சாந்தி பூசண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாந்தி பூசண்
நடுவண் ஆய அமைச்சர், இந்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம்
பதவியில்
1977-1979
தனிநபர் தகவல்
பிறப்பு நவம்பர் 11, 1925 (1925-11-11) (அகவை 95)
தேசியம் Indian
பிள்ளைகள் பிரசாந்த் பூசண், ஜயந்த் பூசண்

சாந்தி பூசண் (Shanti Bhushan, பிறப்பு நவம்பர் 11, 1925) இந்தியாவின் மூத்த வழக்கறிஞரும் 1977-79 காலகட்டத்தில் மொரார்ஜியின் தலைமையில் அமைந்த நடுவண் அரசில் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகப் பணியாற்றியவரும் ஆவார். 2009ஆம் ஆண்டின் செல்வாக்குமிக்க இந்தியர்களில் 74வது இடத்தைப் பெற்றிருந்தார்.[1]

ஏப்ரல் 2011இல் அண்ணா அசாரேயின் உண்ணாவிரதத்தை அடுத்து இந்திய அரசு ஜன் லோக்பால் மசோதாவை ஆராய அமைக்க ஒப்புக்கொண்ட கூட்டுக்குழுவிற்கு இணைத்தலைவராக இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.[2]

செயல் முனைப்பு[தொகு]

சாந்தி பூசண் அவரது மகன் பிரசாந்த் பூசணுடன் இணைந்து இந்திய நீதித்துறை பொறுப்புடன் செயல்பட நீதித்துறை பொறுப்பேற்கவும் நீதித்துறை சீர்திருத்தங்களுக்குமான இயக்கத்தை (CJAR) உருவாக்கினார்.[3] இந்த இயக்கம் நீதியரசர் யோகேஷ் குமார் சபர்வால் தவறுகளை வெளிக்கொணர்ந்ததுடன் [4] நீதிபதிகள் தங்கள் சொத்து மதிப்புகளை அறிவிக்க காரணமாக அமைந்தது.[5]

இந்த இயக்கம் நீதியரசர் அசோக் குமார், மதன் மோகன் பஞ்சி, சௌமித்ர சென் ஆகியோரின் நடவடிக்கைகளையும் நியமனங்களையும் எதிர்த்தது.[6][7]

தந்தை, மகன் இருவரும் "இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் உட்பட உயர்நிலை நீதித்துறை அலுவலர்களிடையேயும் ஊழல் மலிந்துள்ளதாக" கூறியதற்காக தற்போது உச்ச நீதிமன்றத்தின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்நோக்கி யுள்ளனர்.[8]

இவ்வழக்கின் நவம்பர் 2011 அமர்வொன்றில் சாந்தி பூசன் "தான் சிறை செல்ல வேண்டியிருந்தாலும் மன்னிப்பு கேட்கப்போவதில்லை " என்று கூறியதாகத் தெரிகிறது.[9]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்தி_பூசண்&oldid=2694479" இருந்து மீள்விக்கப்பட்டது