கிலியான் எம்பாப்பே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிலியான் எம்பாப்பே
Kylian Mbappe - March 2018.jpg
2018இல் பிரான்சு வரிசையில் எம்பாப்பே
சுய தகவல்கள்
முழுப் பெயர்கிலியான் எம்பாப்பே லோத்தன்[1]
பிறந்த நாள்20 திசம்பர் 1998 (1998-12-20) (அகவை 24)[2]
பிறந்த இடம்பாரிஸ், பிரான்சு
உயரம்1.78 மீ[3]
ஆடும் நிலை(கள்)முன்கள வீரர்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
பாரிசு செயின்ட்-செர்மைன்
(மொனாக்கோ கழகத்திடமிருந்து கடனாக)
எண்29
இளநிலை வாழ்வழி
2004–2013ஏஎஸ் பான்டி
2013–2015மொனாக்கோ
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2015–2016மொனாக்கோ பி12(4)
2015–மொனாக்கோ41(16)
2017–2018→ பாரிசு செயின்ட்-செர்மைன் (கடன்)27(13)
பன்னாட்டு வாழ்வழி
2014பிரான்சு 17 கீழ்2(0)
2016பிரான்சு 19 கீழ்11(7)
2017–பிரான்சு19(7)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 13:22, 16 சூன் 2018 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 16:00, 30 சூன் 2018 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.

கிலியான் எம்பாப்பே லோத்தன் ( Kylian Mbappé Lottin, பிரெஞ்சு உச்சரிப்பு: ​[kiljan (ə)mbape]; பிறப்பு 20 திசம்பர் 1998)[4] பிரான்சிய தொழில்முறை கால்பந்தாட்ட வீரர். இவர் மொனாக்கோ கழகத்திடமிருந்து பாரிசு செயின்ட்-செர்மைன் கழகத்திற்கு கடனாகத் தரப்பட்டு ஆடி வருகிறார். இந்த அணியிலும் பிரான்சு தேசிய அணியிலும்முன்கள வீரராக இருந்து வருகிறார்.

எம்பாப்பே சிறுவயதிலேயே முதன்மையிடத்தை எட்டியவர்; இளையோர் அகாதமிகளான ஏஎஸ் பான்டி, கிளையர்பொன்டைன், மொனாக்கோ அணிகளில் சிறப்பாக விளையாடி வந்தார். இறுதியில் மொனாக்கோ அணியில் தமது தொழில்முறை அறிமுகத்தைத் தொடங்கினார். தொடர்ந்து இவ்வணியில் வழமையாக கோல்கள் எடுப்பவராக 2016–17 பருவத்தில் பதினேழு ஆண்டுகளில் முதல்முறையாக மொனாக்கோ அணி வெற்றிபெற உதவினார். அடுத்த பருவத்தில் பாரிசு செயின்ட்-செர்மைன் கழகத்திற்கு கடனாக வழங்கப்பட்டு பின்னர் பருவம் முடிந்த பிறகு நிரந்தரமாக எடுத்துக்கொள்ள €180 மில்லியனுக்குப் பேசப்பட்டுள்ளார். இதனால் மிகவும் விலைமதிப்புள்ள இளைஞராகவும் இரண்டாவது மிகவும் விலைபேசப்பட்ட வீரராகவும் விளங்குகிறார்.[5]

எம்பாப்பே பன்னாட்டுப் போட்டிகளில் மூத்தோர் பிரிவில் பிரான்சிற்காக மார்ச் 2017இல் முதலில் ஆடினார். முன்னதாக பிரான்சின் 17 கீழ், 19 கீழ் அணிகளில் ஆடியுள்ளார். பெருவிற்கு எதிராக 2018 உலகக்கோப்பை காற்பந்து ஆட்டத்தில் 19 வயதில் கோலடித்து பிரான்சின் மிக இளைய கோல் எடுத்தவராக சாதனை படைத்தார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Rémoussin, Simon (24 October 2016). "Kylian Mbappé, precocious talent". AS Monaco FC. 5 பிப்ரவரி 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 5 February 2018 அன்று பார்க்கப்பட்டது.
  2. "2018 FIFA World Cup Russia: List of players: France" (PDF). FIFA. 10 June 2018. p. 11. 19 ஜூன் 2018 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 10 June 2018 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Kylian Mbappé". Paris Saint-Germain F.C. 2 May 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது.
  4. "Kylian Mbappe Bio, Wiki, Net Worth, Dating, Girlfriend, FIFA, Goal" (in en-US). Bio Wikis. 2018-06-30. https://biowikis.com/kylian-mbappe/. 
  5. "PSG trigger Kylian Mbappe's permanent transfer from Monaco". 19 February 2018. http://www.espn.com/soccer/soccer-transfers/story/3388743/psg-trigger-kylian-mbappes-permanent-transfer-from-monaco. 
  6. FIFAWorldCup (21 June 2018). "The youngest goalscorer at the #WorldCup for France! @KMbappe with the tap-in to give #FRA the lead! #FRAPER 1-0" (Tweet).
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிலியான்_எம்பாப்பே&oldid=3707489" இருந்து மீள்விக்கப்பட்டது