உள்ளடக்கத்துக்குச் செல்

ஜௌலியன் விகாரை

ஆள்கூறுகள்: 33°45′56″N 72°52′30″E / 33.76552°N 72.87498°E / 33.76552; 72.87498
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜௌலியன் விகாரை
جولیاں
ஜௌலியன் விகாரை
ஜௌலியன் விகாரை is located in பாக்கித்தான்
ஜௌலியன் விகாரை
Shown within Pakistan
இருப்பிடம்ஹரிபூர் மாவட்டம், பாகிஸ்தான், கைபர் பக்துன்வா, பாகிஸ்தான்
ஆயத்தொலைகள்33°45′56″N 72°52′30″E / 33.76552°N 72.87498°E / 33.76552; 72.87498
வகைவிகாரை
வரலாறு
கட்டப்பட்டதுகிபி இரண்டாம் நூற்றாண்டு
பயனற்றுப்போனது5-ஆம் நூற்றாண்டு
கலாச்சாரம்குசான், கிடாரைட்டுகள்
பகுதிக் குறிப்புகள்
அகழாய்வாளர் ஜான் மார்ஷல்
அதிகாரபூர்வ பெயர்: Taxila
அளவுகோல்iii, iv
வரையறுப்பு1980
சுட்டெண்139


ஜௌலியன் விகாரையில் கௌதம புத்தரின் சிலை
ஜௌலியன் விகாரையின் வரைபடம்
சிதிலமடைந்த ஜௌலியன் தூபியும், சிறிய நாற்கர வடிவ விகாரைகளும்


ஜௌலியன் விகாரை (Jaulian) (உருது: جولیاں[1]) தற்கால பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில், ஹரிபூர் மாவட்டத்தில், தக்சசீலாவின் அருகமைந்த ஜௌலியன் எனுமிடத்தில், கிபி இரண்டாம் நூற்றாண்டில் பௌத்த பிக்குகள் தங்கி, தியானம் செய்வதற்கு நிறுவப்பட்டதாகும். தற்போது ஜௌலியன் விகாரை பயன்பாட்டிற்கு உதவாத வகையில் சிதிலமடைந்துள்ளது. [2] ஜௌலியன் விகாரைக்கு அருகில் மொகரா முராது விகாரை உள்ளது.

ஜௌலியன் விகாரையை 1980-இல் யுனெஸ்கோ நிறுவனம், உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது. ஜௌலியன் விகாரை, தர்மராஜிக தூபி மற்றும் மொகரா முராது தூபிகளை விடச் சிறிதாகும்.

அமைவிடம்

[தொகு]

ஜௌலியன் விகாரை, பாகிஸ்தான் நாட்டின் இசுலாமாபாத் மற்றும் ராவல்பிண்டி நகரங்களிலிருந்து தென்கிழக்கே, முறையே 35 மற்றும் 45 கிலோ மீட்டர் தொலைவில், தக்சசீலா நகரத்திற்கு செல்லும் வழியில் ஜௌலியன் கிராமத்தின் மலையில் 100 மீட்டர் உயரத்தில் உள்ளது. இதனருகே மொகரா முராது உள்ளது.

வரலாறு

[தொகு]

குசான் பேரரசு காலத்தில் கிபி இரண்டாம் நூற்றாண்டில் ஜௌலியன் பௌத்த விகாரை நிறுவப்பட்டது.[3]கிபி 450-இல் இப்பகுதியை ஆக்கிரமித்த ஹெப்தலைட்டுகள் எனும் வெள்ளை ஹூனர்கள், ஜௌலியன் விகாரை உள்ளிட்ட தக்சசீலாவின் பௌத்தப் பண்பாட்டுக் களங்களை முற்றிலும் அழித்தனர்.[4]

அகழ்வாய்வுகள்

[தொகு]

ஜான் மார்ஷல் எனும் பிரித்தானிய தொல்லியல் அறிஞர், ஜௌலியன் விகாரை பகுதிகளை அகழ்வாய்வு செய்தார். அகழ்வாய்வில், இரண்டு பெரிய நாற்கர வடிவிலான விகாரைகளையும், 27 தூபிகளையும், பிக்குகள் தங்கும் 59 தியான மண்டபங்களையும் கண்டறிந்தார்.[3]

படக்காட்சிகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Taxila". Ancient History Encyclopedia. 23 July 2015. பார்க்கப்பட்ட நாள் 23 June 2017.
  2. Rashid, Salman (2001). The Salt Range and the Potohar Plateau. Sang-e-Meel Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789693512571. பார்க்கப்பட்ட நாள் 23 June 2017.
  3. 3.0 3.1 Samad, Rafi U. (2011). The Grandeur of Gandhara: The Ancient Buddhist Civilization of the Swat, Peshawar, Kabul and Indus Valleys. Algora Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780875868592.
  4. Behrendt, Kurt A. (2004). Handbuch der Orientalistik. BRILL. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789004135956.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jaulian
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜௌலியன்_விகாரை&oldid=3606870" இலிருந்து மீள்விக்கப்பட்டது