உள்ளடக்கத்துக்குச் செல்

சவூதி அரேபியா தேசிய காற்பந்து அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சவூதி அரேபியா
அடைபெயர்الصقور الخضر
(பச்சை வல்லூறுகள்)
கூட்டமைப்புசவூதி அரேபியக் காற்பந்துக் கூட்டமைப்பு
மண்டல கூட்டமைப்புமேற்காசிய காற்பந்துக் கூட்டமைப்பு
கண்ட கூட்டமைப்புஆ.கா.கூ (ஆசியா)
தலைமைப் பயிற்சியாளர்பெர்ட் வான் மார்விக்
அணித் தலைவர்ஒசாமா ஹாசாவி
Most capsமொகமது அல்-தீயா (178)[1]
அதிகபட்ச கோல் அடித்தவர்மஜெத் அப்துல்லா (71)
பீஃபா குறியீடுKSA
பீஃபா தரவரிசை65 5 (2 சூன் 2016)
அதிகபட்ச பிஃபா தரவரிசை21 (சூலை 2004)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை126 (திசம்பர் 2012)
எலோ தரவரிசை74 (சூன் 2016)
அதிகபட்ச எலோ27 (நவம்பர் 1998)
குறைந்தபட்ச எலோ112 (1970, 1972)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
 Saudi Arabia 1–1 லெபனான் 
(பெய்ரூத், லெபனான்; 18 சனவரி 1957)
பெரும் வெற்றி
 கிழக்குத் திமோர் 0–10 சவூதி அரேபியா 
(டிலி, கிழக்குத் திமோர்; 17 நவம்பர் 2015)
பெரும் தோல்வி
வார்ப்புரு:நாட்டுத் தகவல் United Arab Republic 13–0 சவூதி அரேபியா சவூதி அரேபியா
(காசாபிளாங்கா, மொரோக்கோ; 3 செப்டம்பர் 1961)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்4 (முதற்தடவையாக 1994 இல்)
சிறந்த முடிவு16களின் சுற்று; 1994
ஆசியக் கோப்பை
பங்கேற்புகள்9 (முதற்தடவையாக 1984 இல்)
சிறந்த முடிவுவெற்றியாளர்: 1984, 1988, 1996
கூட்டமைப்புகள் கோப்பை
பங்கேற்புகள்4 (முதற்தடவையாக 1992 இல்)
சிறந்த முடிவுஇரண்டாமிடம்: 1992

சவூதி அரேபியா தேசிய காற்பந்து அணி (Saudi Arabia national football team, அரபு மொழி: منتخب السعودية لكرة القدم‎) பன்னாட்டு காற்பந்தாட்டங்களில் சவூதி அரேபியாவை சார்புப்படுத்துகின்றது. இந்த அணி அல்-சுக்கோர் (வல்லூறுகள்) எனவும் அல்-கோதோர் (பச்சைகள்) எனவும் இரசிகர்களால் அழைக்கப்படுகின்றது. ஆசியாவின் மிகவும் வெற்றிகரமான தேசிய அணியாகக் கருதப்படும் சவூதி அரேபியா ஆசியக் கோப்பையை மூன்று முறை (1984, 1988, 1996) வென்றுள்ளது; 1994இல் விளையாடத் தொடங்கிய பிறகு, உலகக்கோப்பை இறுதியாட்டங்களுக்கு அடுத்தடுத்து நான்கு முறை தகுதி பெற்றுள்ளது.

1994ஆம் ஆண்டு தான் பங்கேற்ற முதல் உலகக்கோப்பையில் குழுநிலை ஆட்டங்களில் தரவரிசையில் முன்நின்ற பெல்ஜியம், மொரோக்கோ அணிகளை அதிர்ச்சித் தோல்வியடைய வைத்தது; பதினாறு அணிகளின் சுற்றுக்கு முன்னேறி அங்கு சுவீடனிடம் வீழ்ந்தது. அடுத்த மூன்று உலகக்கோப்பைகளில் முதல் சுற்றிலேயே வெளியேறியது.

மேற்சான்றுகள்[தொகு]