2018 உலகக்கோப்பை காற்பந்து இறுதிப் போட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2018 பீஃபா உலகக்கோப்பை காற்பந்து இறுதி
Luzhniki Stadium2.jpg
இறுதிப்போட்டி நடைபெறவிருக்கும் லூசினிக்கி அரங்கு, மாஸ்கோ
நிகழ்வு2018 உலகக்கோப்பை காற்பந்து
நாள்சூலை 15, 2018 (2018-07-15)
இடம்லூசினிக்கி அரங்கு, மாஸ்கோ
ஆட்ட நாயகன்அந்துவான் கிரீசுமன் (பிரான்சு)[1]
ஆட்ட நடுவர்நேசுத்தர் பித்தானா (அர்கெந்தீனா)[2]
வருகைப்பதிவு78,011[3]
வானிலைபகுதியாக இருள்மூட்டம்
27 °C (81 °F)
51% ஈரப்பதம்[4]
2014
2022

2018 பீஃபா உலகக்கோப்பை காற்பந்து இறுதிப் போட்டி 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டியின் கால்பந்து வெற்றியாளரைத் தெரிவுசெய்ய இடம்பெற்ற போட்டியாகும். இது பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு அங்கத்துவ ஆண் தேசிய அணிகளுக்கிடையிலான நான்கு ஆண்டுகளுக்கொரு முறை இடம்பெறும் 21 வது உலகக்கோப்பை காற்பந்து இறுதிப் போட்டியாக அமைந்தது. இப்போட்டி உருசியாவில் மாஸ்கோ லூசினிக்கி அரங்கில் 15 சூலை 2018 அன்று, அரையிறுதிப்போட்டியின் வெற்றியாளர்களுக்கிடையில் இடம் பெற்றது.[5]

இதில் வெற்றி பெற்ற பிரான்சு அணி 2021 பீஃபா கூட்டமைப்புக்கள் கோப்பைக்குத் தகுதி பெற்றது.

அரங்கு[தொகு]

இரவு நேரத்தில் லூசினிக்கி அரங்கு

இறுதிப் போட்டி மாஸ்கோ நகரில் லூசினிக்கி அரங்கில் நடைபெற்றது. லூசினிக்கி அரங்கு உருசியாவின் தேசிய அரங்கு ஆகும். இங்கு உருசிய தேசிய காற்பந்து அணி, மற்றும் சோவியத் அணிகளின் போட்டிகள் பல நடைபெற்று இடம்பெற்றுள்ளன.[6][7]

இறுதிப் போட்டியை லூசினிக்கியில் நடத்துவது தொடர்பான இறுதி முடிவு 2012 டிசம்பர் 14 இல் டோக்கியோ நடைபெற்ற பீஃபா உயர்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.[8] இவ்வரங்கில் ஜூன் 14 ஆரம்ப நிகழ்வு உட்பட ஆறு போட்டிகளை நடத்தியுள்ளது. இவற்றில் மூன்று குழு நிலை ஆட்டங்களும், ஒரு 16-அணி ஆட்டமும், ஒரு அரையிறுதி ஆட்டமும் அடங்கும்.[6][5]

லூசினிக்கி அரங்கு ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியத்தினால் நான்காவது வகை அரங்காகத் தரப்படுத்தப்பட்டுள்ளது. இது உருசியாவின் மிகப் பெரிய விளையாட்டரங்காகும். வழமையாக இதன் கொள்ளளவு 81,006 ஆகும், ஆனால் உலக்கோப்பைக்காக இதன் கொள்ளளவு 78,011 ஆகக் குறைக்கப்பட்டது.[7][9]

இறுதிக்கான பாதை[தொகு]

பிரான்சு ஆட்டம் குரோவாசியா
எதிரணிகள் முடிவு குழு நிலை எதிரணிகள் முடிவு
 ஆத்திரேலியா 2–1 ஆட்டம் 1  நைஜீரியா 2–0
 பெரு 1–0 ஆட்டம் 2  அர்கெந்தீனா 3-0
 டென்மார்க் 0–0 ஆட்டம் 3  ஐசுலாந்து 2-1
இறுதி நிலைகள்
எதிரணிகள் முடிவு ஆட்டமிழக்கும் நிலை எதிரணிகள் முடிவு
 அர்கெந்தீனா 4–3 சுற்று 16  டென்மார்க் 1–1 (கூ.நே.) (3–2 சநீ)
 உருகுவை 2–0 கால் இறுதிகள்  உருசியா 2–2 (கூ.நே.) (4–3 சநீ)
 பெல்ஜியம் 1–0 அரை இறுதிகள்  இங்கிலாந்து 2–1 (கூ.நே.)

போட்டி[தொகு]

அந்துவான் கிரீசுமன் (பிரான்சு) ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இறுதிப் போட்டியை குரோவாசியா 18:00 மணிக்கு உள்ளூர் நேரம் (15:00 ஒசநே) ஆரம்பித்து வைத்தது. வெப்பநிலை 27 °செ (81 °ப) ஆக இருந்தது.[4] ஆட்டத்தில் இடையிடையே இடியுடன் கூடிய மழை பெய்தது.[10] 78,011 இரசிகர்கள் லூசினிக்கி அரங்கில் ஆட்டத்தைப் பார்வையிட்டனர். உருசியத் தலைவர் விளாதிமிர் பூட்டின், பிரெஞ்சுத் தலைவர் இம்மானுவேல் மாக்ரோன், குரோவாசியத் தலைவர் கொலிண்டா கிராபர் கிட்டாரோவிக் உட்படப் பத்து நாட்டுத் தலைவர்கள் பார்வையிட்டனர்.[11]

ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் பிரான்சு வீரர் கிரீசுமன் அடித்த பந்தைத் தடுக்க முற்பட்ட குரோவாசிய வீரர் மஞ்சூக்கிச்சின் தலையில் பட்டு 'சுய கோலானது'.[12] உலகக்கோப்பை வரலாற்றில் இறுதிப் போட்டி ஒன்றில் சுய கோல் போட்டது இதுவே முதல் முறையாகும். 2018 சுற்றில் இது 12வது சுய கோல் ஆகும்.[13] தொடர்ந்து 28வது நிமிடத்தில் குரோவாசியாவின் இவான் பெரிசிச் கோல் அடிக்க ஆட்டம் சமனானது. 38வது நிமிடத்தில் கோல் பகுதியில் குரோவாசிய வீரர் கையில் பந்து பட்டதால் பிரான்சுக்கு தண்ட உதை வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் கிரீசுமன் கோல் காப்பாளரை ஏமாற்றி வலைக்குள் பந்தைத் தள்ளினார்.[12][14] முதல் அரைப் பகுதியில் பிரான்சு 2-1 என முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில், 59வது நிமிடத்தில் பிரெஞ்சு வீரர் பவுல் போக்பா கோல் போட்டார். 65வது நிமிடத்தில் எம்பாப்பே கோல் அடிக்க 4-1 என பிரான்சு வலுவான நிலையைப் பெற்றது.[15] 69வது நிமிடத்தில் பிரான்சு கோல் காப்பாளரின் தவறால், குரோவாசிய மஞ்சூக்கிச் கோல் அடித்தார். முடிவில் 4 - 2 என்ற கோல் கணக்கில் பிரான்சு உலகக்கிண்னத்தைப் பெற்றுக் கொண்டது.[16][14]

விபரம்[தொகு]

சூலை 15, 2018 (2018-07-15)
18:00 (ஒசநே+3)
பிரான்சு  4–2  குரோவாசியா
மஞ்சூக்கிச் Goal 18' (சுய கோல்)
கிரீசுமன் Goal 38' (தண்ட உதை)
போக்பா Goal 59'
எம்பாப்பே Goal 65'
அறிக்கை பெரிசிச் Goal 28'
மஞ்சூக்கிச் Goal 69'
லூசினிக்கி அரங்கு, மாஸ்கோ
பார்வையாளர்கள்: 78,011[3]
நடுவர்: நேஸ்தர் பித்தானா (அர்கெந்தீனா)
பிரான்சு[17]
குரோவாசியா[17]
GK 1 ஊகோ லோரிசு (த)
RB 2 பெஞ்சமின் பவார்
CB 4 ரபாயெல் வரானி
CB 5 சாமுவேல் உம்தித்தி
LB 21 லூக்கசு எர்னாண்டெசு YC 41'
CM 6 பவுல் போக்பா
CM 13 இங்கோலோ காண்டே YC 27' Substituted off 55'
RW 10 கிலியான் எம்பாப்பே
AM 7 அந்துவான் கிரீசுமன்
LW 14 பிளைசு மத்தூயிதி Substituted off 73'
CF 9 ஒலிவியர் ஜிரூட் Substituted off 81'
பதிலீடுகள்:
MF 15 இசுட்டீவன் இன்சோன்சி Substituted in 55'
MF 12 கொரென்டின் தொலிசோ Substituted in 73'
FW 18 நாபில் பெக்கிர் Substituted in 81'
மேலாளர்:
திடியர் தெசாம்ப்சு
FRA-CRO 2018-07-15.svg
GK 23 தானியேல் சுபாசிச்
RB 2 சீமி விரிசால்ச்கோ YC 90+2'
CB 6 தேஜன் லோவ்ரென்
CB 21 தொமாகொச் வீதா
LB 3 இவான் இசுத்திரினிச் Substituted off 81'
CM 7 இவான் ராக்கித்திச்
CM 11 மார்செலோ புரொசோவிச்
RW 18 ஆண்டி ரெபீச் Substituted off 71'
AM 10 லூக்கா மோத்ரிச் (த)
LW 4 இவான் பெரிசிச்
CF 17 மரியோ மஞ்சூக்கிச்
பதிலீடுகள்:
FW 9 அந்திரேய் கிரமாரிச் Substituted in 71'
FW 20 மார்க்கோ பிஜாக்கா Substituted in 81'
மேலாளர்:
சிலாத்கோ தாலிச்

சிறந்த ஆட்ட வீரர்:
அந்துவான் கிரீசுமன் (பிரான்சு)[1]

துணை நடுவர்கள்:[17]
எர்னான் மைதானா (அர்கெந்தீனா)
யுவான் பாவ்லோ பெலாட்டி (அர்கெந்தீனா)
காணொளி உதவி நடுவர்:
மாசிமிலியானோ இராட்டி (இத்தாலி)

ஆட்ட விதிகள்[18]

 • 90 நிமிடங்கள்
 • 30 நிடங்கள் (கூடுதல் நேரம் தேவைப்பட்டால் மட்டும்)
 • சமன்நீக்கி மோதல், கோல்கள் சமநிலையில் இருந்தால்
 • அதிகபட்ச பதில் வீரர்கள் மூவர், மேலதிக நேரமாயின் நான்காவது.

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

 1. 1.0 1.1 "France v Croatia – Man of the Match". FIFA.com. Fédération Internationale de Football Association. 15-07-2018. 2018-07-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15-07-2018 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி); Check date values in: |access-date=, |date= (உதவி)
 2. "Nestor Pitana to referee World Cup Final". Fédération Internationale de Football Association. 12-07-2018. https://www.fifa.com/worldcup/news/nestor-pitana-to-referee-world-cup-final. 
 3. 3.0 3.1 "Match report – Final – France v Croatia" (PDF). FIFA. 15-07-2018. 15-07-2018 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |access-date=, |date= (உதவி)
 4. 4.0 4.1 "Start list – Final – France v Croatia" (PDF). FIFA.com. Fédération Internationale de Football Association. 15-07-2018. 15-07-2018 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |access-date=, |date= (உதவி)
 5. 5.0 5.1 "FIFA World Cup Russia 2018 – Match Schedule" (PDF). FIFA.com. Fédération Internationale de Football Association. 24 ஜூன் 2018 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 20 December 2017 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 6. 6.0 6.1 "Luzhniki Stadium: All you need to know". FIFA.com. Fédération Internationale de Football Association. 26 January 2016. 10-07-2018 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
 7. 7.0 7.1 "Luzhniki Stadium". FIFA.com. Fédération Internationale de Football Association. 16 நவம்பர் 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 17 November 2017 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 8. "Russia 2018 to start and finish at Luzhniki Stadium". Fédération Internationale de Football Association. 15-12-2012. Archived from the original on 2017-12-01. https://web.archive.org/web/20171201131857/http://www.fifa.com/worldcup/news/y=2012/m=12/news=russia-2018-start-and-finish-luzhniki-stadium-1971808.html. 
 9. "Russia 2018 World Cup stadium venues: 12 grounds across 11 cities". Press Association. ஈஎஸ்பிஎன். 1 December 2017. http://www.espn.com/soccer/fifa-world-cup/4/blog/post/3291823/russia-world-cup-2018-stadium-venues-12-grounds-across-11-cities. பார்த்த நாள்: 10-07-2018. 
 10. Das, Andrew; Mather, Victor (15 July 2018). "France vs. Croatia: World Cup Final Live Updates". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2018/07/15/sports/world-cup/france-vs-croatia-final.html. பார்த்த நாள்: 15-07-2018. 
 11. Goff, Steven; Fortier, Sam; Wilson, Scott (15 July 2018). "France blazes past Croatia to win World Cup title for the second time". The Washington Post. https://www.washingtonpost.com/news/soccer-insider/wp/2018/07/15/france-vs-croatia-2018-world-cup-final/. பார்த்த நாள்: 15-07-2018. 
 12. 12.0 12.1 Taylor, Daniel (15 July 2018). "France seal second World Cup triumph with 4–2 win over brave Croatia". The Guardian. https://www.theguardian.com/football/2018/jul/15/france-croatia-world-cup-final-match-report. பார்த்த நாள்: 15-07-2018. 
 13. Bull, JJ (15 July 2018). "World Cup final 2018, France vs Croatia: live score and latest updates". The Daily Telegraph. https://www.telegraph.co.uk/world-cup/2018/07/15/france-vs-croatia-world-cup-final-2018-live-score-latest-updates/. பார்த்த நாள்: 15-07-2018. 
 14. 14.0 14.1 "France lift second World Cup after winning classic final 4–2". Reuters. 15 July 2018. https://www.reuters.com/article/us-soccer-worldcup-final/france-lift-second-world-cup-after-winning-classic-final-4-2-idUSKBN1K50RG. பார்த்த நாள்: 15 July 2018. 
 15. Ogden, Mark (15 July 2018). "Mbappe powers France to World Cup glory, Croatia reeling after VAR controversy". ESPN. http://www.espn.com/soccer/fifa-world-cup/4/blog/post/3566255/mbappe-powers-france-to-world-cup-glory-croatia-reeling-after-var-controversy. பார்த்த நாள்: 15-07-2018. 
 16. Glendenning, Barry (15 July 2018). "World Cup 2018 final: France v Croatia – live!". தி கார்டியன். https://www.theguardian.com/football/live/2018/jul/15/world-cup-2018-final-france-v-croatia-live. பார்த்த நாள்: 15-07-2018. 
 17. 17.0 17.1 17.2 "Tactical Line-up – Final – France v Croatia" (PDF). FIFA.com. Fédération Internationale de Football Association. 15-07-2018. 15-07-2018 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |access-date=, |date= (உதவி)
 18. "Regulations – 2018 FIFA World Cup Russia" (PDF). FIFA.com. Fédération Internationale de Football Association. 16-11-2017 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |access-date= (உதவி)

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
FIFA World Cup 2018
என்பதின் ஊடகங்கள் உள்ளன.