பிலிப்பி கோட்டின்யோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிலிப்பி கோட்டின்யோ
Philippe Coutinho

2018 இல் கோட்டின்யோ
சுய தகவல்கள்
முழுப் பெயர்பிலிப்பி கோட்டின்யோ கொரெயா[1]
பிறந்த நாள்12 சூன் 1992 (1992-06-12) (அகவை 31)[2]
பிறந்த இடம்இரியோ டி செனீரோ, பிரேசில்
உயரம்1.72 மீ[3]
ஆடும் நிலை(கள்)தாக்கும் நடுக்கள வீரர்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
பார்சிலோனா
எண்14
இளநிலை வாழ்வழி
1999–2008வாஸ்கோ ட காமா
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2008–2013இன்டர் மிலான்28(3)
2008–2010→ வாஸ்கோ ட காமா (கடன்)19(1)
2012→ எசுப்பானியோல் (கடன்)16(5)
2013–2018லிவர்பூல்152(41)
2018–பார்சிலோனா18(8)
பன்னாட்டு வாழ்வழி
2009பிரேசில் கீ175(3)
2011–2012பிரேசில் கீ207(3)
2010–பிரேசில்38(12)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 08:39, 20 மே 2018 (ஒசநே) அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 22 சூன் 2018 அன்று சேகரிக்கப்பட்டது.

பிலிப்பி கோட்டின்யோ கொரெயா (Philippe Coutinho Correia, பிரேசிலிய போர்த்துக்கீசம்: [fiˈlipi kowˈtʃĩɲu]; பிறப்பு: 12 சூன் 1992) பிரேசில் காற்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் பிரேசில் தேசிய அணியிலும்]], பார்சிலோனா கழகத்திலும் நடுக்களத் தாக்கும் வீரராக விளையாடி வருகிறார்.

இரியோ டி செனீரோ நகரில் பிறந்து வளர்ந்த கோட்டின்யோ, கிறித்தவரான கோட்டின்யோ 2012 ஆம் ஆண்டில் ஐன் என்பவரைத் திருமணம் புரிந்தார்.[4][5] வாஸ்கோ ட காமா இளைஞர் அணியில் விளையாட ஆரம்பித்தார். 2008 இல் இத்தாலியின் இன்டர் மிலான் கழகத்தில் €4 மில்லியன் ஊதியத்தில் சேர்க்கப்பட்டார். 2013 சனவரியில், ஆங்கிலேய பிரீமியர் அணியின் லிவர்பூல் கழகத்தில் £8.5 மிலியன் ஊதியத்தில் சேர்க்கப்பட்டார்.[6] பிரேசிலின் புகழ்பெற்ற கால்பந்து வீரர் பெலே கோட்டின்யோவிற்கு "பெரும் எதிர்காலம்" காத்திருக்கிறது என 2015 ஆம் ஆண்டில் கூறியுள்ளார்.[7][8] 2018 சனவரியில், கோட்டின்யோ €142 மில்லியனுக்கு ($170 மில்லியன்) பார்சொலோனாவுக்காக விளையாட ஏற்றுக் கொள்ளப்பட்டார். இது உலகின் காற்பந்தாட்ட வீரர்களுக்கான மூன்றாவது பெரிய கொடுப்பனவு ஆகும்.[9]

கோட்டின்யோ 2010 இல் பன்னாட்டுப் போட்டிகளில் பிரேசில் அணீக்காக விளையாட ஆரம்பித்தார். இவர் 2015 அமெரிக்கக் கோப்பை, 2016 கோப்பா அமெரிக்கா நூறாண்டுகள் போட்டி, 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளில் விளையாடினார்.

பன்னாட்டுப் பங்களிப்பு[தொகு]

2015 இல் சிலியின் அலெக்சிசு சான்சேசுவுடன் பிரேசில் அணிக்காக விளையாடும் கோட்டின்யோ (நடுவில்)

பிரேசிலின் 14 வயதுக்குக் கீழானோரின் அணியில் விளையாட ஆரம்பித்த கோட்டின்யோ, 2009 ஆம் ஆண்டில் 17-வயதுக்குட்பட்டோருக்கான தென்னமெரிக்க கால்பந்து வாகையாளர் போட்டியில் விளையாடி மூன்று கோல்கள் எடுத்து பிரேசிலுக்கு வெற்றி தேடித் தந்தார்.[4]

22 சூன் 2018. அன்று இருந்த தகவல்களின் படி[10]
தேசிய அணி ஆண்டு தோற்றங்கள் கோல்கள்
பிரேசில் 2010 2 0
2014 4 0
2015 7 1
2016 10 5
2017 9 2
2018 6 4
மொத்தம் 38 12

மேற்கோள்கள்[தொகு]

  1. "Premier League Clubs submit Squad Lists" (PDF). Premier League. 3 September 2014. p. 20 இம் மூலத்தில் இருந்து 22 October 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141022192726/http://www.premierleague.com/content/dam/premierleague/site-content/News/publications/squad-lists/Premier-League-squad-lists-September-2014.pdf. 
  2. "2018 FIFA World Cup Russia: List of players: Brazil" (PDF). FIFA. 10 June 2018. p. 4 இம் மூலத்தில் இருந்து 19 ஜூன் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180619164139/https://tournament.fifadata.com/documents/FWC/2018/pdf/FWC_2018_SQUADLISTS.PDF. பார்த்த நாள்: 11 June 2018. 
  3. "Philippe Coutinho". https://www.fcbarcelona.com/football/first-team/staff/players/2017-2018/philippe-coutinho. பார்த்த நாள்: 23 January 2018. 
  4. 4.0 4.1 Reddy, Melissa (10 August 2015). "Philippe Coutinho: The secret life of 'O Mágico'". CNN. http://edition.cnn.com/2015/05/11/football/philippe-coutinho-liverpool. பார்த்த நாள்: 25 August 2015. 
  5. Burt, Jason (14 December 2013). "Tottenham Hotspur v Liverpool: Brazilian midfielder Philippe Coutinho inspired by hero Ronaldinho". The Daily Telegraph. https://www.telegraph.co.uk/sport/football/teams/liverpool/10518080/Tottenham-Hotspur-v-Liverpool-Brazilian-midfielder-Philippe-Coutinho-inspired-by-hero-Ronaldinho.html. பார்த்த நாள்: 16 August 2016. 
  6. Carroll, James (30 April 2014). "Video: Get to know Philippe Coutinho". Liverpool F.C.. http://www.liverpoolfc.com/news/first-team/162186-video-get-to-know-philippe-coutinho. பார்த்த நாள்: 26 August 2015. 
  7. "Chelsea's Eden Hazard named PFA Player of the Year". BBC Sport. 26 April 2015. https://www.bbc.co.uk/sport/football/32472834. பார்த்த நாள்: 7 May 2018. 
  8. "Pele on Philippe Coutinho and England's El Clásico". SB Nation. 20 March 2015. http://liverpooloffside.sbnation.com/2015/3/20/8267363/pele-subway-liverpool-manchester-united-coutinho-future. பார்த்த நாள்: 26 August 2015. 
  9. "Coutinho leaves Liverpool, joins Barcelona on third-most expensive deal". Fox. 18 June 2018. https://fox43.com/2018/01/08/coutinho-leaves-liverpool-joins-barcelona-on-third-most-expensive-deal/. 
  10. "Coutinho, Philippe". National Football Teams. http://www.national-football-teams.com/player/40207/Philippe_Coutinho.html. பார்த்த நாள்: 20 August 2015. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலிப்பி_கோட்டின்யோ&oldid=3563727" இருந்து மீள்விக்கப்பட்டது