2023 இல் இந்தியா
| |||||
மிலேனியம்: | |||||
---|---|---|---|---|---|
நூற்றாண்டுகள்: |
| ||||
பத்தாண்டுகள்: |
| ||||
இவற்றையும் பார்க்க: | இந்தியாவில் ஆண்டுகளின் பட்டியல் இந்திய வரலாறு |
இந்தியாவில் 2022-ஆம் ஆண்டில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் வருமாறு:
பொறுப்பு வகிப்பவர்கள்[தொகு]
இந்திய அரசு[தொகு]
மாநில அரசுகள்[தொகு]
நிகழ்வுகள்[தொகு]
- சனவரி 2 - 2016 பண மதிப்பு நீக்கத்திற்கு எதிராக இந்திய அரசு மீது தொடுக்கப்பட்ட 56 வழக்குகளை இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்தது.[6][7][8]
- சனவரி 18 - திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
- சனவரி 13 - 29 - 2023 உலகக்கோப்பை ஆடவர் வளைதடிப் பந்தாட்டப் போட்டிகள் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலா நகரங்களில் நடைபெற்றது.
- மார்ச் 23 - மோடி சமூகத்தவரை அவமதித்த குற்ற வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கியது.[9][10]இதனால் இவரது மக்களவை உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது.[11]
- மார்ச் 24 - குற்ற வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.[12][13]
- ஏப்ரல் 11 - புள்ளியியல் அறிஞராக சி. ஆர். ராவுக்கு தமது 102வது அகவையில் புள்ளியியலில் பன்னாட்டுப் பரிசு அறிவிக்கப்பட்டது.[14]
- மே 3 - மணிப்பூர் வன்முறைகளில் 54 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 13,000 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.[15]
- மே 13 - 2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் இந்திய தேசிய காங்கிரசு வெற்றி பெற்றது.
- சூன் 2 - ஒடிசா தொடருந்து விபத்துக்களில் 275 பேர் உயிரிழந்தனர். 1,175 பேர் காயமடைந்தனர்.[16][17][18]
- சூலை 18 -பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தலைமையில் 26 கட்சிகள் கொண்ட இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி உருவானது.[19]
- சூலை 14 - சந்திரயான்-3 நிலாவிற்கு ஏவப்பட்டது.
- ஆகஸ்டு 23 - பிரக்யான் தரையூர்தி நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்பட்டது.
- ஆகஸ்டு 24 - 2023 சதுரங்க உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவின் ர. பிரக்ஞானந்தா இரண்டாம் இடத்தையும், நார்வேயின் மாக்னசு கார்ல்சன் முதல் இடத்தையும் பிடித்தனர்.
- செப்டம்பர் 9-10 --2023 ஜி20 புது தில்லி உச்சிமாநாடு ஜி 20 உச்சி மாநாடு புது தில்லியில் கூடியது. இக்கூட்டத்தில் ஆப்பிரிக்க ஒன்றியம் புதிய உறுப்பினராக சேர்க்கப்பட்டது.
- அக்டோபர் 17 - இந்திய உச்ச நீதிமன்றம், தன்பாலினத்தவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு எதிராக தீர்ப்பு அளித்தது.
இறப்புகள்[தொகு]
- 8 சனவரி– உத்தரப் பிரதேச பாஜக தலைவாகவும், மேற்கு வங்காள ஆளுநராகவும் இருந்த கேசரிநாத் திரிபாதி தமது 88 அகவையில் மறைந்தார்.[20]
- 12 சனவரி –இராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் தலைவர் சரத் யாதவ் தமது 75வது அகவையில் மறைந்தார்.[21]
- 31 சனவரி –இந்திய உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும், 1977–1979களில் மத்திய சட்ட அமைச்சருமாக இருந்த சாந்தி பூசண் தமது 97வது அகவையில் மறைந்தார்.[22]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Jagdeep Dhankhar sworn-in as 14th vice president
- ↑ Jagdeep Dhankhar takes oath as India's 14th Vice-President
- ↑ உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்பு
- ↑ Ahead of cabinet reshuffle, Thaawarchand Gehlot appointed as Karnataka Governor, Sreedharan Pillai as Goa Governor
- ↑ Centre Appoints New Governors For 8 States
- ↑ பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு: எதிர்த்த 58 மனுக்கள் தள்ளுபடி
- ↑ மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் | உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்
- ↑ பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கு: மாறுபட்ட தீர்ப்பில் கூறியிருப்பது என்ன?
- ↑ "Rahul convicted in defamation case, Congress scrambles to keep him in House" (in en). 2023-03-23. https://indianexpress.com/article/cities/ahmedabad/rahul-gandhi-surat-court-defamation-case-guilty-modi-surname-8513881/.
- ↑ மோடி குறித்து அவதூறு பேச்சு | ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை: சூரத் நீதிமன்றம் தீர்ப்பு
- ↑ Rahul Gandhi disqualified as Lok Sabha MP after conviction: How the process works
- ↑ Livemint (2023-03-24). "Rahul Gandhi Live Updates: Congress leader Rahul Gandhi disqualified from LS" (in en). https://www.livemint.com/news/india/rahul-gandhi-news-live-updates-defamation-case-bjp-congress-11679628736935.html.
- ↑ "Constitution of India". https://www.constitutionofindia.net/constitution_of_india/the_union/articles/Article%20102.
- ↑ Indian-American mathematician C R Rao awarded math ‘Nobel Prize’
- ↑ மணிப்பூர் கலவரத்தில் இதுவரை 54 பேர் உயிரிழப்பு; முகாம்களில் 13,000 மக்கள் தங்கவைப்பு
- ↑ Abinaya V; Jatindra Dash (2 June 2023). "At least 207 dead, 900 injured in massive train crash in Odisha, India". இராய்ட்டர்சு. https://www.reuters.com/world/india/least-30-dead-179-injured-train-collision-eastern-india-reports-2023-06-02/.
- ↑ India train crash: More than 280 dead after Odisha incident, பிபிசி
- ↑ "Coromandel express accident live: Death toll in Odisha train accident rises to 237" (in en). 2023-06-03. https://timesofindia.indiatimes.com/city/odisha-coromandel-express-train-accident-news-live-several-feared-injured-as-odisha-bahanaga-train-derails/liveblog/100690360.cms.
- ↑ "Nitish Kumar was not on board with INDIA name as...:'If all of you are okay'" (in en). 2023-07-19. https://www.hindustantimes.com/india-news/nitish-kumar-what-is-india-alliance-slogan-all-you-need-to-know-101689743543047.html.
- ↑ "Former Bengal governor Keshari Nath Tripathi passes away" (in en). 2023-01-08. https://www.hindustantimes.com/cities/others/former-bengal-guv-keshari-nath-tripathi-passes-away-101673156807918.html.
- ↑ "Former Union minister Sharad Yadav passes away, condolences pour in". https://www.timesnownews.com/india/sharad-yadav-passes-away-confirms-his-daughter-article-96948044. பார்த்த நாள்: 12 January 2023.
- ↑ "Former Law Minister and Senior Advocate Shanti Bhushan no more". Bar and Bench. 31 January 2023. https://www.barandbench.com/news/senior-advocate-shanti-bhushan-is-no-more. பார்த்த நாள்: 31 January 2023.