உருசிய தேசிய காற்பந்து அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உருசியாவின் கொடி இரசியா
கூட்டமைப்பு Russian Football Union (RFU)
Российский Футбольный Союз
கண்ட கூட்டமைப்பு யூஈஎஃப்ஏ (ஐரோப்பா)
அணித் தலைவர் Sergei Ignashevich
Most caps Viktor Onopko (109)
அதிகபட்ச கோல் அடித்தவர் Vladimir Beschastnykh (26)
தன்னக விளையாட்டரங்கம் லூழ்நிகி
லொகோமோடிவ்
பெட்ரோவ்சுகி
ஃபிஃபா குறியீடு RUS
ஃபிஃபா தரவரிசை 15 Green Arrow Up Darker.svg 1
அதிகபட்ச ஃபிஃபா தரவரிசை 3 (ஏப்ரல் 1996)
குறைந்தபட்ச ஃபிஃபா தரவரிசை 40 (திசம்பர் 1998)
எலோ தரவரிசை 15
அதிகபட்ச எலோ 7 (ஆகத்து 2009)
குறைந்தபட்ச எலோ 34 (சூன் 2005)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
 உருசியா 2–0 மெக்சிக்கோ 
(மாஸ்கோ, உருசியா; 16 ஆகத்து 1992)
பெருத்த வெற்றி
 சான் மரீனோ 0–7 உருசியா 
(செயின்ட் மரினோ, சான் மரீனோ; 7 சூன் 1995)
சிறந்த முடிவு 18-வது இடம், 1994
ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி
பங்கேற்புகள் 4 (முதற்தடவையாக 1996 இல்)
சிறந்த முடிவு 3-வது இடம், 2008

உருசிய தேசிய காற்பந்து அணி (Russia national football team; உருசியம்: Национа́льная сбо́рная Росси́и по футбо́лу), பன்னாட்டுக் கால்பந்தாட்டப் போட்டிகளில் உருசியா நாட்டின் சார்பில் பங்கேற்கும் அணியாகும். இதனை, உருசியாவில் கால்பந்து மேலாண்மைக்கான அமைப்பான உருசிய கால்பந்து ஒன்றியம் தேர்ந்தெடுத்து நிர்வகிக்கிறது. இது மூன்று தன்னக விளையாட்டரங்கங்களைக் கொண்டிருக்கிறது. அவை: லூழ்நிகி விளையாட்டரங்கம், லொகோமோடிவ் விளையாட்டரங்கம் (மாஸ்கோ) (இவ்விரண்டும் மாஸ்கோவில் உள்ளன) மற்றும் பெட்ரோவ்சுகி விளையாட்டரங்கம் (இது சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் உள்ளது). உருசியா மூன்று உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றிருக்கிறது ( 1994, 2002, 2014); 2018-இல் உலகக்கோப்பையை நடத்தும் நாடாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. நான்கு முறை ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றிருக்கிறது (1996, 2004, 2008 மற்றும் 2012). யூரோ 2008-இல்தான் முதன்முறையாக குழுநிலையாத் தாண்டி அடுத்த நிலைக்குச் சென்றனர். இந்தப் புள்ளிவிவரங்கள் சோவியத் யூனியன் அணியின் செயல்பாடுகளைக் கணக்கில் கொள்ளாதது.

குறிப்புதவிகள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

  • Marc Bennetts (2008). Football Dynamo – Modern Russia and the People's Game. London: Virgin Books. ISBN 0-7535-1319-6

வெளியிணைப்புகள்[தொகு]