ஹாரி கேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹாரி கேன்
Harry Kane.jpg
2012 ஐரோப்பிய 19-கீழோருக்கான போட்டியில் இங்கிலாந்து அணி சார்பாக விளையாடிய கேன்
சுய விவரம்
முழுப்பெயர்ஹாரி எட்வர்டு கேன்[1]
பிறந்த தேதி28 சூலை 1993 (1993-07-28) (அகவை 29)[2]
பிறந்த இடம்வால்தாம்சுடோவ், இங்கிலாந்து
உயரம்6 அடி 2 அங் (1.88 மீ)[3]
ஆடும் நிலைஅடிப்பாளர்
கழக விவரம்
தற்போதைய கழகம்டோட்டென்காம் ஆட்சுபர்
எண்10
இளநிலை வாழ்வழி
1999–2001ரிட்சுவே ரோவர்சு
2001–2002ஆர்சனல்
2002–2004ரிட்சுவே ரோவர்சு
2004வாட்போர்டு
2004–2009டோட்டென்காம் ஆட்சுபர்
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்அணிதோற்.(கோல்)
2009–டோட்டென்காம் ஆட்சுபர்150(108)
2011→ லெய்ட்டன் ஓரியன்ட் (கடன்)18(5)
2012→ மில்வால் (கடன்)22(7)
2012–2013→ நார்விச் சிட்டி (கடன்)3(0)
2013லெஸ்டர் சிட்டி (கடன்)13(2)
தேசிய அணி
2010இங்கிலாந்து U173(2)
2010–2012இங்கிலாந்து U1914(6)
2013இங்கிலாந்து U203(1)
2013–2015இங்கிலாந்து U2114(8)
2015–இங்கிலாந்து25(15)
* இங்கு உள்ளூர் சுற்றுப் போட்டிகளுக்காக முதுநிலை அணிகளுக்காக விளையாடிவை மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன. 19:00, 2 சூன் 2018 (UTC).
அன்று தரவுகள் சேகரிக்கப்பட்டது.

† தோற்றங்கள் (கோல்கள்).

‡ தேசிய அணிக்காக விளையாடிய தரவுகள் 20:00, 18 சூன் 2018 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.

ஹாரி எட்வர்டு கேன் (Harry Edward Kane, 28 சூலை 1993) இங்கிலாந்து தொழில்முறை கால்பந்து விளையாட்டாளர். இங்கிலீஷ் பிரீமியர் லீக் போட்டிகளில் டோட்டென்காம் ஆட்சுபர் கால்பந்துக் கழகத்திற்காக அடிப்பாளராகவும் இங்கிலாந்து தேசிய அணியின் அணித்தலைவராகவும் உள்ளார்.[4]

கேன் டோட்டென்காமிற்காக முதலில் யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு போட்டியில் 25 ஆகத்து 2011 அன்று விளையாடத் தொடங்கினார். இதற்கு முன்னால் லெய்ட்டன், மில்வால், லெஸ்டர் சிட்டி, நார்விச் சிட்டி கழகங்களுக்கு கடனாக தரப்பட்டு விளையாடியுள்ளார்.

டோட்டென்காமிற்காக வழமையாக 2014–15 பருவத்திலிருந்து விளையாடத் தொடங்கினார். இப்பருவத்தில் 31 கோல்கள் அடித்திருந்தார்; இதில் 21 கோல்கள் லீக் நிலையில் எடுத்திருந்தார். ஆண்டின் இளைய சாதனையாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2015–16, 2016–17 பருவங்களில் பிரீமியர் லீக்கில் மிக அதிகமான கோல் எடுத்தவராகத் திகழ்ந்தார். டோட்டென்காம் இந்த இரு பருவங்களிலும் யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு போட்டியில் பங்கேற்க தகுதிபெற உதவினார். ஆறுமுறை மாதத்தின் சிறந்த லீக் விளையாட்டாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு பருவங்களில் ஆண்டின் சிறந்த விளையாட்டாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். டோட்டென்காமிற்காக 100 கோல்கள் அடித்துள்ளார். அந்தக் கழகத்தின் அனைத்துக்கால கோல் சாதனையாளர்களின் பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளார்.

பன்னாட்டாளவில் இளையோர் போட்டிகளில் இங்கிலாந்தின் சார்பாக விளையாடியுள்ளார். மார்ச்சு 27, 2015இல் முதன்முதலில் இங்கிலாந்து தேசிய அணிக்காக யூரோ 2016 போட்டிகளின் முன்னேற்பாடுகளின்போது ஆடத்தொடங்கினார். தி கார்டியன் இவரை 2017ஆம் ஆண்டில் புவியின் ஐந்தாம் சிறந்த கால்பந்து விளையாட்டு வீரராக தேர்ந்தெடுத்துள்ளது..[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஹாரி கேன்". Barry Hugman's Footballers. 31 March 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Harry Kane". 11v11.com. AFS Enterprises. 6 December 2017 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Harry Kane: Overview". Premier League. 13 December 2017 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Harry Kane Height, Weight, Age, Photos, Biography, Wiki, Facts, Net Worth[தொடர்பிழந்த இணைப்பு]. Article from foxsportscelebrities.com (பார்த்த நாள் 01 Aug 2018)"
  5. "The 100 best footballers in the world 2017 – interactive". The Guardian (London). 19 December 2017. https://www.theguardian.com/football/ng-interactive/2017/dec/19/the-100-best-footballers-in-the-world-2017-interactive. பார்த்த நாள்: 4 January 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாரி_கேன்&oldid=3229979" இருந்து மீள்விக்கப்பட்டது