ச. வெங்கிடரமணன்
ச. வெங்கிடரமணன் (S. Venkitaramanan)(பிறப்பு 1931) ரிசர்வ் வங்கி ஆளுநர், நிதித்துறை செயலாளர் எனப் பல பொறுப்புகளை வகித்தவர்.
வாழ்வும் கல்வியும்[தொகு]
இவர் புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் பிறந்தவர். தந்தை சங்கர நாராயண ஐயர், தாயார் மங்களம். தந்தைக்கு கேரள மாநிலத்தில் ஆசிரியர் பணி. இதனால் இவரது பள்ளி, கல்லூரி படிப்பு கேரளத்திலேயே அமைந்தது. நல்ல மதிப்பெண் பெற்றிருந்தும் குடும்ப வறுமையால், இவரது பொறியியல் கனவு கலைந்தது. கல்லூரி படிப்புக்குப் பின் ஐ. ஏ. எஸ். எழுதி இந்தியாவிலேயே முதல் நபராகத் தேர்வுபெற்றார்.
பணிகள்[தொகு]
மூத்த அரசியல் தலைவர் சி. சுப்பிரமணியம் நிதியமைச்சராக இருந்தபோது அவரது செயலாளராக இருந்து பசுமைப் புரட்சியில் பங்கெடுத்தவர். கருணாநிதி, ராஜிவ்காந்தி ஆகியோருடன் பணியாற்றினார்.
ரிசர்வ் வங்கி ஆளுநராக[தொகு]
1990-1992 ஆம் ஆண்டுகளில் இவர் ரிசர்வ் வங்கி ஆளுநரானார்.[1] அப்போது அந்நிய செலாவணி கையிருப்பு கடுமையாகக் குறைந்திருந்தது. ஒரு இக்கட்டான நிலை ஏற்பட்டிருந்தது. இந்த நெருக்கடியில் சிறப்பாகச் செயல்பட்டு நாட்டை மீட்பதில் ஓரளவு வெற்றியும் பெற்றார். பங்குச் சந்தை ஊழலால் வங்கிகளின் செயல்பாடு நிலைகுலைந்து போயிருந்த சூழலில் இவர் எடுத்த நடவடிக்கையால் ஒரு நிலைத்தன்மை ஏற்பட்டது[2]
குறிப்புகள்[தொகு]
- ↑ http://www.rbi.org.in/scripts/governors.aspx
- ↑ தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்57