தாராசுரம்
தாராசுரம் | |||||||
— கும்பகோணம் மாநகராட்சி — | |||||||
ஆள்கூறு | |||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | தஞ்சாவூர் | ||||||
வட்டம் | கும்பகோணம் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | பி. பிரியங்கா, இ. ஆ. ப [3] | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
15,787 (2011[update]) • 6,864/km2 (17,778/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு | 2.3 சதுர கிலோமீட்டர்கள் (0.89 sq mi) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.townpanchayat.in/dharasuram |
தாராசுரம் (ஆங்கிலம்:Darasuram) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு உலகப்பெற்ற ஐராவதேசுவரர் கோயில் உள்ளது. இது வணிக நகரமான கும்பகோணத்தின் புறநகர் பகுதி ஆகும்.
2021-இல் புதிய கும்பகோணம் மாநகராட்சியுடன் இணைத்தல்
[தொகு]தாராசுரம் பேரூராட்சியை அக்டோபர், 2021-இல் புதிதாக நிறுவப்பட்ட கும்பகோணம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.[4][5]
அமைவிடம்
[தொகு]தாராசுரம் பேரூராட்சி தஞ்சாவூரிலிருந்து 42 கிமீ தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 4 கிமீ தொலைவிலும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]2.3 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 52 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கும்பகோணம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,931 வீடுகளும் 15,787 மக்கள்தொகையும் கொண்டது.[7][8][9]
சப்தஸ்தானம்
[தொகு]சித்திரை மாதத்தில் நடைபெறும் சப்தஸ்தான விழாவில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் மங்களநாயகியுடன் அதிவிநோதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் திருக்கலயநல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவேரி ஆகிய தலங்களுக்கு எழுந்தருளி காட்சி கொடுத்துத் திரும்புவர்.[10]
இது பஞ்சகுரோசத்தலங்களில் ஒன்றாகும்.[11]
வரலாற்றுச் சிறப்பு
[தொகு]இவ்வூர் பொ.ஊ. 12-ஆம் நூற்றாண்டில் இரண்டாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட ஐராவதேஸ்வரர் கோயிலுக்காக அறியப்படுகிறது.
இக்கோவில் மிகச்சிறப்பான கட்டிடக்கலையின் இருப்பிடமாக விளங்குகிறது. இதனுடைய விமானம் 85 அடி உயரம் கொண்டது.
பத்தாம் நூற்றாண்டில் இருந்து 12-ஆம் நூற்றாண்டுக்கு இடையில் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் கோவிலும் தாராசுரம் கோயிலும் நிறைய ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன.
சான்றுகள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ kumbakonam corporaon and 19 muniicipalites
- ↑ தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு - 16-வது மாநகராட்சியாக கும்பகோணம் உருவாகிறது
- ↑ தாராசுரம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ http://www.townpanchayat.in/dharasuram/population
- ↑ Dharasuram Population Census 2011
- ↑ Dharasuram Town Panchayat
- ↑ திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் தல வரலாறு, 1992
- ↑ திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோயில் தல வரலாறு, 2004 (மகாமக ஆண்டு)