நிலாத் தென்முனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிலாத் தென்முனை வட்டாரம் (>70° தெ): தோராயமாக,1500 படிமங்கலின் கலவைப்படம். <i id="mwDA">கிலெமெந்தைன்</i> விண்கலம் எடுத்தது.
நிலாத் தென்முனை ஒரு பார்வை. தெறிப்புக் கதிர்களும் வெப்பநிலை தரவுகளும் மேற்பரப்பில் நீர், பனி இருப்பைக் குறிக்கின்றன.

நிலாத் தென்முனை ((lunar south pole)) 90° பாகை தெற்கில் நிலாவின் தெற்கு முனையில் உள்ளது. அதைச் சுற்றியுள்ள நிலையான நிழல் பகுதிகளில் நீர் பனிப்பொழிவு இருப்பதால் இது அறிவியலாளர்களுக்கு சிறப்பு ஆர்வமாக உள்ளது. நிலாத் தென்முனையில் தனித்தன்மையான பள்ளங்கள் உள்ளன. ஏனெனில் நிலையான சூரிய ஒளி அவற்றின் உட்புறத்தை அடையாது. இத்தகைய பள்ளங்கள் குளிர் பொறிகளாகும் , அவை நீரகம், நீர், பனிக்கட்டி தொடக்க காலச் சூரிய மண்டலத்தைச் சேர்ந்த பிற ஆவியாகும் பொருள்களின் புதைபடிவப் பதிவுகளைக் கொண்டுள்ளன.[1][2] இதற்கு மாறாக , நிலா வடமுனைப் பகுதியில் இதே போன்று அமைந்த பள்ளங்கள் மிகக் குறை வாகவே உள்ளன.[3]

மேலும் காண்க[தொகு]

  • நிலாமுனைக் குடியேற்றம்
  • நிலாப் புவியியல்
  • நிலா வடமுன
  • நிலா வளங்கள்
  • நிலா நிலவியல்

குறிப்புகள்[தொகு]

  1. "NASA Takes Aim at Moon with Double Sledgehammer". Space.com. February 27, 2008. பார்க்கப்பட்ட நாள் March 4, 2010.
  2. Lunar South Pole. பரணிடப்பட்டது 24 சூன் 2017 at the வந்தவழி இயந்திரம் NASA. 2017. Accessed on 16 July 2019.
  3. "South Pole Region of the Moon as Seen by Clementine". NASA. June 3, 1996. பார்க்கப்பட்ட நாள் March 4, 2010.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலாத்_தென்முனை&oldid=3778177" இலிருந்து மீள்விக்கப்பட்டது