களமசேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நகர அரங்கம்
களமசேரியில் ஒரு பொழுதுபோக்கு பூங்கா

களமசேரி (Kalamassery) இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி நகரில் அமைந்துள்ள ஒரு முக்கிய தொழில்துறை பகுதியாகும். அப்பல்லோ டயர்சு மற்றும் எச்எம்டி போன்ற பெரிய தொழிற்துறை நிறுவனங்கள் இங்குள்ளன. கின்ஃப்ரா உயர்தொழில் நுட்பப்பூங்கா, சிடார்ட் அப் வில்லேச்சு மற்றும் எலெக்ட்ரானிக்சு சிட்டி போன்ற உயர்தொழில் நுட்ப மின்னணுவியல் பூங்காக்களும் இங்கு அமைந்துள்ளன. எர்ணாகுளம் மருத்துவக் கல்லூரி, கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், மற்றும் தேசிய மேம்பட்ட சட்ட ஆய்வுகள் பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களுக்கும் களமசேரியில் உள்ளன. திருக்காட்கரை காட்கரையப்பன் கோயில், யுனிச்சிரா மற்றும் ஏலூர் தொழில்துறை நகரியம் ஆகியவை களமசேரிக்கு அருகில் உள்ளன.

பெரியார் நதி களமசேரி வழியாக பாய்கிறது. உள்ளூர் நிர்வாகத்தில் இந்நகரம் களமசேரி நகராட்சி என்று அழைக்கப்படுகிறது. திருக்காட்கரை, ஏலூர், எடப்பள்ளி, சூர்னிகாரா, எடதலா மற்றும் ஆலுவா போன்றவை களமசேரியின் அண்டை பகுதிகளாகும். கொச்சின் சர்வதேச விமான நிலையம் களமசேரியிலிருந்து 18 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது.

களமசேரி டொயோட்டோ அலுவலகம்

பெயர்க்காரணம்[தொகு]

களமசேரி என்ற பெயர் கலாபசேரியிலிருந்து பெறப்பட்டது. மலையாளத்தில் ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு:[1].பொதுவான பயன்பாட்டில் "கலாபம்" என்றால் மஞ்சள் சந்தன பசை என்றும், இலக்கிய மலையாளத்தில் இது யானை என்றும் பொருள்படும். எச்.எம்.டி.நிறுவனத்திற்கு அருகிலுள்ள கலாபசேரிக்கு, திரிக்காகரா கோயிலில் இருந்து யானைகள் கோவிலில் கொண்டாட்டங்களுக்குப் பிறகு ஓய்வெடுக்க அழைத்துச் செல்லப்பட்டன. காலப்போக்கில் கலாபசேரி களமசேரியாக மாறியது. வரலாற்று ரீதியாக இம்முக்கிய பகுதி நச்லகம் என்று அழைக்கப்பட்டது, இது ஒரு முக்கிய பள்ளிவாசல் இருந்த இடமாகும்[2]. ஆனால் களமசேரி பஞ்சாயத்து உருவாக்கிய நேரத்தில், நச்லகம் அடங்கிய இப்பகுதி, களமசேரியின் வளர்ச்சியின் காரணமாக களமசேரி என்று பெயரிட முடிவு செய்யப்பட்டது. இந்த வளர்ச்சியை அந்த பகுதியில் உள்ள எச்எம்டி போன்ற புதிய தொழில் நிறுவனங்கள் கொண்டு வந்தன. பின்னர், களமசேரியின் விரைவான வளர்ச்சி அது நகராட்சியாக உயர்த்தப்படுவதற்கும் வழிவகுத்தது.

மக்கள் தொகை[தொகு]

2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி[3], களமசேரியின் மக்கள் தொகை 63,176. ஆகும். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 956 பெண்கள்.ஆக இருந்தது. களமசேரியின் சராசரி கல்வியறிவு விகிதம் 84% ஆகும், இது தேசிய சராசரியான 59.5% என்பதை விட கணிசமாக அதிகமாகும்.. இதில் ஆண்கள் கல்வியறிவு 87%, பெண்கள் கல்வியறிவு 82%. என்றும் கணக்கிடப்பட்டது. களமசேரி , மக்கள் தொகையில் 10% பேர் 6 வயதுக்குட்பட்டவர்கள். இந்து மதம் 41% மக்களாலும் இசுலாம் 34% மக்களாலும் பின்பற்றப்பட்டது.

புவியியல்[தொகு]

முக்கியமாக சமீபத்திய வண்டல் மண்ணில் அலுவியம், டெரி பிரவுன் மணல் போன்றவை உள்ளன. சிவப்பு நிற ஒட்டும் மண்ணும் இந்த பகுதிகளில் காணப்படுகிறது. காலநிலை பொதுவாக வெப்பமண்டலமானது, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையிலிருந்து கனமழை சூன் முதல் செப்டம்பர் வரை பொதுவாகப் பொழிகிறது. சராசரி ஆண்டு மழை சுமார் 350 செ.மீ ஆகும் .

பொருளாதாரம்[தொகு]

களமசேரி நகராட்சி அலுவலகம்

பேக்ட் என்ற இந்தியாவின் முதல் பெரிய அளவிலான உர உற்பத்தி அலகு 1943 இல் இங்கு அமைக்கப்பட்டது. 1947 ஆம் ஆண்டில் பேக்ட் உத்யோகமண்டல் 10,000 மெட்ரிக் டன் நைட்ரசனின் நிறுவப்பட்ட திறன் கொண்ட அம்மோனியம் சல்பேட் உர உற்பத்தியைத் தொடங்கியது. பேக்ட் நிறுவனம் ஆகஸ்ட் 15, 1960 இல் கேரள மாநில பொதுத்துறை நிறுவனமாக மாறியது; 1962 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 இல் இந்திய அரசு இந்நிறுவனத்தின் ஒரு பெரிய பங்குதாரராக மாறியது. பேக்ட் நிறுவனப் பொறியியல் பணிகள் 13 ஏப்ரல் 1966 இல் இங்கு நிறுவப்பட்டன. அலுமினியம் ஆக்சைடு சேர்மமும் களமசேரியிலும் தயாரிக்கப்படுகிறது[4]. அப்பல்லோ டயர்சு நிறுவனம் களமசேரியில் உள்ள பிரீமியர் டயர்சு ஆலையை வாங்கியது[5]. எச்.எம்.டி என்றும் அழைக்கப்படும் இந்துசுத்தான் இயந்திர கருவிகள் களமசேரியின் இதயப்பகுதியில் அமைந்துள்ளது. மெர்கெம் மற்றும் கார்போரண்டம் யுனிவர்சல் எலக்ட்ரோ-மினரல்சு பிரிவு அதன் அலுவலகங்களை தெற்கு கலாமாசரியில் நிறுவின. . டொயோட்டா, ரெனால்ட், நிசான், வோக்சுவாகன், ஃபியட் இந்தியா ஆட்டோமொபைல்சு போன்ற பல விற்பனைக்குப் பின்னரான பராமரிப்பு மையங்கள் களமசேரியில் அமைந்துள்ளன. கேரள மாநில மின்சார வாரியம் அல்லது கே.எசு.இ.பி. துணைப்பிரிவு களமசேரியில் உள்ளது. கொச்சி மெட்ரோ காசுடிங் யார்டு மற்றும் மெட்ரோ கிராமம் களமசேரியில் உள்ள எச்எம்டி காலனியில் அமைந்துள்ளது. சயின்சு சிட்டி, சிடார்ட் அப் வில்லேச்சு, கின்ஃப்ரா ஆகியவையும் களமசேரியில் உள்ளன. பெரியாரில் இருந்து நீர் கொச்சி நகரத்திற்கு பல்வேறு குழாய்களால் வழங்கப்படுகிறது, அவை பொதுப் பணித் துறை மற்றும் கேரள நீர் ஆணையத்தால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்தியாவின் முதல் தொலைத் தொடர்பு வளர்ச்சி மையம் களமசேரியில் அமைந்துள்ளது. செயின்ட் ஆண்டனி தொழிற்சாலை , மைக்ரோ டூல்சு, அம்பதான் தொழிற்சாலைகள், வெள்ளப்பள்ளி உற்பத்தித் தொழில், பொட்டேகட்டு ரப்பர்சு பிரைவேட் லிமிடெட், லோகிவிசு, பசாச்சு போன்ற பல சிறிய அளவிலான தொழிற்சாலைகளும் களமசேரியில் உள்ளன. தெற்கு களமசேரியின் ஒரு பகுதி வாசனை திரவியம் தயாரிக்கும் தொழில்கள் மற்றும் நெகிழி மறுசுழற்சி தொழில்கள் நடைபெறும் ஒரு சிறிய அளவிலான தொழில்துறை பகுதியாக உள்ளது, இந்தத் தொழில்கள் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. குடும்பசிறீ எனப்படும் சங்கங்கள் மூலம் பல பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது[6]. வோடபோன் இந்தியாவின் பிரதான தலைமையகம் தெற்கு கலமசேரியில் உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பேரங்காடியான - லாலு பன்னாட்டு பேரங்காடி 2013 இல் இங்கு தொடங்கப்பட்டது, இது களமசேரி நகராட்சியின் ஒரு பகுதியாக இருக்கும் எடப்பள்ளியில் உள்ளது.

கலாமாசேரியில் 3 கொச்சி மெட்ரோ இரயில் நிலையங்கள் உள்ளன: •களமசேரி நகர மெட்ரோ நிலையம் அப்பல்லோ டயர்சு தொழிற்சாலைக்கு முன்னால் களமசேரியில் உள்ள பிரீமியர் சந்திப்பில் அமைந்துள்ளது. •தெற்கு கலமசேரியில் உள்ள கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு அருகில் அமைந்துள்ள குசாட் மெட்ரோ நிலையம் . •கூனம்தாயில் உள்ள ஈ.ஆர்.சி.எம்.பி.யூ லிமிடெட் மில்மா அருகே அமைந்துள்ள பததிபலம் மெட்ரோ நிலையம் .

* குசாட்டின் நிர்வாக அலுவலக வளாகம்


கொச்சி லூலு பேரங்காடி களமசேரி நகராட்சியில் அமைந்துள்ளது.

கேரள வரலாற்று அருங்காட்சியகம்[தொகு]

கேரள வரலாற்று அருங்காட்சியகம் பததிப்பலம் மெட்ரோ நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது[7]. கடந்த இரண்டாயிரம் ஆண்டுகலாக கேரளாவின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை வடிவமைத்த 87 நபர்களின் பிரதிநிதித்துவங்கள் இதில் உள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் 150 பொம்மைகள் உள்ளன, அவை அனைத்தும் கையால் செய்யப்பட்டவை மற்றும் விரிவானவை, இது இந்தியாவின் கலாச்சார மற்றும் இன வேறுபாட்டைக் குறிக்கிறது[8]. பொம்மைகள் குசராத்து முதல் நாகாலாந்து வரையிலும், காசுமீரிலிருந்து கன்னியாகுமரி வரையிலும் உள்ள இளைஞர்களையும் பெண்களையும் குறிக்கின்றன[8]. கடந்த இருநூறு ஆண்டுகளில் இந்திய சமகால கலை (ஓவியம் மற்றும் சிற்பம்) மாதிரிகளை காட்சியகம் சித்தரிக்கிறது. பாரம்பரிய கேரளாவில் நிறைவேற்றப்பட்ட சாகுந்தலம் என்ற பாரம்பரிய சமசுகிருத நாடகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சுவரோவியத்தையும் இந்த காட்சியகம் காட்சிப்படுத்துகிறது. சுவரோவியம், 25 அடி நீளம் மற்றும் 5 அடி அகலம் கொண்ட கேரளாவில் மிகப்பெரிய ஒன்றாகும்.

கொச்சி மேரியோட் விடுதி

கொச்சி அறிவியல் நகரம்[தொகு]

அறிவியல் பூங்கா என்பது கேரள அரசின் ஒரு திட்டமாகும், இது க:அமசேரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ளது. இது ஒரு ஆம்பிதிரையரங்கு மற்றும் ஒரு கோளரங்கம் உள்ளிட்ட குழந்தைகளுக்கான பல்வேறு இடங்களைக் கொண்டுள்ளது.

கல்வி[தொகு]

இராசகிரி பொதுத்துறை பள்ளி
எசு.சி.எம்.எசு மேலாண்மை பள்ளி
இராசகிரி சமூக அறிவியல் கல்லூரி

•கொச்சின் மருத்துவக் கல்லூரி •கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் •மேம்பட்ட சட்ட ஆய்வுகள் தேசிய பல்கலைக்கழகம் •மாதிரி பொறியியல் கல்லூரி •புனித பால் கல்லூரி •சேவியர் மேலாண்மை மற்றும் தொழில்முனைவோர் நிறுவனம் •அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான எல்.பி.எசு மையம் •இராசகிரி சமுக அரிவியல் கல்லூரி •அரசு பாலிடெக்னிக் •லிட்டில் ஃப்ளவர் பொறியியல் நிறுவனம்.

வழிபாட்டு இடங்கள்[தொகு]

•புனித பியசு பேராலயம் , களமசேரி •திரிக்ககாரா கோயில் •புனித சியார்ச்சு பேராலயம், சீபோர்ட் விமான நிலைய சாலை, களமசேரி •நச்லகம் பள்ளிவாசல், தெற்கு களமசேரி •ஐயத்துல் இசுலாம் பள்லிவாசல், சங்கம்புழா நகர் •களமசேரி மகாகணபதி கோயில் •புனித தாமசு மார்த்தோமா தேவாலயம் •புனித மாதா யாக்கோபைட் தேவாலயம் •புனித யூட் நயனா தேவாலயம் •கவுங்கல் காவ் சிறீ துர்கா பகவதி கோயில் பல்லிம்கரா •இப்ராகிம் பள்ளிவாசல், மன்னோபில்லி •இதயதுல் இசுலாம் பள்ளிவாசல், சங்கம்புழா நகர் •புனித யோசப் தேவாலயம் களமசேரி (சமூக தேவாலயம்)

குடியிருப்பு திட்டங்கள்[தொகு]

•ஏபிஏடி பில்டர்சு சில்வர் டியூ என்பது களமசேரியிலுள்ள ஒரு தொகுப்பு வீடு திட்டமாகும் •அசெட் ஓம்சு பிரைவேட் லிமிடெட் என்பது கேரளாவில் உள்ள ஒரு முன்னணி கட்டுமாண நிறுவனம் ஆகும் •டிரீம் பிளவர் மோன்பாராடிசு என்பது களமசேரியிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் ஆகும்

சான்றுகள்[தொகு]

  1. "Multiple meaning for kalabham". பார்க்கப்பட்ட நாள் 2015-09-11.
  2. "Njalakam Juma Masjid, Kalamassery". பார்க்கப்பட்ட நாள் 2015-09-11.
  3. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  4. Kumar, A. Suresh; Nair, E. N. Muraleedharan; Babu, N. R. S. (1992). An Information guide to Kerala's industrial scenario 1992: towards industrial thought & action. Arya Fine Arts. https://books.google.com/books?id=tc7sAAAAMAAJ. பார்த்த நாள்: 23 March 2012. 
  5. Business World. Ananda Bazar Patrika Ltd.. October 1996. பக். 151. https://books.google.com/books?id=haRaAAAAYAAJ. பார்த்த நாள்: 23 March 2012. 
  6. "Basic Services To The Urban Poor (BSUP)". Kudumbashree.org. பார்க்கப்பட்ட நாள் 23 March 2012.
  7. "India Heritage Walk Festival". Archived from the original on 2018-12-28. பார்க்கப்பட்ட நாள் 2019-11-19.
  8. 8.0 8.1 "Dolls Museum". Artandkeralahistory.org. Archived from the original on 8 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 23 March 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=களமசேரி&oldid=3548584" இலிருந்து மீள்விக்கப்பட்டது