அபீசு அகமது கான் மசூதி

ஆள்கூறுகள்: 13°03′11″N 80°16′25″E / 13.053128°N 80.27348°E / 13.053128; 80.27348
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அபீசு அகமது கான் மசூதி (Hafiz Ahmad Khan Mosque) தமிழ்நாடு, சென்னை, சேப்பாக்கம் பகுதியில் உள்ள காயிதே மில்லத் சாலையில் அமைந்துள்ளது. இதனை ஐஸ் அவுஸ் மசூதி என்றும் அழைப்பதுண்டு. இந்த மசூதி 1818 ஆம் ஆண்டு ஆபீசு அகமது கான் என்பவரால் கட்டப்பட்டது. இவர் முகமது அலி கான் வாலாஜாவின் அரசவையில் பணிபுரிந்த ஓர் அதிகாரியாவார். பஜ்ராம் ஜங் இவருடைய சகோதரர் ஆவார். சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள பஜ்ராம் ஜங் மசூதி இவர் பெயரில் அமைந்துள்ளது. ஆபீசு அகமது கான் மசூதி சென்னை விவேகானந்தர் இல்லத்தின் அருகே அமைந்துள்ளது.

உசாத்துணைகள்[தொகு]

  • சு. முத்தையா, தொகுப்பாசிரியர் (2008). Madras, Chennai: A 400-year record of the first city of Modern India. 1. Palaniappa Brothers. பக். 125. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபீசு_அகமது_கான்_மசூதி&oldid=3782121" இலிருந்து மீள்விக்கப்பட்டது