உள்ளடக்கத்துக்குச் செல்

ரொனால்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரொனால்டோ

2019 இல் ரொனால்டோ
சுய தகவல்கள்
முழுப் பெயர்ரொனால்டோ லூயிசு
நசாரியோ டி லிமா [1]
பிறந்த நாள்18 செப்டம்பர் 1976 (1976-09-18) (அகவை 49)[2]
பிறந்த இடம்இதாகுவாய்,[3] பிரேசில்
உயரம்1.83 m (6 அடி 0 அங்)[4]
ஆடும் நிலை(கள்)முன்கள வீரர்
இளநிலை வாழ்வழி
1990–1993சா கிறிச்தாவோ[5]
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
1993–1994குருசீரோ34(34)
1994–1996பிஎஸ்வி46(42)
1996–1997பார்சிலோனா37(34)
1997–2002இணட்ர் மிலன்68(49)
2002–2007ரியல் மாட்ரிட்127(83)
2007–2008ஏ. சி மிலன்20(9)
2009–2011கொரிந்தியன்சு52(29)
மொத்தம்384(280)
பன்னாட்டு வாழ்வழி
1993பிரேசில் 17
வயதிற்குட்பட்டோர் அணி
7(5)
1996பிரேசில் 23
வயதிற்குட்பட்டோர் அணி
8(6)
1994–2011பிரேசில் தேசியக்
கால்பந்தாட்ட அணி
98(62)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும் அன்று சேகரிக்கப்பட்டது.

ரொனால்டோ லூயிசு நசாரியோ டி லிமா (Ronaldo Luís Nazário de Lima; பிறப்பு 18 செப்டம்பர் 1976) ரொனால்டோ என்று அறியப்படும் இவர், பிரேசிலிய மேனாள் தொழில்முறைக் கால்பந்து வீரராவார். இவர் முன்களவீரராக விளையாடினார். லா லிகா சங்கமான ரியல் வல்லடோலிட்டின் உரிமையாளரும் தலைவருமாவார். O Fenômeno, R9 ஆகிய புனைப்பெயர் கொண்ட இவர் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். முன்கள வீரர்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொண்டு வந்துள்ளார். மூன்று முறை FIFA உலக வீரராகப் பெயரிடப்பட்டுள்ளார், இரண்டு பாலன் டி ஓர் விருதுகளை வென்றுள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

ரொனால்டோ லூயிஸ் நசாரியோ டி லிமா 18 செப்டம்பர், 1976 இல் இதாகுவாயில் நெலியோ நசாரியோ தி லிமா - சோனியா தோசு சந்தோசு பராதா தம்பதியினரின் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார்.[6][7] ரொனால்டோவுக்கு நெலியோ சூனியர் என்ற சகோதரர் உள்ளார்.[8][9] இவருக்கு 11 வயதாக இருந்தபோது இவரது பெற்றோர் பிரிந்தனர். பின்னர், பள்ளிப் படிப்பினைத் தொடராமல் கால்பந்து வாழ்க்கையில் கவனம் செலுத்தினார்.[10] இவரின் தாயார் "பள்ளியில் படிக்க வேண்டிய சமயத்தில் எப்போதும் தெருவில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தான், என்னால் அவனை பள்ளிக்கு அனுப்ப இயலாமல் போனது எனது போராட்டத்தில் நான் தோல்வி அடைந்தேன்" எனக் கூறினார்.[10] தனது 12 ஆவது வயதில் சோசியல் ராமோசு ஃபுட்சல் அணியில் சேர்ந்தார. தனது முதல் பருவத்தில் 166 இலக்குகளுடன் நகர இளைஞர் தொடரை வழிநடத்திச் சென்றார். இவரது அணி ஒரே போட்டியில் 12 இலக்குகளை அடித்தது அதில் இவர் மட்டும் 11 இலக்குகளை அடித்தார்.[8][11] தனது திறமைகளை வளர்த்துக் கொண்டதற்காக ஃபுட்சால் அணிக்கு பாராட்டு தெரிவித்துள்ள ரொனால்டோ, "ஃபுட்சால் எப்போதும் எனது முதல் காதலாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.[12][13][14] சோசியல் ராமோஸைச் சேர்ந்த இவரது பயிற்சியாளர் அலிரியோ கார்வால்ஹோ: "ரொனால்டோவின் அனுகுமுறைதான் அவரது சிறப்பாகும். அவர் சந்திரனில் இருந்து வந்தவர் போல் இருந்தது. எந்தக் காரணிகளும் கால்பந்து விளையாடுவதில் இருந்து அவரைத் தொந்தரவு செய்யவில்லை, எதுவும் அவரை பயமுறுத்தவில்லை, எதுவும் அவரை அவரது விளையாட்டிலிருந்து வெளியேற்றவில்லை" எனக் கூறினார்.[15]

கால்பந்துக் கழகங்களில்

[தொகு]

குருசீரோ

[தொகு]

ரொனால்டோ பெரிய கால்பந்துச் சங்கங்களின் கவனத்தை விரைவாக ஈர்த்தார். இவரது முகவர்கள் போடாஃபோகோ மற்றும் சாவோ பாலோவின் சலுகைகளை நிராகரித்தனர்.[16] ஒரு மணி நேரப் பேருந்துப் பயணத்திற்கான கட்டணத்தைச் செலுத்த முடியாமல் பயிற்சியைத் தவறவிட்டதால், இவர் சிறுவனாக இருந்தபோது ஆதரித்த ஃபிளமெங்கோ அணியால் நிராகரிக்கப்பட்டார்.[11][17] ரொனால்டோவின் திறனைக் கண்டு ஜெயிர்சினோ அவரை குரூசீரோவுக்குச் செல்ல உதவினார்.[11] ரொனால்டோவின் முகவர்கள் சங்கத்திலிருந்து €50,000 சலுகையை ஏற்றுக்கொண்டனர். இளையோர் அணிக்கான அறிமுகப் போட்டியில் நான்கு இலக்குகளை அடித்தார்.[15]

பார்சிலோனா

[தொகு]
1997 ஆம் ஆண்டு UEFA கோப்பை வெற்றியாளர் கோப்பை இறுதிப் போட்டியில் பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைனுக்கு எதிராக பார்சிலோனாவுக்காக ரொனால்டோ பெனால்டு முறையில் இலக்கினை அடித்தார்.

பிஎஸ்வி-யில் விளையாடிய காலத்தில் ரொனால்டோ இன்டர் மிலான், பார்சிலோனா ஆகிய கழகங்களின் கவனத்தையும் ஈர்த்தார். இவரை அணியில் சேர்க்க அப்போதைய உலகச் சாதனைத் தொகையான $19.5 மில்லியனை செலுத்தத் தயாராக இருந்தது பார்சிலோனா. சூலை 17, 1996 இல் இவர் பார்சிலோனாக் கழகத்தில் சேர்ந்தார்.[18] மேலாளர் பாபி ராப்சனின் கூற்றுப்படி, "இவர் எட்டு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார், மேலும் முன்கள வீரராக விளையாடுவார்".[19]

சொந்த வாழ்க்கை

[தொகு]
2005 ஆம் ஆண்டு பிரேசிலியக் கல்வி அமைச்சகத்தில் நடந்த சந்திப்பின் போது ரொனால்டோ.

1997 ஆம் ஆண்டில், ரொனால்டோ பிரேசிலிய வடிவழகியும் நடிகையுமான சுசானா வெர்னரை பிரேசிலிய டெலினோவெலா மல்ஹாசாவோவின் தொகுப்பில் சந்தித்தார்.[20][21] அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும், 1999 ஆம் ஆண்டின் ஆரம்பம் வரை மிலனில் ஒன்றாக வாழ்ந்தனர்.[22]

திசம்பர் 1999 இல், ரொனால்டோ பிரேசிலியக் கால்பந்து வீரர் மிலீன் டொமிங்குசை மணந்தார். இவர்களின் முதல் மகன் ரொனால்டு ஏப்ரல் 6, 2000 இல் மிலனில் பிறந்தார்.[23] இவர்களது திருமண வாழ்க்கை நான்கு ஆண்டுகள் நீடித்தது. 2005 ஆம் ஆண்டில், ரொனால்டோ பிரேசிலிய வடிவழகி, எம்டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் டேனியலா சிகரெல்லியுடன் மணப் பொருத்தம் செய்து கொண்டார். இவர்களின் ஆடம்பரமான திருமணத்திற்குப் பிறகு மூன்று மாதங்கள் மட்டுமே இந்த உறவு நீடித்தது. இந்த விழாவிற்கு £700,000 (€896,000) செலவானதாக கூறப்படுகிறது.[24]

வெகுமதிகளும் விருதுகள்

[தொகு]

க்ருசெய்ரோ

[தொகு]
  • பிரேசில் கோப்பை: 1993

PSV எய்ந்தோவன்

[தொகு]
  • டச்சுக் கோப்பை: 1996

பார்சிலோனா

[தொகு]
  • கோப்பா டெல் ரே: 1997
  • UEFA கோப்பை வின்னர்ஸ் கோப்பை: 1
  • சூப்பர்கோப்பா டே எஸ்பானா: 2003

இண்டர்நேசனல்

[தொகு]
  • UEFA கோப்பை: 1998
  • தொடர் A: 1998, 2002 ரன்னர்-அப்
  • கோப்பா இட்டாலியா: 2000 ரன்னர்-அப்

ரியல் மேட்ரிட்

[தொகு]
  • லா லிகா: 2003
  • இண்டர்காண்டினெண்டல் கோப்பை: 1
  • சூப்பர்கோப்பா டே எஸ்பானா: 2003

கொரிந்தியன்ஸ்

[தொகு]
  • கேம்பியோனடோ பாலிஸ்டா: 2009
  • பிரேசில் கோப்பை: 2009

தேசிய அணி

[தொகு]
  • FIFA உலகக் கோப்பை: 1994, 2002
  • கோப்பா அமெரிக்கா: 1997, 1999
  • FIFA கான்ஃபெடரேசன்ஸ் கோப்பை: 1997
  • 1996 கோடைகால ஒலிம்பிக்ஸ்: வெண்கலப் பதக்கம்

தனிப்பட்டது

[தொகு]
  • சூப்பர்கோப்பா லிபர்டடோர்ஸ் அதிக இலக்குகள் அடித்தவர்: 1993-94
  • கேம்பியோனடோ மினெய்ரோ அதிக இலக்குகள் அடித்தவர்: 1993-94
  • ஆண்டின் சிறந்த கேம்பியோனடோ மினெய்ரோ அணி: 1994
  • எரெடிவிஸ்ஸி டாப் ஸ்கோரர்: 1994-95
  • லா லிகா டாப் ஸ்கோரர்: 1996-97
  • ஐரோப்பியத் தங்கக் காலணி: 1996-97
  • லா லிகாவின் ஆண்டின் சிறந்த வெளிநாட்டு வீரரருக்கான டோன் பலூன் விருது: 1996-97
  • கோப்பா அமெரிக்கா மிகவும் மதிப்புமிக்க வீரர்: 1997
  • கோப்பா அமெரிக்கா மிகவும் மதிப்புமிக்க வீரர்: 1997
  • கான்பெடரேசன் கோப்பை நட்சத்திர அணி: 1997
  • கோப்பை வென்றவர்களில் மதிப்புமிக்க வீரர்: 1997
  • கோப்பை வென்றவர்கள் கோப்பை அதிக இலக்குகள் அடித்தவர்: 1996-1997
  • IFFHS வேர்ல்டின் ஆண்டின் சிறந்த இலக்குகள் அடித்தவர்: 1997
  • UEFA மிகவும் பதிப்புமிக்க வீரர்: 1997-98
  • ஆண்டின் சிறந்த தொடர் A வீரர்: 1997-98
  • ஆண்டின் சிறந்த தொடர் A வெளிநாட்டு வீரர்: 1997-98
  • UEFA சிறந்த முன்னணி: 1997-98
  • பிரேவோ விருது: 1995, 1997, 1998
  • FIFA உலகக் கோப்பை தங்கப் பந்து: 1998
  • UEFA கோப்பையின் இறுதியில் மிகுந்த மதிப்புமிக்க வீரர்: 1998
  • கோப்பா அமெரிக்கா அதிக இலக்குகள் அடித்தவர்: 1999
  • கோப்பா அமெரிக்கா அனைத்து நட்சத்திர அணி: 1997, 1999
  • FIFA ஆண்டிற்கான உலகின் சிறந்த வீரர்: 1996, 1997, 2002
  • பலூன் டி' ஓர்: 1997, 2002
  • ஓன்சே டி' ஓர்: 1997, 2002
  • உலகக் கோப்பை வெள்ளிப் பந்து: 2002
  • FIFA 100
  • FIFA உலகக் கோப்பை அனைத்து நட்சத்திர அணி: 1998, 2002
  • FIFA உலகக் கோப்பை இறுதியில் மிகவும் மதிப்புமிக்க வீரர்: 2002
  • FIFA உலகக் கோப்பை அதிக இலக்குகள் அடித்தவர்: 2002
  • இண்டர்காண்டினன்சியல் கோப்பையில் மிகுந்த மதிப்புமிக்க வீரர்: 2002
  • UEFA ஆண்டின் சிறந்த அணி: 2002
  • லாரியஸ் ஆண்டின் சிறந்த மீள்வருகை புரிந்தவர்: 2002
  • ஸ்ட்ரோகால்டோ டெ லெஜண்ட்ரி விருது 2002
  • BBC ஆண்டின் சிறந்த விளையாட்டுப் பிரபலமான வெளிநாட்டுப் பிரபலம்: 2002
  • லா லிகா ஆண்டின் சிறந்த தென்அமெரிக்க வீரர்: 1996-97, 2002-03
  • லா லிகா அதிக இலக்குகள் அடித்தவர்: 2003-04
  • தங்கக் காலணி: 2006
  • பிரேசிலியன் நேசனல் ஹால் ஆஃப் ஃபேம் இண்டுகேட்டேட்: கிளாஸ் ஆஃப் 2006
  • தொடர் A இல் பத்தாண்டுகளில் சிறந்த வீரர்: 1997-2007
  • பிரான்சு கால்பந்து பத்திரிகை: ஸ்டார்ட்டிங் இன் 11 ஆஃப் ஆல் டைம்: 2007
  • FIFA உலகக் கோப்பை ஆல்-டைம் ஸ்கோரிங் லீடர்
  • கேம்பயனேட்டோ பாலிஸ்டா சிறந்த வீரர்: 2009

மேற்கோள்கள்

[தொகு]
  1. "2006 FIFA World Cup Germany: List of Players: Brazil" (PDF). FIFA. 21 March 2014. p. 4. Archived from the original (PDF) on 10 June 2019.
  2. According to Ronaldo: The Journey of a Genius (2005) by James Mosley, Ronaldo was born on 18 September, but was registered on 22 September
  3. "Ronaldo Nazário, o fenômeno". Trip (in பிரேசிலிய போர்ச்சுகீஸ்). Archived from the original on 5 December 2022. Retrieved 25 September 2023.
  4. "Ronaldo". A.C. Milan. Archived from the original on 27 April 2007.
  5. "Após início pobre em Bento Ribeiro, Ronaldo conquista o mundo" (in pt). Globo Esporte. 14 February 2011 இம் மூலத்தில் இருந்து 25 December 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225133206/http://globoesporte.globo.com/futebol/noticia/2011/02/apos-inicio-pobre-em-bento-ribeiro-ronaldo-conquista-o-mundo.html. 
  6. "Ronaldo's return to glory". BBC Sport. 8 December 2002 இம் மூலத்தில் இருந்து 13 March 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090313233448/http://news.bbc.co.uk/sport1/hi/special_events/sports_personality_2002/2556663.stm. 
  7. Mosley, James (2005). Ronaldo: The Journey of a Genius. Mainstream Publishing. ISBN 1-84018-964-9.
  8. 8.0 8.1 Mosley, James (2005). Ronaldo: The Journey of a Genius. Mainstream Publishing. ISBN 1-84018-964-9.
  9. Ronaldo: Manual de Vuelo (Brazil Documentary film) 1997
  10. 10.0 10.1 Shepard, Michael T. (4 June 1998). "Brazil's Ronaldo Has the World at His Feet". The Washington Post இம் மூலத்தில் இருந்து 19 November 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151119024924/http://www.washingtonpost.com/wp-srv/sports/soccer/longterm/worldcup98/teams/articles/ronaldo4.htm. 
  11. 11.0 11.1 11.2 . 
  12. "The football greats forged by futsal". FIFA இம் மூலத்தில் இருந்து 8 October 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151008000840/http://www.fifa.com/futsalworldcup/news/y=2012/m=10/news=the-football-greats-forged-futsal-1798909.html. 
  13. Baker, Stan (2012). Our Competition is the World. Lulu. p. 276.
  14. Futsalfeed.com (14 March 2020).
  15. 15.0 15.1 Law, Joshua (10 June 2021). "The making of O Fenomeno in Brazil: 'It was as if he had come from the moon'". Planet Football. Archived from the original on 19 June 2021. Retrieved 19 June 2021.
  16. Law, Joshua (22 September 2023). "Ronaldo Fenomeno's rise in Brazil: 'It was as if he'd come from the moon'". Planet Football (in ஆங்கிலம்). Retrieved 9 July 2024.
  17. "The Global Art of Soccer" (2006).
  18. Adams, Tom (14 April 2011). "Ronaldo's record-breaking season". ESPN. Archived from the original on 24 June 2021. Retrieved 19 June 2021.
  19. Moore, Glenn (27 September 1996). "The man with the world at his feet". the Independent. Archived from the original on 24 June 2021. Retrieved 19 June 2021.
  20. "Ronaldo's profile at IMDB" இம் மூலத்தில் இருந்து 12 March 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090312031839/http://www.imdb.com/name/nm1046596/. 
  21. "Susana Werner's profile at IMDB" இம் மூலத்தில் இருந்து 4 December 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091204031337/http://www.imdb.com/name/nm0921482/. 
  22. "Susana Werner, love in Milan". 29 January 2009 இம் மூலத்தில் இருந்து 4 March 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090304002515/http://lancenet.com.br/noticias/09-01-29/477266.stm?susana-werner-amor-em-milao. 
  23. "Fast facts on Ronaldo". 31 August 2002 இம் மூலத்தில் இருந்து 21 December 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101221041309/http://sportsillustrated.cnn.com/soccer/news/2002/08/31/ronaldo_facts_reuters/. 
  24. "Ronaldo splits up with fiancée". China Daily. 12 May 2005 இம் மூலத்தில் இருந்து 24 October 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121024075135/http://www.chinadaily.com.cn/english/doc/2005-05/12/content_441435.htm. 

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரொனால்டோ&oldid=4520309" இலிருந்து மீள்விக்கப்பட்டது