ஒளிக்கோளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூரியனின் கட்டமைப்பு 1-சூரிய உள்ளகம் 2-கதிர்வீச்சு மண்டலம் 3-சுழலியக்க மண்டலம் 4-ஒளிக்கோளம் 5-நிறமண்டலம் 6-ஒளிவட்டம் 7-சூரியப்புள்ளி 8-ஒளிமணிகள் 9-சூரியப் பிழம்புகள் பெயரிடப்படாத சூரியக்காற்று

ஒளிக்கோளம் (Photosphere) என்பது ஒளியை வெளிப்படுத்தும் விண்மீனின் வெளிக்கூட்டைக் குறிக்கிறது. பண்டைய கிரேக்க வேர் சொல்லான φῶς, φωτός/ என்பதின் பொருள் ஒளி என்பதாகும். σφαῖρα என்ற சொல்லின் பொருள் கோளம் என்பதாகும். வெளிச்சத்தை வெளிப்படுத்தும் ஒரு கோளத்தின் மேற்பரப்பு என்பதையே ஒளிக்கோளம் என்ற சொல் குறிக்கிறது.பிளாசுமாவில் ஒளிபுகும் வரை தோராயமாக 2/3 என்ற ஒளியியல் ஆழத்திற்கு சமமான தொலைவு வரைக்கும் ஒரு நட்சத்திரத்தின் மேற்பரப்பில் இது பரவியுள்ளது[1]. வேறுவிதமாக கூறினால், ஓர் ஒளிரும் பொருளின் ஆழமான பகுதியை ஒளிக்கோளம் என்று கூறலாம். பொதுவாக விண்மீன்களை ஒளிரும் பொருள் என்று அழைக்கலாம். ஒருசில அலைநீளம் கொண்ட ஒளியணுக்கள் ஒளிக்கோளத்தின் வழியே ஊடுறுவுகின்றன.

சிடீபன் போல்ட்சுமானின் விதியில் உள்ள பயனுறு வெப்பநிலையால் ஒரு விண்மீனின் மேற்பரப்பு வெப்பநிலை வரையறுக்கப்படுகிறது. நியூட்ரான் நட்சத்திரங்கள் தவிர்த்து பிற நட்சத்திரங்களுக்கு திடநிலை மேற்பரப்பு கிடையாது[2]. எனவே ஒளிக்கோளத்தைக் கொண்டு சூரியனின் அல்லது மற்றொரு விண்மீனின் பார்க்கும் மேற்பரப்பையே விவரிக்கமுடியும்.

உட்கூறுகள்[தொகு]

வேதித் தனிமங்களான ஐதரசனும் ஈலியமும் சூரியனின் முதன்மையான உட்கூறுகளாகும். ஒளிக்கோளத்தில் சூரியனின் நிறையில் அவை முறையே 74.9% மற்றும் 23.8% அளவுக்கு சூரியனில் நிரம்பியுள்ளன. விண்வெளியில் உள்ள கன உலோகங்கள் யாவும் சூரியனின் நிறையில் 2% அளவு உள்ளன. இதில் ஆக்சிசன் தோராயமாக சூரியனின் நிறையில் 1% அளவும், கார்பன் 0.3% அளவும், நியான் 0.2% அளவும், இரும்பு 0.2% அளவும் பெரும்பாலும் கலந்துள்ளன.

சூரியன்[தொகு]

சூரிய வளிமண்டலம்: வெப்பநிலையும் அடர்த்தியும்

சூரியனின் பிரம்மாண்டமான ஒளிக்கோளம் 4,500 மற்றும் 6,000 கெல்வின் வெப்பநிலை (4,230 மற்றும் 5,730 ° செல்சியசு வெப்பநிலை) கொண்டுள்ளது[3]. இது பயனுறு வெப்பநிலை 5777° கெல்வின் அல்லது 5504° செல்சியசு அளவுக்குச் சமமாகும்[4]. சூரியனின் அடர்த்தி 2×10−4 கிலோகிராம்/மீ3;ஆகும். மற்ற விண்மீன்கள் சூடான அல்லது குளிர்ச்சியான ஒளிக்கோளத்தைப் பெற்றுள்ளன[5].

சூரியனின் ஒளிக்கோளம் ஒளிமணிகள் எனப்படும் வெப்பச்சலன செல்களை உட்கூறுகளாகக் கொண்டுள்ளது. பிளாசுமாவின் செல்கள் ஒவ்வொன்றும் 1000 கிலோமீட்டர் விட்டமுள்ளவையாகும் [6]. மையத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் பிளாசுமாவும் அவற்றுக்கிடையே உள்ள குறுகிய இடைவெளிகளில் குளிர்ந்த பிளாசுமாவும் இடம்பிடித்துள்ளன. ஒவ்வொரு ஒளிமணியும் எட்டு நிமிடங்கள் மட்டுமே நிலைத்திருக்கின்றன. இதனால் நிரந்தரமாக தொடர் கொதித்தல் தோற்றம் தோன்றுகிறது. அதிகபசம் 30000 கிலோமீட்டர் விட்ட அளவுள்ள மீயொளிமணிகள் 24 மணிநேர ஆயுளுடன் காணப்படுகின்றன. இப்புள்ளி விவரங்களை மிகக்குறைவாக மற்ற விண்மீன்களில் காணமுடியும்.

இதர அடுக்குகள்[தொகு]

சூரியனின் கட்புலனாகும் வளிமண்டலத்தில் ஒளிக்கோளத்திற்கு மேல் இதர அடுக்குகள் காணப்படுகின்றன. 2,000 கிலோமீட்டர் ஆழமான நிறமண்டலம் (வழக்கமாக வடிகட்டப்பட்ட ஒளி மூலம் காணப்படுகிறது, உதாரணமாக எச்-ஆல்பா) ஒளிக்கோளத்திற்கும் மிகவும் சூடான ஆனால் மிகவும் மெல்லிய ஒளிவட்டத்திற்கும் இடையில் உள்ளது. ஒளிக்கோளத்தின் மேற்பரப்பில் சூரியபிழம்பு, சூரியப்புள்ளிகள் போன்றவை காணப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Carroll; Ostlie (1996). Modern Astrophysics. Addison-Wesley. 
  2. As of 2004, although white dwarfs are believed to crystallize from the middle out, none have fully solidified yet [1]; and only neutron stars are believed to have a solid, albeit unstable [2], crust [3]
  3. The Sun – Introduction
  4. "World Book at NASA – Sun". Archived from the original on 2005-02-17. பார்க்கப்பட்ட நாள் 2005-02-17. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  5. "SP-402 A New Sun: The Solar Results From Skylab".
  6. "NASA/Marshall Solar Physics". நாசா.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளிக்கோளம்&oldid=3547048" இலிருந்து மீள்விக்கப்பட்டது