ஒலிவியர் ஜிரூட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒலிவியர் ஜிரூட்

2013-ஆம் ஆண்டில் ஆர்சனல் அணியுடன் ஜிரூட்
சுய தகவல்கள்
முழுப் பெயர்ஒலிவியர் ஜிரூட்[1]
பிறந்த நாள்30 செப்டம்பர் 1986 (1986-09-30) (அகவை 37)
பிறந்த இடம்சாம்பெரி, பிரான்ஸ்
உயரம்1.92 m (6 அடி 4 அங்) (6 அடி 4 அங்)[2]
ஆடும் நிலை(கள்)Striker
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
ஆர்சனல்
எண்12
இளநிலை வாழ்வழி
1992–1999பிரோஜிசு
1999–2005கிரினோபிள்
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2005–2008கிரினோபிள்23(2)
2007–2008→ இஸ்ட்ரெஸ் கால்பந்துக் கழகம் (கடன்)33(14)
2008–2010டூர்ஸ் கால்பந்துக் கழகம்44(24)
2010–2012மான்ட்பெலியர் கால்பந்துக் கழகம்73(33)
2010→ டூர்ஸ் கால்பந்துக் கழகம் (கடன்)17(6)
2012–ஆர்சனல்135(57)
பன்னாட்டு வாழ்வழி
2011–பிரான்சு53(20)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், மே 15, 2016 அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் சூலை 3, 2016 அன்று சேகரிக்கப்பட்டது.

ஒலிவியர் ஜிரூட் (Olivier Giroud, பிரெஞ்சு உச்சரிப்பு: ​[ɔlivje ʒiʁu]; பிறப்பு: செப்டம்பர் 30, 1986) என்பவர் பிரான்சு நாட்டைச் சேர்ந்த தொழில்முறை கால்பந்து விளையாட்டு வீரராவார். இங்கிலாந்து பிரீமியர் லீக் அணியான ஆர்சனலுக்கும் பிரான்ஸ் தேசிய காற்பந்து அணிக்காகவும் ஆடி வருகிறார்.[3] இவர் முன்கள வீரராவார்.[4]

பிரான்சின் லீக் 2 அணியா கிரினோபிளில் தனது தொழில்முறை கால்பந்து வாழ்க்கையைத் துவக்கினார். அங்கிருந்து டூர்ஸ் கால்பந்து கழக அணிக்கு 2008-ஆம் ஆண்டில் பெயர்ந்தார். டூர்ஸ் அணியில் தனது இரண்டாவது பருவத்தில் 21 கோல்கள் அடித்து கூட்டிணைவின் அதிக கோல் அடித்தவர் பட்டியலில் முதலிடம் பிடித்தார்; அதன்மூலம் லீக் உன் அணியான மான்ட்பெலியர் கால்பந்துக் கழகத்துக்கு மாற்றலானார். 2011-12-ஆம் பருவ லீக் உன் கூட்டிணைவுப் போட்டித் தொடரில் 21 கோல்களுடன் அதிக கோல் அடித்தவர் பட்டியலில் முதலிடம் பெற்றதோடு, மான்ட்பெலியர் அணி அப்பருவ வாகையர் பட்டத்தைக் கைப்பற்ற உதவினார். இது இங்கிலாந்து பிரீமியர் லீக் அணியான ஆர்சனலுக்கு மாற்றலாக வழிவகுத்தது. ஆர்சனல் அணி 2014, 2015-ஆம் ஆண்டுகளில் பாரம்பரியமிக்க எஃப் ஏ கோப்பையை வெல்ல உதவினார். ஆர்சனல் அணிக்காக பிரீமியர் லீக்கில் 50 கோல்களுக்கு மேல் அடித்த ஏழு நபர்களில் ஒருவராக இவர் விளங்குகிறார்.

2011-ஆம் ஆண்டில் பிரான்ஸ் தேசிய காற்பந்து அணிக்காக முதன்முறையாக விளையாடினார். இன்றுவரை 50 முறைகளுக்கு மேல் பங்கேற்றுள்ள இவர் யூரோ 2012 மற்றும் 2014 உலகக்கோப்பை காற்பந்து போட்டித்தொடர்களில் காலிறுதியை எட்டிய அணியில் இடம்பெற்றவர்.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலிவியர்_ஜிரூட்&oldid=3275724" இருந்து மீள்விக்கப்பட்டது