உள்ளடக்கத்துக்குச் செல்

ஆதித்தியா எல் 1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆதித்தியா-எல்1
Aditya-L1
ஏவல் வடிவில் ஆதித்தியா-எல்1
திட்ட வகைகதிரவ நோக்கீடு
இயக்குபவர்இசுரோ
இணையதளம்www.isro.gov.in/Aditya_L1.html
திட்டக் காலம்5.2 ஆண்டுகள் (திட்டம்)[1]
விண்கலத்தின் பண்புகள்
செயற்கைக்கோள் பேருந்துஐ-1கே
தயாரிப்புஇசுரோ / IUCAA / IIA
ஏவல் திணிவு1,475 kg (3,252 lb)[2]
ஏற்புச்சுமை-நிறை244 kg (538 lb)[1]
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்2 செப்டம்பர் 2023, 06:20 ஒசநே[3][4]
ஏவுகலன்PSLV-XL(சி57)[1]
ஏவலிடம்சதீஸ் தவான் விண்வெளி மையம்
ஒப்பந்தக்காரர்இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்
சுற்றுப்பாதை அளபுருக்கள்
Reference systemசூரியன்–புவி எல்1
சுற்றுவெளிசமநிலை ஈர்ப்பு வட்டம்
சுற்றுக்காலம்177.86 நாள்கள்[5]

ஆதித்தியா எல்1 (Aditya L1) என்பது சூரிய வளிமண்டலத்தை ஆய்வு செய்வதற்காகத் திட்டமிடப்பட்ட சூரியப்புறணி வரைவி விண்கலமாகும், இது தற்போது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இசுரோ) உட்பட்ட பல்வேறு இந்திய ஆய்வு நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.[1] இது புவிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள எல்1 புள்ளியைச் சுற்றி ஒரு சமனிலை ஈர்ப்பு வட்டத்தில் நிலைநிறுத்தப்படும். அங்கு இது சூரிய வளிமண்டலம், சூரியக் காந்தப் புயல்கள், புவியைச் சுற்றியுள்ள சூழலில் ஏற்படும் தாக்கத்தை ஆய்வு செய்யும்.

சூரியனை ஆய்வுசெய்ய இந்தியாவால் ஏவப்படும் முதல் சூரியச் சுற்றுகலன் திட்டமாகும். இத்திட்ட இயக்குநராக நிகார் சாஜி விளங்குகிறார்.[3][4][6][7] இது சூ2023 செப்டம்பர் 2 அன்று 11:50 மணி (இசீநே) அளவில், முனையச் செயற்கைக்கோள் ஏவூர்தி (PSLV-C57) வழி, சிறீ அரிகோட்டாவில் உள்ள சத்தீசு தவான் விண்வெளி ஆய்வு மையம் (SDSC) இரண்டாம் ஏவுதளத்தில் இருந்து ஆதித்தியா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.[3][4][6][8]

திட்ட நோக்கங்கள்[தொகு]

ஆதித்தியா எல்1 திட்டத்தின் முதன்மை அறிவியல் நோக்கங்களாகப் பின்வருவன அமைகின்றன:

 • சூரிய மேல் வளிமண்டல (நிறக்கோளம், சூரியப்புறணி உட்பட) இயங்கியல் ஆய்வு.
 • நிறக்கோள, சூரியப்புறணிச் சூடாக்க ஆய்வு, பகுதி இயனியாக்க மின்ம இயற்பியல், சூரியப்புறணி பொருண்மை உமிழ்வுகளின் தொடங்கலும் சுடர் எறிவுகளும்
 • சூரியனில் இருந்துவரும் துகள் இயங்கியலை ஆய்வதற்கான தரவுகளைத் தரும் களத் துகள், மின்மச் சூழல் நோக்கீடுகள்.
 • சூரியப்புறணி இயற்பியலும் அதன் சூடாக்க இயங்கமைப்பும்.
 • வெப்பநிலை, விரைவு(திசைவேகம்), அடர்த்தி உட்பட்ட கூறுபாடுகளில் சூரியப்புறணியையும் அதன்மின்ம ஊடகக் கண்ணிகளையும்(loops) ஆய்ந்தறிதல்
 • சூரியப்புறணிப் பொருண்மை உமிழ்வுகளின்(CMEs) தோற்றமும் வளர்ச்சியும் இயங்கியலும்
 • சூரிய உமிழ்வு நிகழ்ச்சிகளை உருவாக்கும் சூரிய வளிமண்டல அடுக்குகளில்(நிறக்கோளம் , ஒளிக்கோளம், விரியும் சூரியப்புறணி) நிகழும் நிகழ்வுகளின் வரிசைமுறையை இனங்காணல்.
 • சூரியப்புறணியின் காந்தப்புலக் கிடப்பியலும், காந்தப்புல அளவீடும் .
 • விண்வெளி வானிலை உருவாக்கக் காரணிகள் ( சூரியக் காற்றின் தோற்றமும், உட்கூறும், இயங்கியலும்) .[9]

வரலாறு[தொகு]

உறைக்குள் ஆதித்தியா எல் 1

ஆதித்தியா விண்கலக் கருத்துப் படிமத்தை விண்வெளி ஆராய்ச்சிக் குழு 2008 இல் உருவாக்கியது.[10][11] முதலில் இது ஒரு சிறிய 400 kg (880 lb) எடையுள்ள 800 கிமீ குத்துயரத் தாழ் புவி வட்டணையில் இருந்து சூரியப்புறணியை ஆய்வுசெய்யும் செயற்கைக்கோளாகவே கருதப்பட்டது. இதில் ஒரு புறணிவரைவி மட்டும் பொருத்தலாம் என வரையரை செய்யப்பட்டது. இதற்காக, 2017-18 ஆம் நிதியாண்டில் செய்முறைப் பாதீடாக மூன்று கோடி இந்திய உருபா ஒதுக்கவும் பட்டது.[12][13][14] பிறகு, இத்திட்ட எல்லை விரிவாக்கப்பட்டது. இது தற்போது ஓர் எளிய சூரிய, விண்வெளிச் சுற்றுச்சூழல் நோக்கீட்டகமாக புவி-சூரியச் சமனிலை ஈர்ப்பு வட்டத்தில் எல் 1 இலாகிரேஞ்சுப் புள்ளியில் ஏழு அறிவியல் கருவிகளோடு நிலைநிறுத்த திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது;[15] எனவே, இத்திட்டம் ஆதித்தியா எல் 1 என பெயர் மாற்றப்பட்டு, 2019 சூலையில் ஏவுதல் செலவில்லாமல் ₹378.53 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.[16]

பிரிந்தநிலை உருவடிவில் ஆதித்தியா எல் 1

திட்டம்[தொகு]

புவி-சூரிய அமைப்பின் எல் 1 புள்ளி ( அளவுகோல் அற்றது) – ஐந்து இலாகிரேஞ்சுப் புள்ளிகளில் ஏதாவதொன்றில் வைக்கப்படும் சிறுபொருள் தன் சார்பிருப்பை மாற்றாமல் அப்புள்ளியிலேயே நிலைத்துநிற்கும்.

ஆதித்தியா-L1 திட்டம் நிறைவுற, ஏவியதும் 109 நாட்கள் எடுத்துகொள்ளும்;[17] ஏனெனில், சமனிலை ஈர்ப்பு வட்டத்தில் அமையும் எல் 1 புள்ளி புவியில் இருந்து 15,00,000 கிமீ தொலைவில் இருப்பதால் இந்நேரம் வேண்டியிருக்கிறது. 1,500 kg (3,300 lb) எடையுள்ள விண்கலம் பலவகை நோக்கங்களுக்கான ஏழு அறிவியல் கருவிகளைக் கொண்டுசெல்கிறது. இவற்றில், சூரியப்புறணிச் சூடாக்கம், சூரியக் காற்று முடுக்கம், சூரியப்புறணி காந்தமானி, புவி வளிமண்டலத்தை இயக்கி, புவிக் கோளகக் காலநிலையைத் தீர்மானிக்கும் புவியருகு புறவூதாக் கதிர்வீச்சின் தோற்றத்தையும் கண்காணிப்பையும் செய்யும் கருவி, ஒளி, நிறக் கோளங்களைச் சூரியப்புறணியுடன் பிணைத்தலை ஆயும் கருவி, விண்வெளி, புவித்தரைத் தொழில்நுட்பங்களைத் தாக்கும் புவிசுற்றிலுமுள்ள விண்வெளிச் சுற்றுச்சூழலின் களப் பான்மைகளை அறிய, உயர் ஆற்றல் துகள் பாயத்தையும் சூரியக் காற்று, சூரியக் காந்தப்புயல்களின் காந்தப்புலங்களை அளத்தலும் ஆகியன அடங்கும்.[1]

ஆதித்தியா-L1 விண்கலம் சூரியப்புறணி, ஒளி, நிறக்கோளங்களின் நோக்கீடுகளைத் தரும். மேலும், ஒரு கருவி எல் 1 வட்டணையை அடையும் உயர் ஆற்றல் சூரியத் துகள்களின் பாயத்தை ஆயும்; காந்தமானி சமனிலை ஈர்ப்பு வட்ட எல் 1 புள்ளியருகேயுள்ள சூரியக் காந்தப்புலச் செறிவில் நிகழும் மாற்றங்களை அளக்கும். இந்த அறிவியல் கருவிகள் புவிக் காந்தப்புலத்தின் குறுக்கீட்டுக்கு வெளியே அமையவேண்டும். எனவே, முதலில் முன்மொழிந்த தாழ் புவி வட்டணை ஆதித்தியா திட்டத்தில் இவற்றை வைத்து ஆய்வு செய்திருக்க முடியாது.[18]

சூரிய இயற்பியலில் இதுவரை தீர்க்கப்படாத முதன்மையான சிக்கல் சூரிய வளிமண்டல மேலடுக்கின் வெப்பநிலை 1,000,000 K (1,000,000 °C; 1,800,000 °F) அளவு சூடாகவும் அதன் கீழடுக்கின் வெப்பநிலை 6,000 K (5,730 °C; 10,340 °F) ஆக மட்டுமே அமைதலாகும். அதோடு, குறுங்கால இடைவெளியிலும் நெடுங்கால இடைவெளியிலும் சூரியக் கதிர்வீச்சு புவி வளிமண்டல இயங்கியலை சரியாக எப்படி தாக்குகிறது என்பதும் புரிந்துகொள்ளப்படாமலே உள்ளது. இத்திட்டம் சூரிய வளிமண்டலத்தின் பல்வேறு அடுக்குகளின் படிமங்களை ஒரே நேரத்தில் பெறவுள்ளதால், ஆற்றல் ஓரடுக்கில் இருந்து மற்றோர் அடுக்குக்கு எப்படி வழிபடுத்தப்பட்டு கடத்தப்படுகிரது என்பதைத் தெளிவாக அறிய வாய்ப்புள்ளது. எனவே, ஆதித்தியா எல் 1 விண்கலத்திட்டம் சூரிய இயங்கியல் நிகழ்வுகளை எளிதாகப் புரிந்துகொள்ளவும் சூரிய இயற்பியலிலும் எல்லிய இயற்பியலிலும் உள்ள சில சிக்கல்களைப் புரிந்துகொள்ளவும் விளக்கவும் உதவும்.

அறிவியல் கருவிகள்[தொகு]

Instruments in Aditya L1
ஆதித்தியா எல் 1 இல் உள்ள அறிவியல் கருவிகள்

ஆதித்தியா எல் 1 கருவிகள் சூரிய வளிமண்டலத்தை நோக்கீடு செய்யும்; முதன்மையாக நிறக்கோளத்தையும் சூரியப்புறணியையும்ஆயும். களக்கருவிகள் L1புள்ளியின் களச்சூழலை நோக்கீடு செய்யும். விண்கலத்தில் ஏழு கருவிகள் உள்ளன; இவற்றில் நான்கு சூரியனை ஆயும் தொலையுணர்வுக் கருவிகள்; மற்ற மூன்றும் களச்சூழல் நோக்கீட்டுக் கருவிகள் ஆகும்:[19]

வகை வ.எண் கருவி செயல் திறன் உருவாக்கம்
தொலையுணர்வுக் கருவிகள் 1 கட்புல உமிழ்வரி சூரியப் புறணி வரைவி(VELC) சூரியப் புறணி/படிமமாக்கம், சூரியப் புறணி வரைவி இந்திய வானியற்பியல் மையம், பெங்களூரு
2 சூரிய புறவூதா படிமமாக்கத் தொலைநோக்கி (SUIT) ஒளிக்கோளம், நிறக்கோளம் படிமமாக்கம்- குறும்பட்டையும் அகல்பட்டையும் பல்கலைக்கழகங்களுக்கான வானியல், வானியற்பியல் மையம் , பூனா
3 சூரியத் தாழ் ஆற்றல் எக்சுக்கதிர் கதிர்நிரல்மானி (SoLEXS) (SoLEXS) மென் எக்சுக்கதிர் கதிர்நிரல்மானி: ஒரு விண்மீனாக சூரிய நோக்கீடு யூ ஆர் ராவ் செயற்கைக்கோள் மையம், பெங்களூரு
4 உயர் ஆற்றல் L1 வட்டணை எக்சுக்கதிர் கதிர்நிரல்மானி(HEL1OS) வன் எக்சுக்கதிர் கதிர்நிரல்மானி: ஒரு விண்மீனாக சூரிய நோக்கீடு யூ ஆர் ராவ் செயற்கைக்கோள் மையம், பெங்களூரு
கள ஆய்வுக் கருவிகள் 5 ஆதித்தியா சூரியக் காற்று துகள் செய்முறை(ASPEX) சூரியக் காற்று]]/துகள் பகுப்பாய்வி மின்னன்கள், திசைகள் உள்ள அடர் இயனிகள் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம், அகமதாபாது
6 ஆதித்தியா மின்மப் பகுப்பாய்வித் தொகுப்பு (PAPA) சூரியக் காற்று/துகள் பகுப்பாய்வி மின்னன்கள், திசைகள் உள்ள அடர் இயனிகள் சூரிய இயற்பியல் ஆய்வகம், விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் திருவனந்தபுரம்
7 மேம்படுத்திய மூவச்சு உயர்பிரிதிறன் இலக்கவியல் காந்தமானிகள் களக் காந்தப் புலம் (Bx, By, Bz). மின்-ஒளியியல் அமைப்பு ஆய்வகம், பெங்களூரு
 • கட்புல உமிழ்வரி சூரியப் புறணி வரைவி (VELC): சூரியப் புறணி வரைவி ஓர் ஒளித்தடுப்பு வழியா சூரிய ஒளியைத் தடுத்து முழு சூரிய ஒளிமறைப்பை உருவாக்குகிறது. இந்தத் தொலைநோக்கி சூரியப் புறணியின் கட்புல அலைநீள்ங்களிலும் அகச்சிவப்புக்கதிர் அலைநீளங்களிலும் கதிர்நிரல் படிமம் எடுக்க வல்லதாகும். இந்த அளவீட்டின் நோக்கங்களாக, சூரியப் புறணி அளவுருக்களை அறிதல், மூன்று கட்புல அலைவரிசையயும் ஒரு அகச்சிவப்புக் கதிர் அலைவரிசையையும் பயன்படுத்தி, சூரியப் புறணிப் பொருண்மை உமிழ்வின் தோற்றமும் இயங்கியலும் ஆய்தல், சூரியப் புறணியின் காந்தப்புல அளவீடுகள்( சிற்றளவாக,பத்து காசு கள் வரை) ஆகியனவும் கூடுதல் நோக்கங்களாக, சூரிய வளிமண்டலம் ஏன் சுரியனை விட உயர் வெப்பநிலையில் அமைகிறது என்பதைத் தீர்மானித்தல், எப்படி விண்வெளி வானிலை மாற்றங்கள் புவிக் காலநிலையைத் தாக்குகிறது என்பதை ஆய்தல் ஆகியனவும் அமைகின்றன. சூரியப் புறணி வரைவியின் எடை 170 kg (370 lb) அளவுக்கு அணுக்கமாக அமைகிறது.[20]
 • சூரியப் புறவூதா படிமமாக்கத் தொலைநோக்கி (SUIT): இது சூரியன்னை 200-400 nm அலைநீள நெடுக்கத்தில் நோக்கீடுகள் எடுக்கும். மேலும், 11 வடிப்பிகளைப் பயன்படுத்திச் சூரிய வளிமண்டலத்தின் பல்வேறு அடுக்குகளின் முழு வட்டு படிமங்களைப் படம்பிடிக்கும். சூரியன் இதுவரை இவ்வளவு அலைநீள நெடுக்கத்தில் நோக்கீடு எடுக்க்கப்பட்டதில்லை. விண்கலம் முதல் இலாகிரேஞ்சுப் புள்ளியில் உல்ளதால், இக்கருவி தடங்கல் ஏதுமின்றி சூரியனை தொடர்ந்து நோக்கிட இயலும். இது ஏ. என். இராம்பிரகாசாலும் துர்கேசு திரிபாதியாலும் பூனாவில் உள்ள வானியல், வானியற்பியலுக்கான பல்கலைக்கழகத்திடை மையத்தால்(IUCAA), இசுரோ, அதன் பிற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டது. இதன் எடை 35 kg (77 lb) அளவுக்கு அணுக்கமாக அமையும்.[20]
 • ஆதித்தியா சூரியக் காற்றுத் துகள் செய்முறை (ASPEX):[21] இது சூரியக் காற்றின் மாற்றம், இயல்புகள், பரவல், கதிர்நிரல் பான்மைகளை ஆய்வு செய்யும்.
 • ஆதித்தியா மின்மப் பகுப்பாய்வித் தொகுப்பு (PAPA): இது சூரியக் காற்றின் உட்கூறுகளையும் அதன் ஆற்றல் பரவலையும் ஆய்வு செய்யும்.
 • சூரியத் தாழ் ஆற்றல் X-கதிர் கதிர்நிரல்மானி (SoLEXS): சூரியப்புறணி இயங்கமைப்பையும் அதன் சூடாக்கத்தையும் ஆய்வுசெய்ய, இக்கருவி X-கதிர் சுடர்வுகளைக் கண்காணிக்கும்.
 • உயர் ஆற்றல் L1 வட்டணை X-கதிர் கதிர்நிரல்மானி (HEL1OS): சூரியப்புறணி இயங்கியல் நிகழ்வுகளைக் கண்காணிக்கவும் உமிழ்வு நிகழ்ச்சிகளின்போது உயர் ஆற்றல் சூரியத் துகள்கள் பயன்படுத்தும் ஆற்றலை மதிப்பீடு செய்யவும் இக்கருவி உதவுகிறது.
 • காந்தமானி:[22] இது கோளிடைக் காந்தப்புலத் தன்மையையும் பருமையையும் அளக்கும்.

திட்டச் சிறப்பும் வாய்ப்பும்[தொகு]

ஆதித்தியா எல் 1 திட்டம் சூரிய நடத்தையையும் புவி, விண்வெளி சூழலுடன்னன ஊடாட்டத்தையும் புரிந்துகொள்ளலைக் கணிசமான அளவில் மேம்படுத்தலை உறுதிபடுத்தும். திட்டத்தின் திட்டமிடப்பட்டுள்ள நோக்கீடுகளும் தர்வவுகளை திரட்டலும் புதிய திருப்புமுனை கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுப்பதோடு சூரிய இயற்பியல், எல்லிய இயற்பியல் புலங்களில் புதிய பார்வைகளைத் திறந்து வைக்கும்.

 1. சூரியப்புறணி சூடாக்கப் பொறிமுறை அல்லது இயங்கமைப்பு:[23] சூரிய இயர்பியலின் ஒரு மையக் கேள்வி சுரியப்புறணிச் சூடாக்கச் சிக்கலாகும். ஏன் சூரியமேர்பரப்பை விட வெளி வளிமண்டலமான சூரியப்புறணி உயர் வெப்பநிலையில் உள்ளது என்பதாகும். ஆதித்தியா எல் 1 கருவிகள், குறிப்பாக சூரியப் புறவூதா படிமமாக்கத் தொலைநோக்கியும் (SUIT) கட்புல உமிழ்வரி கதிர்நிரல் வரைவியும் (VELC), சூரியப்புறணி உட்கூறுகளையும் இயங்கியலையும் பற்றிய விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளும். சூரியப்புறணியின் நடத்தையை நெருக்கமாககஆய்வுசெய்து, அறிவியலாளர்கள் சூரியப்புறணி சூடாக்கத்துக்கான இயங்கமைப்புகளை விளக்கலாம்.
 2. விண்வெளி வானிலை முன்கணிப்பு:[24] புவித் தொழில்நுட்பத்தையும் அகக் கட்டமைப்பு வளங்களையும் தாக்கவல்ல விண்வெளி வானிலை நிகழ்ச்சிகளை முன்கணிக்க, சூரிய நடத்தையைப்புரிந்துகொள்ளுதல் இன்றியமையாததாகும். இந்தத் திட்டத்தின் தரவுகள், சூரிய சுடர்வீச்சுகளையும் சூரிய உயர் ஆற்றல் துகள் வெளியேற்ற நிகழ்வுகளையும் சூரியப்புறணி பொருண்மை உமிழ்வுகளையும் பற்றி ஆழ்ந்த பார்வையையும் விளக்கத்தையும் தரவல்லன. இந்த பார்வைகள் விண்வெளி வானிலை நிகழ்வை முன்கணித்து, தொடர் அமைப்புகள் செயர்கைக்கோள்கள் மின்கட்டமைப்புகள் மீதான விலைவுகளைத் தவிர்க்கலாம்.
 3. சூரியக் காற்று, காந்தப் புலங்கள் ஆய்வுகள்: ஆதித்திய எல் 1 கருவிகள், குறிப்பாக ஆதித்தியா காற்றுத்துகௐ செய்முறையும் (ASPEX) காந்தமானிகளும் சூரியக் காற்ரின் இயல்புகளையும் கோளிடைத் தடவழிக் காந்தப்புலங்களையும் பற்றியத் துல்லியமான எளிய புரிதலை ஏற்படுத்தலாம்.
 4. புவியின் காலநிலையைப் புரிந்து கொள்ளல்:சூரியனின் செயல்பாடு புவிக் காலநிலையை நெடுங்கால அளவில் தாக்கும்.ஆதித்தியா எல் 1 இன் பவியண்மைப் புறவூதக் கதிர்வீச்சும், புவியின் மேல் வளிமன்டலத்தில் அதன் தாக்கமும் சார்ந்த நோக்கீடுகள், சூரிய மாறுபடுதிறம் புவியின் காலநிலை பாணிகளை தாக்குகிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவும்மிது காலநிலை ஆய்வாளர்களுக்கு இயர்கை நிகழ்வுகளும் மாந்தச் செய்லாக்க நிகழ்வும் காலநிலை மாற்றத்தை முடுக்குகின்றன என்பதினை மதிப்பிடுவதற்கான மதிப்புமிக்க தரவுகளைத் தரும்.
 5. எளிய சூரிய வளிமண்டல படிமமாக்கம்: ஆதித்தியா எல் 1 விண்கலக் கருவித் தொகுதிகள் சூரிய வளிமண்டலத்தின் ஒளிக்கோலத்தில் இருந்து சூரியப்புறனி வரையிலான பல்வேறு அலைநீள நோக்கீடுகளைத் தரும் இந்த ஒருங்கியைந்த் நோக்கீடுகள் சூரிய ந்டத்தையை ஆலும் சிக்கலான செயல்முறைகளைப் பற்றிய பர்வைகளைத் தந்து, சூரிய வளிமண்டல அடுக்குகளிடையே நிகழும் பொருள், ஆற்றலின் பாய்வின் சுவடுகளை அறிய வழிவகுக்கும்.
 6. சூரியப்புறணி பொருண்மை உமிழ்வுகளின் (CMEs) தோற்றத்தையும் இயங்கியலையும் புரிதல்: சூரியப்புறணி பொருண்மை உமிழ்வுகள் ஆற்றல் மிக்க, பேரழிவுகளை விலைவிக்கும் சூரிய நிகழ்வுகளாகும்மாதித்தியா எல் 1 நோக்கீடுகள் இவை எப்படி தொடங்கி படிமலர்கின்றன என அறிவது, அவற்றின் தோற்றத்தையும் நடத்தையையும் பற்றிப் புரிந்துகொண்டு புதுப் படிமங்களை உருவாக்கி மேம்பட்ட முறையில் அவற்றின் உருவாக்கத்தையும் விளைவுகளையும் முன்கணித்து தக்க நடவடிக்கைகளை எடுக்க உதவும்.

ஏவுதல்[தொகு]

PSLV-C57 ஏவூர்தியின் பறத்தல் வரிசைமுறை

2023 செப்டம்பர் 2 அன்று 11:50 மணி (இசீநே) அளவில், முனையச் செயற்கைக்கோள் ஏவூர்தி (PSLV-C57) வழி, சிறீ அரிகோட்டாவில் உள்ள சத்தீசு தவான் விண்வெளி ஆய்வு மையம் (SDSC) இரண்டாம் ஏவுதளத்தில் இருந்து ஆதித்தியா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.[3][4][6][25]

ஏவுநாள் காலையில், ஏவிடத்துக்கு அருகில் அமைந்த காட்சி அரங்கில் பல ஆயிரம் மக்கள் ஏவூர்தி சீறி விண்ணில் பாய்வதைப் பார்க்க குழுமிவிட்டனர், அதேவேளையில் ஒருங்கே , தேசியத் தொலைக்காட்சியிலும் ஏவுதல் பரப்புரையாளர்களின் விவரிப்போடு ஒளிபரப்பப்பட்டது.[4]

ஆதித்தியா எல் 1 விண்கலம்,63 மணித்துளிகள், 20 நொடிகள் பரந்த பிறகு, 12:54 மணி (IST) அளவில் புவி சுற்றும் நீள்வட்ட வட்டணையில் வெற்றிகரமாக நுழைவிக்கப்பட்டது. இந்த வட்டணையின் அளவுகள் 235x19500 கிமீ ஆகும்.

ஆதித்தியா எல் 1 விண்கலம் L1 இலாகிரேஞ்சியப் புள்ளி வட்டணையில் மாற்றி வைப்பதற்கு முன்பு நான்கு புவி ஈர்ப்பு வட்டணைகளில் சுற்றிவரும் நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன. ஏவிய பிறகு, ஆதித்தியா எல் 1 விண்கலம் தன் வரையறுத்த L1 இலாகிரேஞ்சியப் புள்ளி வட்டணையை அடைவதற்கு முன் தோராயமாக 127 நாட்கள் விண்ணில் L1 நோக்கிப் பயணம் செய்யும்.[26]

வட்டணை உயர்த்தல்[தொகு]

முதல் வட்டணை உயர்த்தல்[தொகு]

ஆதித்தியா எல் 1 விண்கலம் 2023, செப்டம்பர் 3 அன்று முதல் புவிசுற்றல் நடவடிக்கையாக, தன் வட்டணையை 245 km (152 mi) க்கு 22,459 km (13,955 mi) ஆக உயர்த்தியது.[27]

இரண்டாம் வட்டணை உயர்த்தல்[தொகு]

ஆதித்தியா எல்1 2023, செப்டம்பர் 5 அன்று இரண்டாம் புவிசுற்றல் நடவடிக்கையாக, தன் வட்டணையை 282 km (175 mi) க்கு 40,225 km (24,995 mi) ஆக உயர்த்தியது.

மூன்றாம் வட்டணை உயர்த்தல்[தொகு]

ஆதித்தியா எல்1 2023, செப்டம்பர் 10 அன்று மூன்றாம் புவிசுற்றல் நடவடிக்கையாக, தன் வட்டணையை 296 km (184 mi) into 71,767 km (44,594 mi) ஆக உயர்த்தியது.

நான்காம் வட்டணை உயர்த்தல்[தொகு]

ஆதித்தியா எல்1 2023, செப்டம்பர் 15 அன்று நான்காம் மூன்றாம் புவிசுற்றல் நடவடிக்கையாக, தன் வட்டணையை 256 km (159 mi) by 121,973 km (75,791 mi) ஆக உயர்த்தியது.

இலாகிரேஞ்சியப் புள்ளி 1 க்குப் பெயரும் தடவழியில் நுழைத்தல்[தொகு]

ஆதித்தியா-L1 2023, செப்டம்பர் 19 அன்று புவி வட்டணையை விட்டு வெளியேறி, இலாகிரேஞ்சியப் புள்ளி 1 க்குப் பெயரும் தடவழியில் நுழையும் இறுதி நடவடிக்கையை வெற்றிகரமாக நிறைவேற்றி அப்புள்ளியை நோக்கிப் பரந்துள்ளது. இது 1.5 மில்லியன் கிமீ தொலவில் உள்ள தன் அறுதி இலக்கிடத்தை அடைய குறைந்தது நான்கு மாதங்கள் பிடிக்கும்.

ஆதித்தியAditya-L1 2023, செபுதம்பர் 30 அன்று புவு ஆட்ப்பாட்டுக் கோளத்திலிருந்து விடுபட்டு, இலாகிரேஞ்சியப் புள்லி 1 நோக்கிய தடவழியில் நுழைந்துவிட்டது.[28]

தடவழித் திருத்த நடவடிக்கை[தொகு]

ஆதித்தியா L 1 2023, அக்தோபர் 6 அன்று தடவழித் திருத்தை(TCM) மேற்கொண்டது. இது 2023 செபுதம்பர் 19 இல் இலாகிரேஞ்சியப் புள்ளி 1 க்குப் பெயரும் நுழைவை(TL1I) நிகழ்த்திய பிறகான தடவழி இயக்கத்தை மதிப்பிட்டதில், தடவழித் திருத்தம் தேவையாகியதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.[28]

திட்டக் கட்டங்களும் நடவடிக்கைகளும்
கட்டமும் செயல்வரிசையும் நாள்/நேரம் நேரம் (இசீநே) அண்மைநிலை சேய்மைநிலை வட்டணைக் காலம் மேற்கோள்கள்
ஏவுதல்
புவி வட்டணயில் நுழைத்தல் 2 செப்டம்பர் 2023 12:54 மதியம் 235 km (146 mi) 19,500 km (12,100 mi) 22 மணி, 46 மணித்துளிகள் [29]
புவிசார் நடவடிக்கைகள்
புவிசார் நடவடிக்கை 1 3 செப்டம்பர் 2023 11:40 முற்பகல் 245 km (152 mi) 22,459 km (13,955 mi) 39 மணி, 20 மணித்துளிகள் [30]
புவிசார் நடவடிக்கை 2 5 செபடம்பர் 2023 3:00 விடியற்காலை 282 km (175 mi) 40,225 km (24,995 mi) 4 நாள், 23 மணி, 30 மணித்துளி [31]
புவிசார் நடவடிக்கை 3 10 செப்டம்பர் 2023 2:30 பின்னிரவு 296 km (184 mi) 71,767 km (44,594 mi) 4 நாள், 23 மணி 45 மணித்துளிகள் [31]
புவிசார் நடவடிக்கை 4 15 செப்டம்பர் 2023 2:00 பின்னிரவு 256 km (159 mi) 121,973 km (75,791 mi) 3 நாள், 23 மணி 45 மணித்துளிகள் [32]
இலாகிரேஞ்சியப் புள்ளி 1 க்குப் பெயரும் தடவழியில் நுழைத்தல் 19 செப்டம்பர் 2023 2:15 பின்னிரவு [33]
தடவழித் திருத்த நடவடிக்கைகள்
தடவழித் திருத்த நடவடிக்கை 6 அக்தோபர் 2023 16 நொ [34]
சம ஈர்ப்பு வட்டணையில் நுழைத்தல்
சம ஈர்ப்பு வட்டணையில் நுழைத்தல் ஜனவரி 2024
ஆதித்தியா L 1 அசைவூட்டம்
புவியைச் சுற்றி
L 1 புள்ளியைச் சுற்றி - சட்டகம் புவியுடன் சுற்றிவருகிறது
       ஆதித்தியா L 1 ·        புவி ·        L 1 புள்ளி

பணிக்குழு[தொகு]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 Somasundaram, Seetha; Megala, S. (25 August 2017). "Aditya-L1 mission". Current Science 113 (4): 610. doi:10.18520/cs/v113/i04/610-612. Bibcode: 2017CSci..113..610S. http://www.currentscience.ac.in/Volumes/113/04/0610.pdf. பார்த்த நாள்: 25 August 2017. 
 2. International Space Conference and Exhibition - DAY 3 (video). Confederation of Indian Industry. 15 September 2021. Event occurs at 2:07:36–2:08:38. பார்க்கப்பட்ட நாள் 18 September 2021 – via YouTube.
 3. 3.0 3.1 3.2 3.3 "Moon mission done, ISRO aims for the Sun with Aditya-L1 launch on September 2". இந்தியன் எக்சுபிரசு. 28 August 2023. பார்க்கப்பட்ட நாள் 28 August 2023.
 4. 4.0 4.1 4.2 4.3 4.4 Pandey, Geeta (2 September 2023). "Aditya-L1: India launches its first mission to Sun". BBC News. பார்க்கப்பட்ட நாள் 2 September 2023.
 5. Sreekumar, P. (19 June 2019). "Indian Space Science & Exploration : Global Perspective" (PDF). UNOOSA. p. 8. பார்க்கப்பட்ட நாள் 30 June 2019.
 6. 6.0 6.1 6.2 Chaitanya, Krishna (13 July 2023). "Mission to Sun 'Aditya-L1' may take-off on August 26". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 13 July 2023.
 7. ISRO [ISRO] (2 செப்டம்பர் 2023). "PSLV-C57/Aditya-L1 Mission: The 23-hour 40-minute countdown leading to the launch at 11:50 Hrs. IST on September 2, 2023, has commended today at 12:10 Hrs. The launch can be watched LIVE on ISRO Website isro.gov.in Facebook facebook.com/ISRO YouTube youtube.com/watch?v=_IcgGYZTXQw… DD National TV channel from 11:20 Hrs. IST" (Tweet). {{cite web}}: Check date values in: |date= (help); Cite has empty unknown parameter: |dead-url= (help)
 8. ISRO [ISRO] (2 செப்டம்பர் 2023). "PSLV-C57/Aditya-L1 Mission: The 23-hour 40-minute countdown leading to the launch at 11:50 Hrs. IST on September 2, 2023, has commended today at 12:10 Hrs. The launch can be watched LIVE on ISRO Website isro.gov.in Facebook facebook.com/ISRO YouTube youtube.com/watch?v=_IcgGYZTXQw… DD National TV channel from 11:20 Hrs. IST" (Tweet). {{cite web}}: Check date values in: |date= (help); Cite has empty unknown parameter: |dead-url= (help)
 9. "ADITYA-L1". www.isro.gov.in. Archived from the original on 3 August 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-08-29.
 10. "SAC Industry Portal". www.sac.gov.in. Space Applications Center, Government of India. பார்க்கப்பட்ட நாள் 2023-09-03.
 11. Teotia, Riya, ed. (2023-08-14). "ISRO shares first images of Aditya-L1 satellite ahead of India's first-ever mission to study the Sun". WION (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-03.
 12. Department of Space. "Notes on Demands for Grants, 2016-2017". செய்திக் குறிப்பு.
 13. "Aditya gets ready to gaze at the sun". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/aditya-gets-ready-to-gaze-at-the-sun/article8212387.ece. 
 14. Gandhi, Divya (13 January 2008). "ISRO planning to launch satellite to study the sun". The Hindu. http://www.thehindu.com/todays-paper/ISRO-planning-to-launch-satellite-to-study-the-sun/article15143000.ece. 
 15. Desikan, Shubashree (15 November 2015). "The sun shines on India's Aditya". The Hindu. http://www.thehindu.com/opinion/the-sun-shines-on-indias-aditya/article7878625.ece. 
 16. "Lok Sabha Unstarred Question No.1972" (PDF). Lok Sabha. 3 July 2019.
 17. "Department Of Space, Annual Report 2019-2020" (PDF). 14 February 2020. Archived (PDF) from the original on 7 October 2021. பார்க்கப்பட்ட நாள் 25 October 2021.
 18. "Aditya-L1 First Indian mission to study the Sun". isro.gov.in. Archived from the original on 10 December 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-06-19.
 19. "ISRO ADITYA-L1".
 20. 20.0 20.1 Desikan, Shubashree (26 November 2017). "Here comes the sun watcher, India's Aditya-L1". The Hindu. http://www.thehindu.com/sci-tech/science/here-comes-the-sun-watcher-indias-aditya-l1/article20942099.ece. 
 21. Goyal, S. K. (April 18, 2018). "Aditya Solarwind Particle EXperiment (ASPEX) onboard the Aditya-L1 mission". Planetary and Space Science 163: 42–55. doi:10.1016/j.pss.2018.04.008. Bibcode: 2018P&SS..163...42G. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0032063317304786. பார்த்த நாள்: May 18, 2020. 
 22. Yadav, Vipin K. (November 8, 2017). "Science objectives of the magnetic field experiment onboard Aditya-L1 spacecraft". Advances in Space Research 61 (2): 749–758. doi:10.1016/j.asr.2017.11.008. https://www.sciencedirect.com/science/article/pii/S0273117717308037. பார்த்த நாள்: May 18, 2020. 
 23. Andrievsky, S. M.; Garbunov, G. A. (1991), "The Shock Wave Heating Mechanism of Pulsating Star Chromospheres", Mechanisms of Chromospheric and Coronal Heating, Berlin, Heidelberg: Springer Berlin Heidelberg, pp. 356–358, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-3-642-87455-0_60, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-642-87457-4, பார்க்கப்பட்ட நாள் 2023-08-31
 24. Balch, Christopher C. (January 2008). "Updated verification of the Space Weather Prediction Center's solar energetic particle prediction model". Space Weather 6 (1): n/a. doi:10.1029/2007sw000337. பன்னாட்டுத் தர தொடர் எண்:1542-7390. Bibcode: 2008SpWea...6.1001B. http://dx.doi.org/10.1029/2007sw000337. 
 25. ISRO [ISRO] (2 செப்டம்பர் 2023). "PSLV-C57/Aditya-L1 Mission: The 23-hour 40-minute countdown leading to the launch at 11:50 Hrs. IST on September 2, 2023, has commended today at 12:10 Hrs. The launch can be watched LIVE on ISRO Website isro.gov.in Facebook facebook.com/ISRO YouTube youtube.com/watch?v=_IcgGYZTXQw… DD National TV channel from 11:20 Hrs. IST" (Tweet). {{cite web}}: Check date values in: |date= (help); Cite has empty unknown parameter: |dead-url= (help)
 26. "PSLV-C57/ADITYA-L1 Mission". www.isro.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-09-02.
 27. isro (2023-09-03). "Aditya L1" (Tweet). பார்க்கப்பட்ட நாள் 2023-09-03. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
 28. 28.0 28.1 "ADITYA-L1". www.isro.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-09-30.
 29. ISRO [isro] (2023-09-02). "The launch of Aditya-L1 by PSLV-C57 is accomplished successfully. The vehicle has placed the satellite precisely into its intended orbit. India's first solar observatory has begun its journey to the destination of Sun-Earth L1 point" (Tweet). {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
 30. ISRO [isro] (2023-09-03). "The satellite is healthy and operating nominally. The first Earth-bound maneuvre (EBN#1) is performed successfully from ISTRAC, Bengaluru. The new orbit attained is 245km x 22459 km. The next maneuvre (EBN#2) is scheduled for September 5, 2023, around 03:00 Hrs. IST" (Tweet). {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
 31. 31.0 31.1 ISRO [isro]. "Aditya-L1 Mission: The second Earth-bound maneuvre (EBN#2) is performed successfully from ISTRAC, Bengaluru. ISTRAC/ISRO's ground stations at Mauritius, Bengaluru and Port Blair tracked the satellite during this operation. The new orbit attained is 282 km x 40225 km. The next maneuvre (EBN#3) is scheduled for September 10, 2023, around 02:30 Hrs. IST" (Tweet). {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help) Missing or empty |date= (help)
 32. ISRO [isro]. "Aditya-L1 Mission: The fourth Earth-bound maneuvre (EBN#4) is performed successfully. ISRO's ground stations at Mauritius, Bengaluru, SDSC-SHAR and Port Blair tracked the satellite during this operation, while a transportable terminal currently stationed in the Fiji islands for Aditya-L1 will support post-burn operations.The new orbit attained is 256 km x 121973 km. The next maneuvre Trans-Lagragean Point 1 Insertion (TL1I) a send-off from the Earth is scheduled for September 19, 2023, around 02:00 Hrs.IST" (Tweet). {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help) Missing or empty |date= (help)
 33. ISRO [isro]. "Aditya-L1 Mission: Off to Sun-Earth L1 point! The Trans-Lagrangean Point 1 Insertion (TL1I) maneuvre is performed successfully. The spacecraft is now on a trajectory that will take it to the Sun-Earth L1 point. It will be injected into an orbit around L1 through a maneuver after about 110 days. This is the fifth consecutive time ISRO has successfully transferred an object on a trajectory toward another celestial body or location in space" (Tweet). {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help) Missing or empty |date= (help)
 34. "ADITYA-L1". www.isro.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-10-08.
 35. "Educational qualification of scientists behind ISRO's solar mission, Aditya L-1". DNA India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-04.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதித்தியா_எல்_1&oldid=3927439" இலிருந்து மீள்விக்கப்பட்டது