சூரிய புயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூரியப் புயல் என்பது சூரியனில் ஏற்படும் ஒரு குலைவாகும். இது புவி, அதன் காந்த மண்டலம் உள்ளடக்கிய முழு சூரிய மண்டலத்தையும் தாக்கும் , மேலும் நீண்ட கால மாற்றமான வ்விண்வெளிக் காலநிலைக்கும் குறுகிய கால விண்வெளி வானிலைக்கும் காரணமாகும்.[1]

வகைகள்[தொகு]

சூரிய புயல்களில் பின்வருவன அடங்கும்.

  • சூரியச் சுடர்வீச்சு என்பது சூரிய வளிமண்டலத்தில் ஏற்படும் பெரிய வெடிப்பு ஆகும். இது, காந்தப்புலக் கோடுகளைத் தாக்கிக் குறுக்கீட்டு அவற்றை மறுசீரமைப்பதனால் ஏற்படுகிறது
  • சூரியப்புறணி பொருண்மை உமிழ்வு என்பது சூரிய மின்ம ஊடகத்தின் மிகப்பெரிய வெடிப்பால் ஏற்படுகிறது. சில வேளைகளில் இது சூரியச் சுடர்வீச்சுகளுடன் தொடர்பு கொண்டுள்ளது.
  • புவியியல் காந்தப் புயல் என்பது சூரிய வெடிப்பின் புவிக் காந்தப்புலத்துடனான ஊடாட்டமாகும்.
  • சூரியத் துகள் நிகழ்வு (SPE) புரோட்டான் அல்லது ஆற்றல் மிக்க துகள்களின் (SEP) புயல் ஆகும்.

மேலும் காண்க[தொகு]

  • சூரியப் புயல்களின் பட்டியல்
  • முனைச் சுடர்வு(அரோரா) அல்லது முனையொளிர்வு என்பது ஒரு கோளின் மேல் வளிமண்டலத்தின் கூறுகளின் இயனியாக்கமும் அதன் கிளர்ச்சியால் தூண்டப்பட்ட ஓர் ஒளிரும் நிகழ்வு ஆகும்.
  • எல்லிய இயற்பியல் சூரியனால் தாக்கப்படும் சூரியன் மற்றும் விண்வெளியின் பகுதி பற்றிய அறிவியல் ஆய்வு.
  • காந்த மேகம் சூரியக் காற்றில் ஒரு தற்காலிக இடையூறு
  • சூரிய சுழற்சி - சூரியப்புள்ளி செயல்பாட்டின் 11 ஆண்டு சுழற்சி
    • சூரிய சுழற்சி 25: தற்போதைய சுழற்சி
  • சூரியனின் கொரோனா பகுதியில் உள்ள பிளாஸ்மா மற்றும் காந்த அமைப்பு
  • சூரியக் காற்று சூரியனில் இருந்து வெளிப்படும் துகள்கள், மின்ம ஊடக ஓட்டமாகும்.
  • பெரும்பாலான சூரிய எரிப்புகள் மற்றும் கரோனல் மாஸ் எஜெக்ஷன்கள் தோன்றும் செயலில் உள்ள பகுதி

மேற்கோள்கள்[தொகு]

  1. Schmieder, Brigitte (November 2018). "Extreme solar storms based on solar magnetic field". Journal of Atmospheric and Solar-Terrestrial Physics 180: 46–51. doi:10.1016/j.jastp.2017.07.018. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S1364682617304261. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரிய_புயல்&oldid=3783633" இலிருந்து மீள்விக்கப்பட்டது