சோவியத் ஒன்றியம் தேசிய காற்பந்து அணி
அடைபெயர் | சிவப்பு இராணுவம் (Red Army) | ||
---|---|---|---|
கூட்டமைப்பு | சோவியத் யூனியன் கால்பந்துக் கூட்டமைப்பு | ||
Most caps | Oleg Blokhin (112) | ||
அதிகபட்ச கோல் அடித்தவர் | Oleg Blokhin (42) | ||
தன்னக விளையாட்டரங்கம் | Central Lenin Stadium (after 1956) Dynamo Stadium (before 1956) Vorovsky Stadium (before 1928) | ||
பீஃபா குறியீடு | URS | ||
அதிகபட்ச எலோ | 1 | ||
| |||
முதல் பன்னாட்டுப் போட்டி | |||
சோவியத் ஒன்றியம் 3–0 துருக்கி (Moscow, Soviet Union; 16 November 1924) Last international சைப்பிரசு 0–3 சோவியத் ஒன்றியம் (இலார்னாக்கா, Cyprus; 13 November 1991) | |||
பெரும் வெற்றி | |||
சோவியத் ஒன்றியம் 11–1 இந்தியா (Moscow, Soviet Union; 16 September 1955) பின்லாந்து 0–10 சோவியத் ஒன்றியம் (எல்சிங்கி, Finland; 15 August 1957) | |||
பெரும் தோல்வி | |||
இங்கிலாந்து 5–0 சோவியத் ஒன்றியம் (இலண்டன், இங்கிலாந்து; 22 October 1958) | |||
உலகக் கோப்பை | |||
பங்கேற்புகள் | 7 (முதற்தடவையாக 1958 இல்) | ||
சிறந்த முடிவு | நான்காம் இடம், 1966 | ||
யூரோ | |||
பங்கேற்புகள் | 6 (முதற்தடவையாக 1960 இல்) | ||
சிறந்த முடிவு | வாகையர், 1960 |
வென்ற பதக்கங்கள் | ||
---|---|---|
Men’s Football | ||
1956 Melbourne | Team | |
1988 Seoul | Team | |
1972 Munich | Team | |
1976 Montreal | Team |
சோவியத் ஒன்றியம் தேசிய காற்பந்து அணி (Soviet Union national football team; உருசியம்: сбо́рная Сове́тского Сою́за по футбо́лу, sbornaya Sovyetskogo Soyuza po futbolu), பன்னாட்டுக் காற்பந்தாட்டப் போட்டிகளில் சோவியத் யூனியன் சார்பில் பங்கேற்ற காற்பந்து அணியாகும். சோவியத் யூனியனின் பிளவுக்குப் பிறகு, உருசியா தேசிய காற்பந்து அணியாகத் தொடர்கிறது;[1] ஃபிஃபாவின் விதிமுறைகளின்படி, சோவியத் யூனியன் அணியின் செயல்பாடுகள் உருசிய கால்பந்து அணியின் சேர்க்கப்பட்டன.
சோவியத் யூனியன் அணியானது, உலகக்கோப்பை காற்பந்துப் போட்டிக்கு, 1974 மற்றும் 1978 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே தகுதிபெறாமல் இருந்திருக்கிறது. மொத்தமாக, ஏழுமுறை உலகக்கோப்பைப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றிருக்கிறது. 1966 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் நான்காம் இடம் பெற்றதே இவ்வணியின் சிறப்பான செயல்பாடாகும்; இதில், அரையிறுதியில் மேற்கு செருமனி அணியிடம் 2-1 என்ற இலக்குக் கணக்கில் தோல்வியுற்றது.
சோவியத் யூனியன், ஐந்து ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றது. முதன்முதலில் நடத்தப்பட்ட 1960 யூரோவின் இறுதிப் போட்டியில் யூகோஸ்லாவிய அணியை 2-1 என்ற இலக்குக் கணக்கில் வென்று கோப்பையைக் கைப்பற்றியது. மேலும், 1964, 1972 மற்றும் 1988-ஆம் ஆண்டுகளில் நடந்த போட்டிகளில் இரண்டாம் இடம் பெற்றது; 1968-இல் நான்காம் இடம்பெற்றது.
சோவியத் யூனியன், கோடை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்றது; 1956 மற்றும் 1988-ஆம் ஆண்டுகளில் தங்கம் வென்றது.
குறிப்புகள்
[தொகு]- ↑ "FIFA". Archived from the original on 2008-07-01. பார்க்கப்பட்ட நாள் 2014-02-19.
வெளியிணைப்புகள்
[தொகு]- RSSSF archive of results 1923-1991/92
- RSSSF archive of most capped players and highest goalscorers
- Football in Soviet Union
- Russia Team Profile including old Soviet Union World Cup qualifications பரணிடப்பட்டது 2007-03-13 at the வந்தவழி இயந்திரம்
- Russia (Soviet Union) National Football Team பரணிடப்பட்டது 2020-08-07 at the வந்தவழி இயந்திரம்
- Team history பரணிடப்பட்டது 2014-02-03 at the வந்தவழி இயந்திரம்