ஆற்றிங்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆற்றிங்கல்
Attingal
நகரம்
ஆற்றிங்கல் சந்திப்பு
ஆற்றிங்கல் சந்திப்பு
நாடுஇந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்திருவனந்தபுரம்
ஏற்றம்23 m (75 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்35,648
மொழிகள்
 • ஆட்சி்மலையாளம்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN695101
தொலைபேசிக் குறியீடு0470
வாகனப் பதிவுKL-16

ஆற்றிங்கல் என்பது கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் ஒன்றாகும். இது சிறையிகீழ் வட்டத்திற்கு உட்பட்டது ஆகும். விரிவுபடுத்தப்பட்ட திருவனந்தபுரம் பெருநகர்ப் பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் நகரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆற்றிங்கல் என்ற சொல்லை மலையாளிகள் ஆட்டிங்கல் என்று உச்சரிப்பார்கள்.

இது ஆற்றிங்கல் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

போக்குவரத்து[தொகு]

தேசிய நெடுஞ்சாலை 47, இந்த ஊரின் வழியாக செல்கிறது. 7 கிலோமீட்டருக்கு அப்பால் சிறையின்கீழ் ரயில் நிலையம் உள்ளது. திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கேரள அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இங்கு பிறந்தவர்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஆற்றிங்கல்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆற்றிங்கல்&oldid=3777442" இருந்து மீள்விக்கப்பட்டது