் 777-200LR 9 8
போயிங் 737-300ER 27
போயிங் 737-9X 50
போயிங் 787-8 18 42
கத்தார் ஏர்வேஸ் - கார்கோ விமான குழு
ஏர்பஸ் A330-200F 4 4 8
போயிங் 777F 7 5
மொத்தம் 152 249 11

முந்தைய விமானக் குழு[தொகு]

பின்வரும் விமானங்களை கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் முந்தைய பயன்பாட்டில் வைத்திருந்தது.

  1. ஏர்பஸ் A300-600R
  2. ஏர்பஸ் A300-600RF
  3. ஏர்பஸ் A310-200
  4. போயிங் 727-200Adv
  5. போயிங் 747-100B
  6. போயிங் 747SP

மொபைல் பயன்பாடுகள்[தொகு]

ஐபோன், ஆன்ட்ராய்டு மற்றும் பிளாக்பெர்ரி போன்ற கைதொலைபேசிகளுக்கான பிரத்யேக மொபைல் பயன்பாடுகளை கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் ஏப்ரல் 19, 2007 இல் வெளியிட்டது. இது பயணிகளுக்கு விமானம் குறித்த பல்வேறு சேவைப் பயன்பாட்டிற்கு பெரிதும் உதவிகிறது.

கத்தார் ஏர்வேஸின் உயர்தர வழித்தடங்கள்[தொகு]

கத்தார் ஏர்வேஸின் முக்கிய வழித்தடங்களான டோஹா – துபாய், துபாய் – டோஹா, பாங்காக் – கோஹ் சமுய் மற்றும் குவைத் – டோஹா போன்ற வழித்தடங்களுக்கு வாரம் முறையே 125, 125, 105 மற்றும் 53 விமானங்களை செயல்படுத்துகிறது. குறிப்பிட்ட தேவைகளுக்கென இயக்கப்படும் விமானச்சேவைகளை அட்டிஸ் அபபா - டோஹா மற்றும் க்ளாஸ்கோவ் – லண்டன் போன்ற வழித்தடங்களில் செயல்படுத்துகிறது.

விபத்துக்கள் மற்றும் சம்பவங்கள்[தொகு]

ஏப்ரல் 19, 2007 : ஏர்பஸ் A300 (பதிவு A7-ABV) விமானத்தினை பணி முடித்தபின் நிறுத்தி வைக்கும் இடத்தில் தீவிபத்துக்குள்ளானது. இது அபுதாபி விமான தொழில்நுட்பங்கள் நிறுவனத்தினால், விமானத்தின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தபோது ஏற்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Qatar Airways – Legal Information". Qatar Airways. 20 November 2011 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Fact Sheet" (PDF). Qatar Airways. September 2014. 13 October 2014 at the Wayback Machine அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
  3. "Qatar Airways commences full operations at Hamad International Airport". (Press release) Qatar Airways. 27 May 2014. Archived from the original on 27 மே 2014. Archived from the original on 27 May 2014 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)CS1 maint: unfit url (link)
  4. "Qatar Airways commences flights to Djibouti continuing its expansion in Africa". (Press release) Qatar Airways. 27 October 2014. 18 November 2014 at the Wayback Machine அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
  5. Trejos, Nancy (3 July 2014). "Dallas/Fort Worth lands another Gulf carrier". USA Today. 20 ஜனவரி 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. Archived from the original on 4 July 2014 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
  6. Duclos, François (18 June 2014) (3 July 2014). "Qatar Airways se pose à Tokyo-Haneda [Qatar Airways arrived at Haneda]". Air Journal (in French). Archived from the original on 18 ஜூன் 2014. 18 June 2014 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unfit url (link)
  7. Karp, Aaron (13 June 2014) (Archived from the original on 18 June 2014.). "Miami becomes Qatar Airways' sixth US destination". Air Transport World. Archived from the original on 18 ஜூன் 2014. 13 April 2022 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)CS1 maint: unfit url (link)
  8. "Qatar Airways". Cleartrip.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கத்தார்_ஏர்வேஸ்&oldid=3586475" இருந்து மீள்விக்கப்பட்டது