உள்ளடக்கத்துக்குச் செல்

பெரிலியம் நைட்ரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிலியம் நைட்ரேட்டு
பெயர்கள்
முறையான ஐயூபிஏசி பெயர்
பெரிலியம் நைட்ரேட்டு
Beryllium nitrate
வேறு பெயர்கள்
பெரிலியம் இருநைட்ரேட்டு
இனங்காட்டிகள்
13597-99-4 Y
7787-55-5 (trihydrate)
ChemSpider 24337 Y
EC number 237-062-5
InChI
  • InChI=1S/Be.2NO3/c;2*2-1(3)4/q+2;2*-1 Y
    Key: RFVVBBUVWAIIBT-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 26126
  • [Be+2].[O-][N+]([O-])=O.[O-][N+]([O-])=O
UN number 2464
பண்புகள்
Be(NO3)2
வாய்ப்பாட்டு எடை 133.021982 கி/மோல்
தோற்றம் வெண்மையும் மஞ்சளும் கலந்த நிறம்
மணம் மணமற்றது
அடர்த்தி 1.56 கி/செ.மீ3
உருகுநிலை 60.5 °C (140.9 °F; 333.6 K)
கொதிநிலை 142 °C (288 °F; 415 K) (சிதைவடையும்)
166 கி/100 மி.லி
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-700.4 கி.யூ/மோல்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் மக்னீசியம் நைட்ரேட்டு
கால்சியம் நைட்ரேட்டு
இசுட்ரோன்சியம் நைட்ரேட்டு
பேரியம் நைட்ரேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

பெரிலியம் நைட்ரேட்டு (Beryllium nitrate) என்பது Be(NO3)2 என்ற மூலக்கூறு வாய்ப்பாடுடன் [1] கூடிய நைட்ரிக் அமிலத்தினுடைய அயனிச்சேர்மம் ஆகும். வாய்ப்பாட்டின் ஒவ்வொரு அலகும் Be2+ நேர்மின் அயனிகள் மற்றும் NO3− எதிர்மின் அயனிகள் என்ற இரண்டு அயனிகளாலும் ஆக்கப்பட்டுள்ளது. இச்சேர்மம் பெரிலியம் இருநைட்ரேட்டு என்றும் அழைக்கப்படுகிறது.

தயாரிப்பு

[தொகு]

பெரிலியம் ஐதராக்சைடை நைட்ரிக் அமிலத்துடன் சேர்த்து வினைப்படுத்தினால் பெரிலியம் நைட்ரேட்டு தயாரிக்கலாம் [2]

Be(OH)2 + 2 HNO3 → Be(NO3)2 + 2 H2O

தீங்குகள்

[தொகு]

அனைத்து பெரிலியம் சேர்மங்களைப் போலவே பெரிலியம் நைட்ரேட்டும் நச்சுத் தன்மை கொண்டுள்ள ஒரு வேதிப்பொருளாகும். சிறிய அளவு உப்பும் உறுத்தும் தன்மை கொண்டதாக இருக்கிறது. பெரிலியம் நைட்ரேட்டை எரிய வைக்கும் போது உறுத்தக்கூடிய அல்லது நச்சுத்தன்மையுடைய புகையை வெளிவிடுகிறது. அதிக அளவு புகையை சிறிதுநேரத்திற்கு முகர நேர்ந்தாலும் கடுமையான நுரையீரல் அழற்சி நோய்க்கு ஆளாக நேரிடும். ஆனால் அதற்குரிய அறிகுறிகள் மூன்று நாட்களுக்குப் பின்னரே வெளியில் தெரியும்[1].

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Beryllium Nitrate (ICSC)". IPCS INCHEM. பார்க்கப்பட்ட நாள் 13 September 2010.
  2. Walsh, Kenneth (2009). Beryllium chemistry and processing. ASM International. pp. 121–122. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87170-721-5. பார்க்கப்பட்ட நாள் 3 January 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிலியம்_நைட்ரேட்டு&oldid=2052934" இலிருந்து மீள்விக்கப்பட்டது