உள்ளடக்கத்துக்குச் செல்

போதி தருமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போதிதருமன்
Bodhidharma, Ukiyo-e woodblock print by Tsukioka Yoshitoshi, 1887.
பதவிCh'an-shih
1st Ch'an Patriarch
சுய தரவுகள்
சமயம்பௌத்தம்
பாடசாலைCh'an
பதவிகள்
பின் வந்தவர்Huike
மாணவர்கள்
  • Huike

போதி தருமன் என்பவர் 5ம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு பௌத்த மத துறவி ஆவார்.

இவரின் வாழ்க்கையைப் பற்றிக் குறைவான சமகாலத்திய தகவல்களே கிடைக்கின்றன. பிற்காலத்திய குறிப்புகளும் கதைகளுடன் கலந்து தெளிவற்ற நிலைகளில் உள்ளன. இவர் தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பல்லவ அரசாங்கத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்த போதி தர்மன் பல்லவ இளவரசனாக இருந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவதாகக் கருதப்படுகிறது.[1][2][3][4][5] அவர் பாரசீகத்தைச் சேர்ந்தவர் என்று கூறும் வரலாற்றுக் குறிப்புகளும் உள்ளன.[6][7][8] புத்த மத குருவாக மாறிய பிறகு சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி தர்மர் அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும் 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது. சென் புத்தமதத்தை சீனாவிற்கு கொண்டு சென்ற புகழ் இவரையே சாரும். போதி தருமன் சீனாவில் ஷாலின் குங்ஃபூ என்னும் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் எனக் கருதப்படுகிறார்.[9][10]

போதி தருமரின் சமகாலத்தவர் கூற்றுக்கள்

போதி தருமர் பற்றி அவரது சமகாலத்தவர்களால் எழுதப்பட்ட கூற்றுக்கள் இரண்டு காணக் கிடைக்கின்றன.

யாங் சுவான்சீ

17 ஆம் நூற்றாண்டிற் சீனாவில் அரசு செலுத்திய மிங் அரச மரபினரால் அமைக்கப்பட்ட போதி தருமரின் வெண்களிச் சிலை

லுவோயங் (洛陽伽藍記 Luòyáng Qiélánjì) பகுதியில் அமைந்துள்ள பௌத்த மடாலயங்களின் குறிப்புக்கள் கிபி 547 ஆம் ஆண்டில் மகாயான பௌத்த ஆக்கங்களைச் சீனமொழிக்கு மொழிபெயர்த்த யுவான் சுவாங் என்பவரால் எழுதப்பட்டவையாகும்.

அக்காலத்தில் மேற்குப் பகுதியில் நடு ஆசியாவிலிருந்து வந்த பாரசீகரான போதி தருமா என அறியப்பட்ட ஒரு துறவி இருந்தார். அவர் காட்டு எல்லையினூடாகச் சீனாவை அடைந்தார். கதிரொளியிற் பளிச்சிடும் [யோங்னிங்சி தூபியின்] தங்கத் தட்டுக்களைப் பார்த்தும், அதனூடு செல்லும் ஒளி மேகத்தில் கலப்பது போன்றிருப்பதைக் கண்டும், காற்றில் அசைந்தாடும் மாணிக்கம் பதித்த மணியின் ஓசை வானத்தை அடைவது போன்று இருப்பதைக் கண்டும் அவர் அதன் புகழ் பாடினார். அவர் இப்படி விளித்தார்: "மெய்யாகவே இது ஆவிகளின் வேலை". அவர் மேலும் கூறினார்: "நான் 150 ஆண்டு அகவையினன். நான் எத்தனையோ நாடுகளைக் கடந்து வந்துள்ளேன். கிட்டத்தட்ட நான் போகாத நாடே இல்லை எனக் கூறலாம். தொலை தூரத்திலிருக்கும் இது போன்ற பௌத்த நாடாயினும் சரியே." அவர் அதனைப் புகழ்ந்தேற்றியதுடன் தன் கரங்களைக் கூப்பி நாட்கணக்காக வைத்திருந்தார்.[6]

இங்கு குறிப்பிடப்படும் ஆலயமான யோங்னிங்சியில் (永寧寺) உள்ள ஆலயம் அதன் புகழ் ஓங்கி இருந்த காலத்திலேயே லுவோயங்ஙில் போதி தருமரின் வரவு பற்றி புரௌட்டன் ((Broughton 1999, ப. 55)) கிபி 516 இற்கும் 526 இடைப்பட்ட காலத்தினதாகக் குறிப்பிடுகிறார். 526 ஆம் ஆண்டு முதல் யோங்னிங்சி தொடர்ச்சியாக இடம்பெற்ற கடுமையான நிகழ்வுகளாற் தாக்கப்பட்டு அழிவுறத் தொடங்கி, 534 ஆம் ஆண்டு மொத்தமாக அழிந்து விட்டது.[11]

தான்லின்

இரண்டாவது குறிப்பு தான்லின் (曇林; 506–574) என்பவரால் எழுதப்பட்டது. தான்லின் எழுதிய "தரும போதகரின்" சுருக்கமான வாழ்க்கை வரலாறு, போதி தருமரே எழுதியதாகப் பொதுவாகக் கருதப்படும் இரு வாயில்களும் நான்கு செயல்களும் என்பதற்கு அவர் எழுதிய முன்னுரையில் போதி தருமா ஒரு தென்னிந்தியர் எனக் குறிப்பிடுகிறார்:

தரும போதகர் தென்னிந்தியாவின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த ஒருவராவார். அவர் இந்தியாவின் சிறந்த அரசரொருவரின் மூன்றாம் மகன். மகாயான வழியிலேயே அவரது குறிக்கோள் இருந்தது. அதனால் அவர் தனது வெண் துகிலை நீக்கிவிட்டு, துறவிகள் அணியும் கருந்துகிலுக்கு மாறினார் […] வேற்று நாடுகளில் மெய்யான போதனை இல்லாமலாவதைக் கண்டு வருந்திய அவர் நெடுந் தொலைவிலுள்ள மலைகளையும் கடல்களையும் கடந்து ஹான் மற்றும் வை ஆகிய இடங்களிற் போதிப்பதை நோக்கமாகக் கொண்டு பயணித்தார்.[12]

போதி தருமர் சீடர்களைக் கொண்டிருந்தார் என்னும் தான்லினின் கூற்று,[13] குறிப்பாக அவர் டாஒயூ (道育) மற்றும் ஹூயிக்கே (慧可) என்போரைச் சீடராகக் கொண்டிருந்தார் என்னும் கூற்று இங்கு குறிப்பிடத் தக்கது. மேற்படி இருவருள் பின்னவரான ஹூயிக்கே என்பவர் போதி தருமர் பற்றிய இலக்கிய ஆக்கங்களைப் பின்னர் இயற்றியவராவார். தான்லின் போதி தருமரின் சீடரொருவரென்றே பொதுவாகக் கருதப்படுகிறது. எனினும் அவர் போதி தருமரின் சீடரான ஹூயிக்கேவின் சீடராக இருந்திருப்பதற்கான சாத்தியமே கூடுதலாக உள்ளது.[14]

குங்ஃபூவும் போதி தருமனும்

போதி தருமன் பல்லவ அரச குலத்தவர் என நிறுவுவோர் பின் வரும் சான்றுகளை முன் வைக்கின்றனர்.

  • கல்வெட்டு சான்று
    சீனக்கோயிலில் (shoalin temple – kungfu school) உள்ள கல்வெட்டு ஒன்று போதிதருமன் பற்றி கூறுகிறது. வார்ப்புரு:Cn span
  • டான்லின் பதிவுகள் (Tánlín)
  1. டான்லின் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் அரசரின் மகன் என்கிறது.
  • டௌசுவான் பதிவுகள் Dàoxuān
    டௌசுவான் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவன் என்கிறது.(南天竺婆羅門種 nán tiānzhú póluómén zhŏng).
  • பௌத்த காஞ்சி கோயில்
    தற்போதும் பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்றுள்ளது.தற்போது பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்பதை சீன சப்பானிய தற்காப்புக்கலை ஆசிரியர்கள் பார்த்துச்செல்கின்றனர்.
  • ஆராய்ச்சியாளர்கள் கூறுவது
    மகாசன்[15], சுவலபில்[16]. போன்ற ஆய்வாளர் போதிதர்மாவை காஞ்சியை தலைநகராகக்கொண்ட தமிழ்ப்பல்லவ பேரரசின் இளவரசர் என்கிறனர்.
  • யொங்சியா பாட்டு yǒngjiā Xuánjué
    யொங்சியா என்னும் பாட்டு 28 குருமார் வரிசையைக் கூறுகிறது. (சாக்கிய முனி முதல் போதிதர்மா வரை)[17]
  • ப்ராஃடன் யாங் சுவான்சீ பதிவை மறுப்பது.
    அக்காலப் பாரசீகத்தை பஹலவர் என்ற அரச மரபினர் ஆண்டனர். அந்த பஹலவர் பெயரும் பல்லவர் பெயரும் ஒற்றுமையாய் உள்ளதாலே யாங் சுவாங்சீ பதிவுகளை எழுதியவர்[18] பல்லவரான போதிதருமரை பஹலவர் என மயங்கி பாரசீகத்தைச் சேர்ந்தவர் என எண்ணியிருக்கக் கூடும்.[19] இதற்கு வழுசேர்க்கும் விதமாக போதி தர்மாவின் சீடரெனக் கருதப்படும் தான்லின் போதிதருமரை தென்னிந்தியர் எனக்கூறியதையும் கொண்டு பிராட்டன் என்னும் ஆய்வாளர் போதிதர்மா பாரசீகத்தவர் எனக் கூறப்பட்டதை மறுக்கிறார்.[20][21]
  • போதிதர்மா (பௌத்தவர்மப் பல்லவன்) கந்தவர்மன் II -னின் மூன்றாம் மகனென அறியப்படுகிறது. அக்கால பல்லவ மரபினர் கடைமகனை புத்தமட தானம் அளித்துவிடுவர்[22].

கந்தவர்மன் II -னின் மூன்று மகன்களென அறியப்படுவோர்

  1. முதலாம் சிம்மவர்மன்
  2. இரண்டாம் விட்ணுகோபன்
  3. இரண்டாம் குமாரவிட்ணு
  • கால ஒற்றுமை
  1. போதிதர்மாவின் காலமென பதிவுகள் கூறுவது (கி.பி.475-550)
  2. விஷ்ணுகோபனின் காலத்திலிருந்து (கி.பி. 340) கந்தவர்மன் IV-ன் காலமாக அறியப்படுவது (கி.பி.450-500).
  3. 28 குருமார் வரிசையின் காலமாக கருதப்படுவது (சாக்கியமுனி முதல் (கி.மு.563) போதிதர்மா வரை (கி.பி.550). மேற்கூரிய காலங்கள் அனைத்தும் கூடி வருவது கால ஒற்றுமை.

ஊடகங்களில்

தமிழில் ஏழாம் அறிவு என்னும் திரைப்படத்தில் சூர்யா போதிதருமனாக இருந்தது போல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சீன மொழித் திரைப்படம் ஒன்றும் போதிதர்மன் வரலாறு தொடர்பாக வெளிவந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. From Zen to Zen: from China to Cyberspace By frank ra
  2. Some aspects of Asian history and culture By Upendra Thakur
  3. (Broughton 1999, ப. 2)
  4. Encyclopaedia of Tamil Literature: Introductory articles
  5. Very little contemporary biographical information on Bodhidharma is available, and subsequent accounts became layered with legend, but most accounts agree that he was South Indian Tamilian and was a Pallava prince from the kingdom of Kanchipuram, the third son of King Sugandha. Bodhidharma left the kingdom after becoming a Buddhist monk and travelled to Southern China. Nietzsche and Zen: Self-Overcoming Without a Self – André van der Braak
  6. 6.0 6.1 (Broughton 1999, ப. 54–55)
  7. Japanese Buddhism, Sir Charles Eliot
  8. In the course of the twentieth century, Bodhidharma has been the subject of intense scholarly research. Chinese, Japanese, and Western scholars usually accept the historicity of this Indian (or, according to another version, Persian) missionary The Shaolin monastery: history, religion, and the Chinese martial arts, Meir Shahar
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-07-07. பார்க்கப்பட்ட நாள் 2011-07-26.
  10. http://www.shaolincom.com/Shaolin_Chi_Mantis/Bodhidharma-S.html
  11. (Broughton 1999, ப. 138)
  12. (Broughton 1999, ப. 8)
  13. (Broughton 1999, ப. 9)
  14. (Broughton 1999, ப. 53)
  15. Mahajan, Vidya Dhar (1972), Ancient India, S. Chand & Co. இணையக் கணினி நூலக மையம் 474621
  16. Zvelebil, Kamil V. (1987), "The Sound of the One Hand", Journal of the American Oriental Society, Journal of the American Oriental Society, Vol. 107, No. 1, 107 (1): 125–126, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/602960, JSTOR 602960
  17. 28 குருமார் வரிசை
    Śākyamuni Buddha
    1.Mahākāśyapa Móhējiāyè 摩訶迦葉
    2.Ānanda Ānántuó 阿難陀
    3.Śāṇavāsa Shāngnàhéxiū 商那和修
    4.Upagupta Yōupójúduō 優婆掬多
    5.Dhṛṭaka Dīduōjiā 提多迦
    6.Miccaka Mízhējiā 彌遮迦
    7.Vasumitra Póxūmì 婆須密
    8.Buddhānandi Fútuónándī 浮陀難提
    9.Buddhamitra Fútuómìduō 浮陀密多
    10.Pārśva Pólìshīpó 婆栗濕婆
    11.Puṇyayaśas Fùnàyèshē 富那夜奢
    12.Ānabodhi / Aśvaghoṣa Ānàpútí 阿那菩提
    13.Kapimala Jiāpímóluó 迦毘摩羅
    14.Nāgārjuna Lóngshù 龍樹
    15.Kāṇadeva Jiānàtípó 迦那提婆
    16.Rāhulata Luóhóuluóduō 羅睺羅多
    17.Saṅghānandi Sēngqiénántí 僧伽難提
    18.Saṅghayaśas Sēngqiéshèduō 僧伽舍多
    19.Kumārata Jiūmóluóduō 鳩摩羅多
    20.Śayata Shéyèduō 闍夜多
    21.Vasubandhu Shìqīn 世親
    22.Manorhita Mónáluó 摩拏羅
    23.Haklenayaśas Hèlèyènàyèzhě 鶴勒夜那夜者
    24.Siṃhabodhi Shīzǐpútí 師子菩提
    25.Vasi-Asita Póshèsīduō 婆舍斯多
    26.Puṇyamitra Bùrúmìduō 不如密多
    27.Prajñātāra Bānruòduōluó 般若多羅
    28.Bodhidharma Pútídámó 菩提達磨
    இந்த தகவல்கள் பின்வரும் புத்தகத்தில் இருந்து எடுத்தது.
    Diener, Michael S. and friends.THE SHAMBHALA DICTIONARY OF BUDDHISM AND ZEN. 1991. Boston: Shambhala.page 266
  18. Yáng Xuànzhī (波斯國胡人 bō-sī guó hú rén)
  19. Broughton, 1999, p. 54, p.138
  20. Broughton, 1999, p. 8
  21. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-11-01. பார்க்கப்பட்ட நாள் 2011-11-03.
  22. பண்டைத்தடயம், மணிவாசகர் பதிப்பகம், நடன காசிநாதன், மா.சந்திரமூர்த்தி.டிசம்பர் 2005.

உசாத்துணை

"https://ta.wikipedia.org/w/index.php?title=போதி_தருமன்&oldid=3565781" இலிருந்து மீள்விக்கப்பட்டது