2023 உலகக்கோப்பை ஆடவர் வளைதடிப் பந்தாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலிங்கா விளையாட்டரங்கம், புவனேஷ்வர், ஒடிசா, இந்தியா

2023 உலகக்கோப்பை ஆடவர் வளைதடிப் பந்தாட்டம் (2023 Men's FIH Hockey World Cup) 15வது உலகக்கோப்பை ஆடவர் வளைதடிப் பந்தாட்டமானது இந்தியாவின் ஒரிசா மாநிலத்த்தின் ரூர்கேலா மற்றும் புவனேஸ்வர் நகரங்களில் உள்ள பிர்சா முண்டா பன்னாட்டு ஹாக்கி விளையாட்டரங்கம் மற்றும் கலிங்கா விளையாட்டு அரங்கங்களில் சனவரி 13 முதல் 29 முடிய நடைபெற்றது.[1][2] இப்போட்டியில் இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளின் அணிகள் கலந்து கொண்டன.

இறுதிப் போட்டியில் பெல்ஜியத்தை வீழ்த்தி ஜெர்மனி மூன்றாவது முறையாக தங்கக் கோப்பை வென்றது.[3] பெல்ஜியம் வெள்ளிக் கோப்பை வென்றது. நெதர்லாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.

போட்டியில் கலந்து கொண்ட நாடுகள்[தொகு]

அணியில்[தொகு]

  1. ஆஸ்திரேலியா
  2. அர்ஜைன்டைனா
  3. பிரான்சு
  4. தென்னாப்பிரிக்கா

பி அணியில்[தொகு]

  1. பெல்ஜியம்
  2. ஜெர்மனி
  3. தென் கொரியா
  4. ஜப்பான்

சி அணியில்[தொகு]

  1. நெதர்லாந்து
  2. நியூசிலாந்து
  3. மலேசியா
  4. சிலி

டி அணியில்[தொகு]

  1. இந்தியா
  2. இங்கிலாந்து
  3. ஸ்பெயின்
  4. வேல்ஸ்

போட்டியின் இறுதி தரவரிசை[தொகு]

நிலை குழு அணி வி வெ தோ கோநே கோஎ கோவே பு இறுதி முடிவுகள்
1st B ஜெர்மனி 7 4 3 0 26 13 +13 11 தங்கக் கோப்பை
2nd B பெல்ஜியம் 6 3 3 0 21 8 +13 9 வெள்ளிக் கோப்பை
3rd C நெதர்லாந்து 6 5 1 0 32 4 +28 11 வெண்கலக் கோப்பை
4 A ஆஸ்திரேலியா 6 3 1 2 28 15 +13 7 நான்காமிடம்
5 D இங்கிலாந்து 4 2 2 0 11 2 +9 6 காலிறுதிப் போட்டியில் வெளியேற்றப்பட்ட அணிகள்
6 D ஸ்பெயின் 5 1 1 3 10 13 −3 3
7 C நியூசிலாந்து 5 1 1 3 8 13 −5 3
8 B தென் கொரியா 5 1 1 3 10 23 −13 3
9 A அர்ஜைன்டைனா} 6 3 3 0 28 13 +15 9 ஒன்பதாமிடம்
9 D இந்தியா (H) 6 4 2 0 22 7 +15 10
11 A தென்னாப்பிரிக்கா 5 1 0 4 11 20 −9 2 பதின்னொன்றாமிடம்
11 D வேல்ஸ் 5 0 1 4 5 22 −17 1
13 A பிரான்சு 6 2 2 2 14 23 −9 6 பதின்மூன்றாமிடம்
13 C மலேசியா 6 3 1 2 14 18 −4 7
15 C சிலி 5 0 0 5 5 32 −27 0 பதின்னைந்தாமிடம்
15 B ஜப்பான் 5 0 0 5 4 23 −19 0
மூலம்: FIH
(H) நடத்தும் நாடு

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]