புள்ளியியலில் பன்னாட்டுப் பரிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புள்ளியியலில் பன்னாட்டுப் பரிசு
விருது வழங்குவதற்கான காரணம்புள்ளியியல் துறையில் சிறந்த அறிவியல் பணி
முதலில் வழங்கப்பட்டது2016
இணையதளம்www.statprize.org

புள்ளியியலில் பன்னாட்டுப் பரிசு (International Prize in Statistics) "புள்ளியியலைப் பயன்படுத்தி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மனித நலனை முன்னேற்றுவதற்கான முக்கிய சாதனைகளுக்காக" இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு தனிநபர் அல்லது குழுவிற்கு வழங்கப்படுகிறது.

இந்தப் பரிசு நோபல் பரிசுகள், ஏபெல் பரிசு, பீல்ட்ஸ் பதக்கம், தூரிங்கு விருது போன்ற விருதுகள் மாதிரியாக வடிவமைக்கப்பட்டு, $80,000 பணப் பரிசும் வழங்கப்படுகிறது. உலக புள்ளியியல் பேராயத்தின் போது விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.

விருது பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு விருதாளர்(கள்) குடியுரிமை கல்வி நிலையங்கள் மேற்கோள்கள்
2017 டேவிட் கொக்சு பிரித்தானியர் லண்டன் இம்பீரியல் கல்லூரி, ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் "மருத்துவம், அறிவியல் மற்றும் பொறியியலில் பயன்படுத்தப்படும் கொக்சு பகுப்பாய்வு மாதிரி"[1]
2019 பிராட்லி எஃப்ரோன் அமெரிக்கர் கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம், இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் புள்ளியியலில் இயக்குநிலை
2021 நான் லயர்டு அமெரிக்கர் பொதுநலத்திற்கான ஆர்வார்டு டி. எச். சான் பள்ளி சிக்கலான கிடைநிலை ஆய்வுகளின் பகுப்பாய்வை சாத்தியமாக்கிய ஆற்றல்மிக்க முறைகள் பற்றிய அவரது பணிக்காக.[2]
2023 சி. ஆர். ராவ் அமெரிக்கர் இளைப்பாறியவர் "அறிவியலில் ஆழமான செல்வாக்கை செலுத்தி வந்த இவரது 75 ஆண்டுப் பணிக்காக", இதில் கிராமர்-ராவ் கீழ் வரம்பு, ராவ்-பிளாக்வெல் தேற்றம், தகவல் வடிவியல் ஆகியவை அடங்கும்.[3]

விதிகள்[தொகு]

இப்பரிசு ஒரு ஒற்றைப் பணி அல்லது பணி அமைப்பை அங்கீகரிக்கிறது, இது ஏனைய துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்திய அல்லது உலகில் நடைமுறை விளைவை ஏற்படுத்திய சக்திவாய்ந்த மற்றும் மூலப் பணியை அங்கீகரிக்கிறது. பரிசு வழங்கப்படும் போது பெறுபவர் உயிருடன் இருக்க வேண்டும்.[4]

அமைப்பு[தொகு]

புள்ளியியல் அறக்கட்டளையின் பன்னாட்டுப் பரிசு, பின்வரும் முக்கிய கற்றறிந்த சமூகங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கியுள்ளது:[5]

  • அமெரிக்கப் புள்ளியியல் கழகம்
  • பன்னாட்டு பயோமெட்ரிக் அவை
  • கணித புள்ளியியல் நிறுவனம்
  • பன்னாட்டுப் புள்ளியியல் நிறுவனம்
  • அரசப் புள்ளியியல் அவை

மேற்கோள்கள்[தொகு]

  1. "International Prize in Statistics Awarded to Sir David Cox for Survival Analysis Model Applied in Medicine, Science, and Engineering" (PDF).
  2. "International prize in statistics awarded to Nan Laird for longitudinal study methods". EurekAlert. American Statistical Association.
  3. https://statprize.org/2023-International-Prize-in-Statistics-Awarded-to-C-R-Rao.cfm
  4. "2017 Call for nominations". Archived from the original on 2016-10-26. பார்க்கப்பட்ட நாள் 2016-10-25.
  5. "Hungarian science spat, Kuwait's DNA law and a transparency milestone – The week in science: 21–27 October 2016". Nature 538 (432). 27 October 2016. doi:10.1038/538432a. http://www.nature.com/news/hungarian-science-spat-kuwait-s-dna-law-and-a-transparency-milestone-1.20867. 

வெளி இணைப்புகள்[தொகு]